பெரம்பலூர் மாவட்டத்தின் இலப்பைகுடிக்காட்டில் புதிய கிளையைத் திறந்துள்ளது கரூர் வைஸ்யா வங்கி

இந்தியாவின் முன்னணி தனியார் துறை வங்கிகளில் ஒன்றான கரூர் வைஸ்யா வங்கி (KVB), பெரம்பலூர் மாவட்டம் இலப்பைகுடிக்காட்டில் இன்று தனது புதிய கிளையைத் தொடங்கியிருக்கிறது.  இதன் மூலம், நாடு முழுவதும் அமைந்துள்ள இவ்வங்கியின் கிளைகளது எண்ணிக்கை 921 ஆக இப்போது உயர்ந்திருக்கிறது.

எஸ்.எஃப். எண். 93-I, ஜமாலி நகர், இலப்பைகுடிக்காடு, குன்னம் வட்டம், பெரம்பலூர் - 621108 என்ற முகவரியில் அமைந்துள்ள இந்தப் புதிய கிளையை, வடக்கலூர் குறுவட்ட வருவாய் ஆய்வாளர்  எம். சிவக்குமார், எம்.எஸ்சி., எம்.எட்., எம்.பில்., பி.ஜி.டி.சி.ஏ. திறந்து வைத்தார்.

விவசாயம் மற்றும் சிறுதொழில் செய்யும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த அதிக மக்கள் வசிக்கும் ஒரு முக்கியப் பகுதியாக இலப்பைகுடிக்காடு விளங்குகிறது. இப்புதிய கிளை, வாடிக்கையாளர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் () மற்றும் விவசாயிகளுக்குத் தேவையான வைப்பு நிதி, கடன், பணப்பரிமாற்றம் மற்றும் மூன்றாம் தரப்பு நிறுவனங்களின் நிதி / காப்பீடு திட்டங்களின் முழுத்தொகுப்பையும்  வழங்கும். மேலும், 150-க்கும் மேற்பட்ட நிதி மற்றும் நிதி சாரா சேவைகளை வழங்கும் 'KVB DLite' மொபைல் செயலி உள்ளிட்ட வங்கியின் சிறப்பான டிஜிட்டல் வங்கிச் சேவைகளும் இவ்வங்கி கிளையில் கிடைக்கும்.

இந்நிகழ்ச்சியில் பேசிய கரூர் வைஸ்யா வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி  ரமேஷ் பாபு, “எமது வங்கியின் வணிகம், வலுவாகவும், சிறப்பாகவும் தொடர்ந்து வளர்ந்து வருகிறது; இந்த வளர்ச்சிக்குக் காரணமான வாடிக்கையாளர்களை நேரடியாக அந்த வளர்ச்சியின் பயன்கள்  சென்றடைய வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். இலப்பைகுடிக்காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள விவசாயப் பெருங்குடி மக்களுக்கும், சிறு வணிகர்களுக்கும் அவர்கள் முழுமையாக நம்பக்கூடிய ஒரு வங்கியின் அவசியம் இருப்பதை நாங்கள் உணர்ந்தோம்.  இந்தப் புதிய கிளை, எங்களின் டிஜிட்டல் சேவைகளுடன் இணைந்து, அவர்கள் தினசரி  சார்ந்திருக்கும் நம்பகமான கூட்டாளியாக விளங்கும்.  தமிழ்நாடு மாநிலமே எங்களின் சொந்த தாயகம்.  இங்கு எங்களின் இருப்பை புதிய கிளைகளின் மூலம் மேலும் விரிவுபடுத்துவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்,” என்று தெரிவித்தார்.

ஜூன் 30, 2026 நிலவரப்படி, கேவிபி-ன் (KVB) மொத்த வணிகம் ₹2,27,267 கோடியாக இருந்தது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (Q1FY27) வங்கியின் நிகர லாபம் இதுவரை இல்லாத அளவாக ₹756 கோடியை எட்டி சாதனை படைத்துள்ளது.

புதிய கிளைகளைத் தொடர்ந்து விரிவுபடுத்துவது மட்டுமின்றி, டிஜிட்டல் வங்கிச் சேவைகளிலும் இவ்வங்கி தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. வங்கியின் மொபைல் செயலியான 'KVB DLite' 150-க்கும் மேற்பட்ட நிதி மற்றும் நிதி சாரா சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு மொபைல் மூலம் மிக எளிதாக வழங்குகிறது.  இதன் மூலம் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் தடையற்ற வங்கிச் சேவைகளைப் பெற முடியும்.

 

Post a Comment

Previous Post Next Post

Contact Form