ராமேஸ்வர் - விஸ்வேஷ்வர் ஆகியோரது சந்திப்பு 21-ம் நூற்றாண்டில் அறிவுக்கு ஒரு புதிய பரிமாணம் என்று பத்திரிக்கையாளர் சுபாஷ் சந்திரா தெரிவித்துள்ளார். காசி தமிழ் சங்கமம் குறித்து அவர் எழுதியுள்ள கட்டுரையில் இதனை தெரிவித்துள்ளார்.
கட்டுரையில் சுபாஷ் சந்திரா மேலும் கூறியிருப்பதாவது:
அறிவையும், கல்வியையும், மரபுகளையும் இன்றைய தலைமுறைக்கு தமிழ்ப் பண்பாட்டுடன் கொண்டு சேர்க்கும் ஒரு புதிய வாய்ப்பைக் காசி கொண்டு வந்துள்ளது. அனைத்து வயதினரும் காசி இந்து பல்கலைக்கழக வளாகத்துக்கு வந்து அறிவுக்கங்கையில் நீராடுகிறார்கள். காசியும், தமிழ்நாடும் கங்கை மற்றும் காவேரி என இரண்டு வளமான நதிகளால் வேறுபடுகின்றன. காவேரி தட்சிண கங்கை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நதிகளின் கரையோர சமூகங்கள் அந்த நதிகளின் புனிதத்தன்மையை வெளிப்படுத்துகின்றன. மேலும், ஒருவகையான கலாச்சார மற்றும் தத்துவ ஒற்றுமையையும் காட்டுகின்றன.
காசி தரிசனம் மற்றும் பாபா விஸ்வநாதரை தரிசனம் செய்யாத ஒவ்வொரு யாத்திரையும் பயனற்றது என்ற உணர்வு தமிழர்களின் மனதில் மிகவும் வலுவாகி உள்ளது. ஹனுமான் காட் பகுதியிலிருந்து கேதார் காட் வரை பரவிய சிறிய தமிழ்நாடு, தலைமுறை தலைமுறையாக இங்கு குடியேறிய தமிழ்க்குடும்பங்கள் இன்றும் தங்கள் கலாச்சாரத்துடன் 'பஜன மடத்தில்' வாழ்ந்து வருகின்றனர். உண்மையில், உத்தரபிரதேசத்தில் நடக்கும் 'காசி தமிழ் சங்கமம்' ஒரு பெரிய கலாச்சார வளர்ச்சியின் ஒரு கட்டமாகும். இந்த அற்புதமான யோசனை, இந்தியாவின் இரண்டு தொலைதூர மாநிலங்களை நெருக்கமாகக் கொண்டுவருவது மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கும் அதில் சேர ஒரு ஈர்ப்பை அளிக்கிறது. 'இந்திய சனாதன கலாச்சாரத்தின் இரண்டு புராண மையங்களான விஸ்வேஷ்வர் மற்றும் ராமேஸ்வரின் இந்த சங்கமம், படைப்பு மற்றும் உணர்ச்சி உறவுகளின் புதிய கதவைத் திறந்து வைக்கும்.இந்த சங்கமம் இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் நவம்பர் 17 முதல் டிசம்பர் 16 வரை நடத்தப்படுகிறது.
19 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட மொழிகள் மற்றும் பேச்சுவழக்குகள் உள்ளன. காசி மற்றும் தமிழ்நாடு ஆகியவை உலகின் பழமையான மொழிகளான சமஸ்கிருதம் மற்றும் தமிழ் ஆகியவற்றின் மையங்களாக உள்ளன. சுப்பிரமணிய பாரதி போன்ற ஜாம்பவான்கள் காசியில் தங்கி, சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழியைக் கற்று, உள்ளூர் கலாச்சாரத்தை வளப்படுத்தியதோடு, தமிழில் சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளனர். தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் மற்றும் உத்தரபிரதேசத்தின் வாரணாசி இடையே பல தமிழ் மன்னர்கள், புகழ்பெற்ற ஆன்மிக துறவிகள், கவிஞர்கள் மற்றும் பிரபலமானவர்கள் புனித யாத்திரை மேற்கொண்டுள்ளனர். இலக்கியத்திலும் காசியின் முக்கியத்துவத்தை 'கலித்தொகை' என்ற செம்மொழி தமிழ்க்கவிதை அற்புதமாகக் காட்டுகிறது.
இவ்வாறு அவர் கட்டுரையில் தெரிவித்துள்ளார்.