வாடிக்கையாளர்களுக்கான விநியோக நேரத்தை விரைவுபடுத்தும் ஸ்கோடா ஆட்டோ இந்தியா


2023இல் கோடியாக் அறிமுகத்தைத் தொடர்ந்து, ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம், இந்தியாவுக்கான லக்ஸ்ரி 4க்கு4 எஸ்யுவிக்கான கூடுதல் ஒதுக்கீட்டை அறிவித்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளருக்கான விநியோக நேரம் இன்னும் விரைவாகும். இந்தப் புதிய கோடியாக் இந்தியாவில் 2022இல் முதன் முதலில் அறிமுகமானது. இருப்பினும், அந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைத்து மகிழுந்துகளும் இரண்டே வாரங்களில் விற்றுத் தீர்ந்தன. அதிகரிக்கும் தேவையைக் கவனத்தில் கொண்டு, நிறுவனம் 2023க்கான இந்திய விநியோகத்தை மேலும் விரிவுபடுத்தி உள்ளது. இதன் காரணமாக ஜரோப்பாவுக்கு வெளியே, ஜெர்மனி மாற்றும் செக் குடியரசு நாடுகளை அடுத்து இந்தியா ஸ்கோடா ஆட்டோவுக்கான மூன்றாவது பெரிய சந்தையாக விளங்குகிறது.

புதிய கரி உமிழ்வு விதிகளுக்கு ஏற்ப 2.0 டிஎஸ்ஐ இவிஓ எஞ்சின் ஆற்றலில் ஸ்கோடா கோடியாக் இயங்குகிறது. முந்தைய மோட்டார்களுடன் ஒப்பிடுகையில் 4.2 சதவிகிதம் அதிகத் திறன் கொண்டதாகும்.140 கிவா (190 பிஎஸ்) மற்றும் 320 என்எம் காரணமாக லக்ஸரி 4க்கு4 வாகனம் 7.8 வினாடிகளில் மணிக்கு 100 கிமீ வேகமெடுக்கும். டோர் எட்ஜ் புரொடெக்டர்கள் எனப்படும் சிம்ப்ளி க்ளெவர் அம்சங்கள் ஸ்கோடா பிராண்ட்களுக்கான கூடுதல் சிறப்பாகும். கதவுகள் திறந்திருப்பதைத் தானியாகவே உணர்த்தும் திறன் கொண்டவை என்பதால், கதவு முனைகள் பள்ளமாவதும், கீறல் விழுவதும் தடுக்கப்படும். காற்றோட்டத்தை அதிகரித்துக், காற்றியக்கவியலை மேம்படுத்தும். பின் இருக்கையில் அமர்ந்திருக்கும் பயணிகள் பாதங்களை வைக்கவும், தலையைச் சாய்க்கவும், தாராள இட வசதி உண்டு. இதன் மூலம் ஒட்டு மொத்தக் குடும்பத்துக்கும் ஏற்ற ஆடம்பர வாகனம் லக்ஸரி 4க்கு4 என்பது உறுதிப்படுகிறது.

தொழில்நுட்பத்துடன் கூடிய கோடியாக் பாரம்பரியம் ஓட்டுனர் திறமையையும், ஆர்வத்தையும் தூண்டிவிட்டுப் புரோக்ரெசிவ் ஸ்டீயரிங்குக்கு உதவுகிறது.  ஒட்டும் சூழல், வாகன வேகம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, குறைந்த அல்லது அதிக வேகத்தில் ஓட்டும் போது ஓட்டுனருக்கு முழுமையான கட்டுப்பாட்டை வழங்குகிறது. மேலும், இதிலுள்ள ஃபர்ஸ்ட்-இன்-செக்மெண்ட் டைனமிக் சேசிஸ் கண்ட்ரோல் (டிசிசி) கோடியாக்கின் இயங்குவியல் டைனமிக்குகளை இன்னும் மெருகேற்றுகிறது. ஈகோ, கம்ஃபர்ட், நார்மல், ஸ்போர்ட்ஸ், ஸ்நோ மற்றும் இண்டிவிஜுவல் என 6 வகையான டிரவிங்க் மோட்களைத் தேர்ந்தெடுக்க ஓட்டுனருக்கு வாய்ப்பு அளிப்பதுடன், டிசிசி 15எம்எம் அளவுக்குச் சஸ்பென்ஷனை ஏற்றவும், இறக்கவும், இயலச் செய்கிறது. 

 தேவைப்படும் போது அனைத்து வகையான சாலை நிலைகளிலும் சீராக இயங்க மேம்பட்ட ஆஃப் ரோட் பொத்தான் உறுதுணையாக இருக்கும். ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் க்ராஷ் பரிசோதிக்கப்பட்ட ஸ்லேவியா மற்றும் குஷாக் கார்களுடன் இணைந்து கோடியாக் காரும் பரிசோதனைகளை நிறைவு செய்கிறது.  பயணிக்கும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 5 நட்சத்திர மதிப்பைப் பெற்றுள்ளது என ஸ்கோடா ஆட்டோ செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form