2026ம் ஆண்டிற்கான இளங்கலை படிப்புகளுக்கான சேர்க்கையைத் தொடங்கிய ஷிவ் நாடார் பல்கலை.



ஷிவ் நாடார் அறக்கட்டளையின் உயர்கல்வி முன்முயற்சியும், தமிழக அரசால் 90 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டம் இயற்றப்பட்ட முதல் மாநிலத் தனியார் பல்கலைக்கழகமும் ஆன ஷிவ் நாடார் பல்கலைக்கழகம் சென்னை, 2026-27 கல்வியாண்டிற்கான இளங்கலை படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டது.  எதிர்கால மாணவர்கள் 15 ஜனவரி 2026 முதல் பிரத்யேக சேர்க்கை இணையதளமான <https://www.snuchennai.edu.in/ug-admissions/> என்ற முகவரி வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இடங்களின் எண்ணிக்கை, தேர்வு முறை, பாடத்திட்டம், கல்வி உதவித்தொகை குறித்த விவரங்கள் இந்த இணையதளத்தில் விரிவாக வழங்கப்பட்டுள்ளன.

வளர்ந்து வரும் கல்வி மற்றும் தொழில்துறை தேவைகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட பல்வேறு இளங்கலை படிப்புகளை இந்தப் பல்கலைக்கழகம் வழங்குகிறது. எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரியின் கீழ் பி.டெக் பிரிவில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல், பயோமெடிக்கல் பொறியியல், வேதியியல் பொறியியல், சிவில் பொறியியல், கணினி அறிவியல் மற்றும் பொறியியல், சிஎஸ்இ (சைபர் செக்யூரிட்டி), சிஎஸ்இ  (இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்), மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல், இசிஇ (விஎல்எஸ்ஐ டிசைன் மற்றும் டெக்னாலஜி), தகவல் தொழில்நுட்பம் மற்றும் இயந்திரப் பொறியியல் ஆகிய பாடப்பிரிவுகள் வழங்கப்படுகின்றன.

கூடுதலாக, வணிகம் மற்றும் மேலாண்மைப் பள்ளியில் பி.காம் மற்றும் பி.காம் (புரொபஷனல் அக்கவுண்டிங்) உள்ளிட்ட இளங்கலை படிப்புகள் வழங்கப்படுகின்றன. ஸ்கூல் ஆஃப் சையன்ஸ் அண்ட் ஹியுமேனிட்டிஸ்-இன் கீழ் பி.எஸ்சி பொருளாதாரம் (தரவு அறிவியல்) பயிற்றுவிக்கப்படுகிறது. ஷிவ் நாடார் ஸ்கூல் ஆஃப் லா அனைத்து கல்விப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களும் சேரக்கூடிய வகையில் ஒருங்கிணைந்த பி.ஏ., எல்.எல்.பி. திட்டத்தை வழங்குகிறது.


அணுகல்தன்மையை உறுதி செய்யும் வகையில், ஷிவ் நாடார் பல்கலைக்கழகம் சென்னை நுழைவுத் தேர்வு, நாடு முழுவதும் 14 மையங்களிலும், கூடுதலாக துபாயில் ஒரு தேர்வு மையத்திலும் நடத்தப்படும். தேர்வு மையங்களின் முழுமையான பட்டியல் - எஸ்என்யுசி சென்னை வளாகம், சென்னை (வளாகம் அல்லாத மையம்), கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, வேலூர், பெங்களூரு, ஐதராபாத், விஜயவாடா, மும்பை, டெல்லி, கொல்கத்தா, திருவனந்தபுரம், துபாய் ஆகும்.

எஸ்என்யுசிஇஇ நுழைவுத் தேர்வின் பல்வேறு கட்டங்கள் 11 ஏப்ரல் 2026 அன்று தொடங்கி, இறுதிக்கட்டம் 9 மே 2026 அன்று நடைபெறும். ஒவ்வொரு கட்டத்திற்கும் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி தகவல் கையேட்டில் வழங்கப்பட்டுள்ளன. விண்ணப்பிக்கும் நேரத்தில் அந்தந்த தேர்வு மையங்களில் எஸ்என்யுசிஇஇ இடங்கள் காலியாக இருப்பதைப் பொறுத்தே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

இது குறித்து ஷிவ் நாடார் பல்கலைக்கழகம் சென்னையின் துணைவேந்தர் டாக்டர் ஸ்ரீமன் குமார் பட்டாச்சார்யா கூறுகையில், "உயர்கல்வி தொடர்ந்து பரிணமித்து வரும் நிலையில், பல்துறை சார்ந்த அறிவு, எதிர்காலத் தேவைகளுக்கான தயார்நிலை, மற்றும் நிஜ உலக சவால்களுடன் ஆழமான தொடர்புடைய இளங்கலை படிப்புகளை உருவாக்குவதில் எங்களது கவனம் தொடர்கிறது. ஷிவ் நாடார் பல்கலைக்கழகம் சென்னையில், மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டி, பெருகி வரும் சிக்கலான உலகளாவிய சூழலில் வெற்றி பெறுவதற்குத் தேவையான திறன்களை அவர்களுக்கு வழங்குவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்" என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form