இந்தியாவில் தனது ஹைட்ரேஷன் போர்ட் ஃபோலியோவை மேலும் வலுப்படுத்தும் கென்வியூ



முழுமையான ஹைட்ரேஷனை வழங்கும் நோக்கில் ஓர்சல் மற்றும் எர்சில் ஆகிய இரு பிராண்டுகளை அடிப்படையாகக் கொண்ட இரட்டை பிராண்டு தந்திரத்தை கென்வியூ இந்தியாவில் அறிவித்துள்ளது. நீரிழப்பு ஒரு முக்கியமான பொது சுகாதார பிரச்சினையாக உருவெடுத்து வரும் நிலையில், வயிற்றுப்போக்கு காரணமான நீரிழப்பும் தினசரி நீரிழப்பும் ஆகிய இரண்டையும் கவனத்தில் கொண்டு அறிவியல் ஆதாரமுள்ள புதுமையான தீர்வுகளை வழங்குவதன் மூலம், இந்திய ஹைட்ரேஷன் பிரிவில் கென்வியூவின் முன்னணி நிலையை இந்த நடவடிக்கை மேலும் வலுப்படுத்துகிறது.

“டபுள் பவர் ஃபார் கம்ப்ளீட் ஹைட்ரோஷன்” என்ற தந்திரத்தின் கீழ், அறிவியல் ஆதாரத்துடன் உருவாக்கப்பட்ட இரண்டு ஹைட்ரேஷன் பிராண்டுகளை நுகர்வோருக்கு கென்வியூ நிறுவனம் வழங்கவுள்ளது.

ஓர்சல், இனி நிறுவனத்தின் ஓஆர்எஸ் போர்ட்ஃபோலியோவுக்கான பிராண்டு பெயராக இருக்கும். இது உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு, வயிற்றுப்போக்கு காரணமான நீரிழப்பை சரிசெய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது. ஓர்சல் ரெடி-டூ-டிரிங் மற்றும் பவுடர் வடிவங்களில் கிடைக்கிறது.

அதேப்போல ஜனவரி 2026 முதல், எர்சில் என்பது நிறுவனத்தின் அறிவியல் ஆதாரமுள்ள எலக்ட்ரோலைட் பானங்கள் போர்ட்ஃபோலியோவின் (முன்னர் ஓர்சல் எலக்ட்ரோலைட் பானங்கள்) புதிய பிராண்டு பெயராக இருக்கும். இது தினசரி ஹைட்ரேஷன் மற்றும் சோர்வு, தளர்ச்சியிலிருந்து மீட்பு பெற உதவுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அறிவியல் ஆதாரமுள்ள ஹைட்ரேஷன் தீர்வுகளை வழங்கும் தனது உறுதியை மேலும் வலுப்படுத்தும் வகையில், கென்வியூ, எர்சிலை புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட கலவையுடன் அறிமுகப்படுத்துகிறது.

இதுபற்றி கென்வியூ இந்தியா நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் மனிஷ் ஆனந்தானி கூறுகையில், நுகர்வோரின் தேவைகளை ஆழமாகப் புரிந்து கொண்டு, வலுவான அறிவியல் அடித்தளத்துடன், ஹைட்ரேஷன் பிரிவில் பல ஆண்டுகளாக முன்னணியில் உள்ளோம். நீரிழப்பு ஒரு முக்கியமான சுகாதார சவாலாக உருவெடுத்து வரும் நிலையில், எங்கள் ஹைட்ரேஷன் போர்ட்ஃபோலியோவை தொடர்ந்து புதுமைப்படுத்தி விரிவுபடுத்தி வருகிறோம். ஓர்சல் மற்றும் எர்சில் ஆகியவற்றை உள்ளடக்கிய எங்கள் இரட்டை பிராண்டு தந்திரம், வயிற்றுப்போக்கு மற்றும் தினசரி ஹைட்ரேஷன் தேவைகளை ஒரே நேரத்தில் பூர்த்தி செய்கிறது. இந்தியாவில் எலக்ட்ரோலைட் பானங்கள் பிரிவு வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அதன் பெரும் வாய்ப்புகளை பயன்படுத்துவதில் நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம், என்றார்.

கென்வியூ இந்தியாவின் செஃல்ப் கேர் வணிகப் பிரிவு தலைவர் பிரஷாந்த் ஷிந்தே கூறுகையில், சமீப ஆண்டுகளில் ஆரோக்கியம் மற்றும் நலன் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இன்று நுகர்வோர் குறைந்த சர்க்கரை, குறைந்த கலோரி கொண்ட விருப்பங்களுடன், உடல் சோர்வு அல்லது உடல்நலக் குறைவு நேரங்களில் தண்ணீரைத் தாண்டி தனிப்பட்ட ஹைட்ரேஷன் தீர்வுகளைத் தேடுகின்றனர். புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட எர்சில் இத்தகைய தருணங்களில் விரைவாக நலமடைய உதவும் ஆரோக்கியமான ஹைட்ரேஷன் தேர்வாகும்” என்றார்.

நிறுவனத்தின் மெடிக்கல் மற்றும் பாதுகாப்பு அறிவியல் தலைவர் தலைவர் டாக்டர் நிகில் பாங்கலே கூறுகையில், “ அதிகரிக்கும் வெப்பம், ஈரப்பதம் மற்றும் உடல் உழைப்பு சூழலில். இன்றைய ஹைட்ரேஷன் என்பது வெறும் தண்ணீர் அல்லது வீட்டு வைத்தியங்களுக்குள் மட்டுப்படவில்லை. நோய் காலத்திலும் தினசரி தேவைகளுக்கும் ஏற்ற அறிவியல் ஆதாரமுள்ள எலக்ட்ரோலைட் தீர்வுகள் குறித்த விழிப்புணர்வு அவசியம்” என்றார்.  


Post a Comment

Previous Post Next Post

Contact Form