இந்தியாவின் முன்னணி சொத்து மேலாண்மை நிறுவனங்களில் ஒன்றான ஆக்சிஸ் மியூச்சுவல் ஃபண்ட், தனது புதிய ஃபண்ட் வழங்கலான 'ஆக்சிஸ் பிஎஸ்இ இந்தியா செக்டார் லீடர்ஸ் இன்டெக்ஸ் ஃபண்ட்' ஐ அறிமுகப்படுத்துகிறது. இது பிஎஸ்இ இந்தியா செக்டார் லீடர்ஸ் இன்டெக்ஸ் இல் உள்ள பங்குகளில் முதலீடு செய்யும் ஒரு திறந்தநிலை இன்டெக்ஸ் ஃபண்ட் ஆகும். இந்த புதிய ஃபண்ட் வழங்கல் ஜனவரி 23, 2026 அன்று சந்தா செலுத்துவதற்காகத் திறக்கப்பட்டு, பிப்ரவரி 06, 2026 அன்று மூடப்படும். இந்த நிதியை கார்த்திக் குமார் (நிதி மேலாளர்) நிர்வகிப்பார். குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ரூ.100 ஆகும். முதலீட்டாளர்களுக்கு நீண்ட கால செல்வத்தை உருவாக்கும் தீர்வை வழங்குவதை இந்த நிதி நோக்கமாகக் கொண்டுள்ளது.
பிஎஸ்இ 500 இன்டெக்ஸின் 21 துறைகள் முழுவதிலும் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களுக்கான பரந்த சந்தை வெளிப்பாட்டை பெறுவதற்கு முதலீட்டாளர்களுக்கு ஒரு விவேகமான வழியை வழங்க இந்த புதிய ஃபண்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, இன்டெக்ஸில் இடம் பெற்றுள்ள 21 துறைகளில் ஒவ்வொன்றிலிருந்தும், ஆறு மாதங்களின் சராசரி தினசரி மொத்த சந்தை மூலதனத்தின் அடிப்படையில், முதல் மூன்று நிறுவனங்கள் இந்த ஃபண்ட் இன் கூறுகளில் சேர்க்கப்படும். இது முதலீட்டாளர்களுக்கு இந்திய பொருளாதாரம் முழுவதும் தம் தம் துறையில் நன்கு நிலைபெற்ற சந்தை தலைவர்களுக்கான ஒரு அணுகலை வழங்குகிறது. முதலீட்டாளர்கள் குறியீட்டில் உள்ள ஆதிக்கம் செலுத்தும் துறைகளுக்கு மட்டுமல்லாமல், பொருளாதாரத்தின் சிறப்பு வாய்ந்த வளரும் துறைகளுக்கும் பங்களிக்க இந்த ஃபண்ட் உதவுகிறது.
ஆக்சிஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பி. கோப்குமார் இந்த ஃபண்ட் இன் தொடக்கத்தைக் குறித்து பேசுகையில், “சந்தைகள் வளர்ந்து சூழலில், முதலீட்டாளர்கள் புதுமையான முதலீட்டுத் தீர்வுகளைத் தேடி வருகின்றனர். ஆக்சிஸ் மியூச்சுவல் ஃபண்டில், தங்கள் துறைகளில் முன்னணியில் இருந்து வரும் நிறுவனங்கள் வலுவான அடிப்படைகளையும், ஏற்றத் தாழ்வுகளை சமாளிக்கும் திறனையும் கொண்டிருப்பதாக நாங்கள் நம்புகிறோம். இந்த ஆக்சிஸ் பிஎஸ்இ இந்தியா செக்டார் லீடர்ஸ் இன்டெக்ஸ் ஃபண்ட், பல்வகைப்படுத்தப்பட்ட ஒரு கட்டமைப்பின் மூலம், தத்தம் துறைகளில் முன்னணி வகிக்கும் மற்றும் நம்பகமான நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கான அணுகலை வழங்குகிறது. இந்தியாவின் வளர்ச்சி சார்ந்த பொருளாதாரம் மற்றும் எதிர்காலத்தில் பங்கேற்க முதலீடார்களை இந்த ஃபண்ட் அனுமதிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்."என்று கூறினார்.