ஓசூர் குணம் மருத்துவமனையில் நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் ஆய்வகம் திறப்பு



இந்தியாவில் அதிவேகமாக வளர்ந்து வரும் டயக்னாஸ்டிக் நிறுவனமான நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் ஆனது, குணம் மருத்துவமனையுடன் இணைந்து, தமிழ்நாட்டின் ஓசூரில் அதிநவீன ஒருங்கிணைந்த டயக்னாஸ்டிக் சென்டர் மற்றும் ஆரோக்கிய மையத்தைத் தொடங்கியுள்ளது.  இது ஓசூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்கள் மற்றும் வட தமிழ்நாட்டின் சில பகுதிகளைச் சேர்ந்த நோயாளிகளுக்கு உயர்தர மற்றும் மேம்பட்ட டயக்னாஸ்டிக் சேவைகளை எளிதாகப் பெறுவதற்கு பெரும் வாய்ப்பாக அமையும்.

இந்த ஆய்வகமானது  டாக்டர் எம்.செந்தில், பொது மற்றும் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை நிபுணர், டாக்டர் கே. பிரதீப் குமார், காது, மூக்கு, தொண்டை மற்றும் எண்டோஸ்கோபிக் மண்டை ஓட்டு அடிப்பகுதி அறுவை சிகிச்சை நிபுணர், டாக்டர் பிரபு தேவ்.கே.பி, எலும்பியல் மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர், டாக்டர் கார்த்திக் பாண்டியன், மருத்துவர் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு நிபுணர், குணம் மருத்துவமனை மற்றும் டாக்டர் ஜி.எஸ்.கே. வேலு, தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

அதிநவீன பரிசோதனைகளுக்கு பொதுவாக நோயாளிகள் ஓசூரிலிருந்து சென்னை அல்லது பெங்களூருக்குப் பயணிக்க வேண்டும். இந்த நீண்ட பயணம் பெரும்பாலும் நோயறிதலை தாமதப்படுத்தும், செலவு அதிகரிக்கும்  மற்றும் நோயாளிகளுக்கு அவர்களது குடும்பத்தினருக்கும் கூடுதல் மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும். இந்நிலையில், உலகத்தரம் வாய்ந்த ஒருங்கிணைந்த டயக்னாஸ்டிக் தேவையை நோயாளிகளின் சொந்த ஊர்களுக்கே கொண்டுவருகிறது.

புதிதாகத் திறக்கப்பட்ட மையம் அதிநவீன தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளது மற்றும் நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் நிறுவனத்தின் தரம் மற்றும் அங்கீகார தரநிலைகளின் கீழ் செயல்படுகிறது.  நியூபெர்க்கின் விரிவான தேசிய மற்றும் சர்வதேச ஆய்வக வலையமைப்பின் ஆதரவுடன், ஓசூர் ஆய்வகம் 24 மணி நேரமும் வீட்டு சேகரிப்பு சேவைகளையும், நோயியல் முதல் கதிரியக்கவியல் வரை விரிவான சோதனைகளையும் ஒரே கூரையின் கீழ் வழங்கும். இதில் இனப்பெருக்கம், மரபுவழி, புற்றுநோயியல், மாற்று நோயெதிர்ப்பு, மற்றும் சிடி, எம்ஆர்ஐ, அல்ட்ராசவுண்ட் மற்றும் டாப்ளர் போன்ற மூலக்கூறு, வளர்சிதை மாற்ற மற்றும் மரபணு சோதனைகள் அடங்கும். டயக்னாஸ்டிக் சேவைகளுக்கு கூடுதலாக, ஓசூர் தொழில்துறை பகுதியில் உள்ள தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் நிறுவன ஊழியர்களுக்காக வடிவமைக்கப்பட்ட விரிவான தடுப்பு சுகாதார பரிசோதனை தொகுப்புகளை ஆரோக்கிய மையம் வழங்கும்.  இந்தத் திட்டங்கள் வாழ்க்கை முறை மற்றும் நாள்பட்ட நோய்களை முன்கூட்டியே கண்டறிவதில் கவனம் செலுத்துகின்றன, மக்கள் தங்கள் ஆரோக்கியத்திற்கு ஒரு முன்னெச்சரிக்கை அணுகுமுறையை எடுக்க உதவுகின்றன.

தொடக்க விழாவில் குணம் மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை மற்றும் எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கே. பிரதீப் குமார் கூறுகையில், "மருத்துவர்களுக்கு, சரியான சிகிச்சை முடிவுகளை வழங்குவதற்கு, சரியான நேரத்தில் மற்றும் துல்லியமான நோயறிதல் மிகவும் முக்கியமானது. தொலைதூர நகரங்களுக்குப் பரிந்துரைப்பதால் ஏற்படும் தாமதங்களைத் தவிர்ப்பதால், ஓசூரில் இந்த ஒருங்கிணைந்த டயக்னாஸ்டிக் ஆய்வகம் தொடங்கப்பட்டிருப்பது மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் இருவருக்கும் ஒரு பெரிய முன்னேற்றமாகும்.  மேம்பட்ட நோயியல் மற்றும் கதிரியக்கவியல் சேவைகள் உள்ளூரிலேயே கிடைப்பதால், எங்களால் விரைவாகவும், அதிக நம்பிக்கையுடனும் மருத்துவ முடிவுகளை எடுக்க முடியும், மேலும் எங்கள் நோயாளிகளுக்கான சிகிச்சையை மேம்படுத்த முடியும்." என்றார்.

நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஜி.எஸ்.கே. வேலு கூறியதாவது: "நோயாளிகளின் சிகிச்சை முடிவுகளைத் தீர்மானிப்பதில், சரியான நேரத்தில் மற்றும் துல்லியமான டயன்காஸ்டிக் சேவைகளுக்கான தேவையானது மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. குணம் மருத்துவமனையுடனான எங்கள் கூட்டாண்மையுடன் ஓசூரில் எங்கள் மையத்தைத் தொடங்கியதன் மூலம், இந்தப் பிராந்தியத்தில் உள்ள நோயாளிகள் முக்கியமான பரிசோதனைகளுக்காக தொலைவில் உள்ள பெருநகரங்களை இனி சார்ந்திருக்க வேண்டியதில்லை என்பதை நாங்கள் உறுதி செய்கிறோம். மேம்பட்ட டயக்னாஸ்டிக் சேவைகளை மக்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே கொண்டு வருவதன் மூலம், விரைவான மருத்துவ முடிவுகளையும், மிகவும் பயனுள்ள, சரியான நேரத்திலான சிகிச்சையையும் வழங்குவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். நோயாளிகளின் எளிதான அணுகலுக்காக, ஓசூரைச் சுற்றி 5-க்கும் மேற்பட்ட மாதிரி சேகரிப்பு மையங்களை அமைக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம், தற்போது தமிழ்நாடு முழுவதும் எங்களிடம் 29 ஆய்வகங்கள், 22 ஆரோக்கிய மையங்கள் மற்றும் 162 மாதிரி சேகரிப்பு மையங்கள் உள்ளன." என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form