தமிழர்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருக்கும் காசி

தென் மாநிலங்கள் மட்டுமின்றி, வட இந்தியாவின் முக்கிய மையமாக திகழும், புகழ் பெற்ற காசியில் தமிழகத்தின் அறிவுக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.

வேத காலத்தில் வேத தத்துவம், அறிவு, தர்க்கம் மற்றும் கல்வி ஆகியவற்றில் காசி முன்னணியில் இருந்தது. இதனால்தான் நவீன காலத்தில், காசி (பனாரஸ்) இந்து பல்கலைக்கழகம் மீண்டும் அதன் பழமையான பெருமையை அடைந்துள்ளது.  தமிழ்நாட்டில் பிறந்து படித்த டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பனாரஸ் (காசி) இந்து பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தராக இருந்தார். காசி இந்து பல்கலைக்கழகத்தில் 1939-ம் ஆண்டுமுதல் 1948-ம் ஆண்டு வரை துணைவேந்தர் பொறுப்பு வகித்ததோடு மட்டுமல்லாமல், மாணவர்களிடையே தனி அடையாளத்தையும் உருவாக்கினார். சம்பளம் வாங்காத நிலையில், மாணவர்களின் பல பிரச்சினைகளை தீர்த்து வைத்தார். சுதந்திர போராட்டத்தின் போது அச்சமின்மை மற்றும் உறுதியின் காரணமாக பிரிட்டிஷ் இராணுவத்தை கல்லூரி வளாகத்தில் இருந்து வெளியேற்றி விட்டார் என காசி இந்து பல்கலைகழகத்தின் இதழியல்துறை பேராசிரியர் டாக்டர் பால லகேந்திரா  கூறியுள்ளார்.

தருமபுரம் ஆதீனத்தைச் சேர்ந்த சுவாமி குமரகுருபரர் இங்குள்ள கேதார்காட்டில் கேதாரேஷ்வர் கோவிலைக் கட்டினார். பின்னர் அவரது சீடர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் காவேரி நதிக்கரையில் காசி விஸ்வநாதர் கோவிலை நிறுவினர். தமிழ்நாட்டில் பிறந்த ராமானுஜ ஆச்சாரியார் போன்ற மகான்களும் காசியிலிருந்து காஷ்மீர் வரை ஆயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்து வந்தார்கள். இன்றும் அவருடைய அறிவே சான்றாகக் கருதப்படுகிறது. சி.ராஜகோபாலாச்சாரி எழுதிய ராமாயணமும், மகாபாரதமும் தெற்கில் இருந்து வடக்கு வரை நாடுமுழுவதும் இன்றும் உத்வேகம் தருகிறது. ஸ்ரீ ராஜேஷ்வர் சாஸ்திரி போன்ற தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த பிரபல வேத அறிஞர்கள் காசியில் தங்கியிருந்தனர். ஹனுமான் காட்டில் வாழ்ந்த ஸ்ரீ பட்டாபிராம சாஸ்திரியையும் காசி மக்கள் நினைவுகூருகிறார்கள். தமிழ்நாட்டின் மகா கவிஞர் ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி நிறைய காலம் காசியில் தங்கியிருந்தார்.

சமீபத்தில் தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் காசி-தமிழ் சங்கமத்துக்காக காசி வந்தார். அவர் தனது பயணத்தின் போது, காசிக்கும், தமிழகத்துக்கும் பல நூற்றாண்டுகள் பழமையான தொடர்பு உள்ளது என்றார்.

 “பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் வெளிப்பட்ட கவிஞர் சுப்ரமணிய பாரதியின் புகழ் வடக்கையும், தெற்கையும் இணைக்கும் மிகப்பெரிய உதாரணம் ஆகும். 20 ஆண்டுகளுக்குப் பிறகு காசிக்கு வந்திருக்கிறேன். இங்கு நிறைய மாறிவிட்டது. கங்கையும் முன்பை விட சுத்தமாக இருக்கிறது. தமிழ்நாட்டின் பல கிராமங்களில் காசி விஸ்வநாதர் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. புதுச்சேரியிலும் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. தமிழகத்துக்கும், காசிக்கும் உள்ள உறவு பழையது என்பதை இது காட்டுகிறது” என்றும் கூறினார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form