காவேரி மருத்துவமனை திருச்சி, 11-வது காவேரி மராத்தான் போட்டிக்கான பிரத்தியேக ஜெர்சி மற்றும் பதக்கங்களை அறிமுகப்படுத்தியது



இந்தியாவின் முன்னணி மருத்துவமனை குழுமத்தைச் சேர்ந்த திருச்சி காவேரி மருத்துவமனை ‘உலக இதய தினத்தை’ முன்னிட்டு ‘உங்களது ஆரோக்கியமான இதயத்திற்காக ஓடுங்கள்’ என்ற கருப்பொருளில் மாபெரும் மாரத்தான் ஓட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. ‘காவேரி மாரத்தான் திருச்சி’ என்ற பெயரில் நடைபெறவிருக்கும் இந்த மாரத்தான் ஓட்டத்தின் 11-வது பதிப்பு  2026 செப்டம்பர் 27 அன்று நடைபெறவுள்ளது. 

இந்த மாரத்தான் ஓட்டத்திற்கான அதிகாரப்பூர்வ ஜெர்சி மற்றும் பதக்கங்களை, காவேரி மருத்துவமனை திருச்சி அறிமுகப்படுத்தியது. செப்டம்பர் 29 அன்று கடைப்பிடிக்கப்படும் ‘உலக இதய தினத்தை’ முன்னிட்டு, இந்த மாபெரும் மாரத்தான் ஓட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பங்கேற்பாளர்களின் விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும் அடையாள அட்டை விநியோகம் 2026 செப்டம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில், காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை, திருச்சி கண்டோன்மென்ட்டில் உள்ள காவேரி கேன்சர் இன்ஸ்டிடியூட்  வளாகத்தில் நடைபெறும். மாரத்தானில் பங்கேற்பவர்கள் தங்களுக்குரிய அடையாள அட்டைகளைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் தவறாமல் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

அன்றாட உடற்பயிற்சியின் அவசியத்தையும் இதய நலனை முன்கூட்டியே தற்காத்து கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தும் வகையில் நடைபெறுகிறது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form