தென் தமிழகத்தில் ஸ்டார் ஹெல்த் தனது நிறுவனத்தை மேலும் வலுப்படுத்த புதிய அலுவலகத்தை துவக்கியது



ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைடு இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட், தென் தமிழகத்தில் தனது சேவையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் - திருநெல்வேலியில் புதிய மண்டல அலுவலகத்தைத் திறப்பதாக அறிவித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையிலுள்ள வன்னாரப்பேட்டை- ஆர்.எம்.கே சில்க்ஸ் எதிரில் உள்ள எண் 10 பி/1கே, முதல் தளத்தில் அமைந்துள்ள இந்த புதிய அலுவலகத்தை, நெல்லையின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் சி. ராபர்ட் புரூஸ் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு திறந்து வைத்தார். ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸின் தமிழ்நாடு வணிகத் தலைவர் பாலாஜி பாபு சி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். இந்நிகழ்ச்சிக்கு ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸின் மதுரை மண்டலத் தலைவர் பி. வினோத் பால் தலைமை தாங்கினார்.

திருநெல்வேலி மண்டலத்தில், ஸ்டார் ஹெல்த் நிறுவனம் 2026 ஆம் நிதியாண்டில் மருத்துவமனையில் அனுமதி, அறுவை சிகிச்சைகள் மற்றும் பிற மருத்துவத் தேவைகளுக்காக 14,000-க்கும் மேற்பட்ட காப்பீட்டு கோரிக்கைகளை ஏற்று ₹76 கோடிக்கும் மேல் தீர்வுகளை வழங்கி வாடிக்கையாளர்களுக்கு உறுதுணையாக இருந்துள்ளது. தனது செயல்பாடுகள் முழுவதிலும், 92% சில்லறை காப்பீட்டுக் கோரிக்கைகள் தீர்வு விகிதம், 84% ரொக்கமில்லா காப்பீட்டுக் கோரிக்கைகள் தீர்வு மற்றும் 92% ரொக்கமில்லா காப்பீட்டுக் கோரிக்கைகள் மூன்று மணி நேரத்திற்குள் தீர்வு செய்வதின் மூலம் இந்நிறுவனத்தின் கோரிக்கை சேவைத் திறன் வலுப்பெற்றுள்ளது.

1,560 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த புதிய திருநெல்வேலி மண்டல அலுவலகத்தில் 24 ஊழியர்கள் பணியாற்றுவர். இந்த அலுவலகம் இம்மண்டலத்தின் கீழ் வரும் ஐந்து மாவட்டங்களில் உள்ள வாடிக்கையாளர் சேவை, முகவர்கள் இணைப்பு மற்றும் மருத்துவக் கூட்டாளிகளுடனான ஒருங்கிணைப்பு ஆகிய பணிகளை மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னரே திட்டமிட்ட மருத்துவமனை சிகிச்சைகளை மேலும் எளிமையாகவும், மன அழுத்தம் இல்லாததாகவும் மாற்ற, ஸ்டார் ஹெல்த் நிறுவனம் 'டாக் டு ஸ்டார்' எனும் பிரத்யேக வழிகாட்டுதல் சேவையை வழங்குகிறது.மருத்துவமனை சிகிச்சைகளைத் திட்டமிடும் வாடிக்கையாளர்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 7200 222 333 என்ற எண்ணில் 'டாக் டு ஸ்டார்' சேவையைப் பெறலாம்.

ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தமிழ்நாடு வணிகத் தலைவர் பாலாஜி பாபு சி கூறுகையில், “தமிழ்நாடானது தொடர்ந்து ஸ்டார் ஹெல்த் நிறுவனத்திற்கு ஒரு முக்கிய சந்தையாக விளங்கி வருகிறது.  தென் தமிழக நெட்வொர்க்கில் திருநெல்வேலி முக்கியப் பங்கு வகிப்பதோடு, சுற்றியுள்ள நகரங்களுக்கும் மாவட்டங்களுக்கும் பரவலான சேவைகளை வழங்கி வருகிறது. இந்த புதிய மண்டல அலுவலகம் இப்பகுதியில் உள்ள வாடிக்கையாளர்கள், முகவர்கள் மற்றும் மருத்துவக் கூட்டாளிகளுடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்ற எங்களுக்கு உதவும். மருத்துவக் காப்பீடு குறித்த விழிப்புணர்வை ஆழப்படுத்துவது, காப்பீட்டு பாதுகாப்பை எளிதில் பெறச் செய்வது மற்றும் குடும்பங்களின் மருத்துவத் தேவைகளின் போது அவர்களுக்கு சரியான நேரத்தில் நம்பகமான ஆதரவு கிடைப்பதை உறுதிசெய்வதுமே எங்களது முதன்மை நோக்கமாகும்.” என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form