இந்தியாவின் முன்னணி ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான எச்டிஎஃப்சி லைஃப், கேரளாவின் திருவனந்தபுரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் முத்தூட் பாப்பச்சன் குழுமத்தின் முதன்மை நிறுவனமான முத்தூட் ஃபின்கார்ப் லிமிடெட் உடன் ஒரு முக்கியக் கூட்டாண்மையை அறிவித்துள்ளது.இந்தக் கூட்டாண்மையின் மூலம், முத்தூட் ஃபின்கார்ப் லிமிடெட் வாடிக்கையாளர்கள் எச்டிஎஃப்சி லைஃப்-ன் விரிவான குழு மற்றும் தனிநபர் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களைப் பெற முடியும். இதில் பாதுகாப்பு மற்றும் நீண்டகால சேமிப்புத் தயாரிப்புகள் அடங்கும், இது வாடிக்கையாளர்களின் நீண்டகால நிதி இலக்குகளை அடைய உதவும். இந்தச் சேவைகள் முத்தூட் ஃபின்கார்ப் லிமிடெட்டின் இந்தியா முழுவதிலும் உள்ள 3,750க்கும் மேற்பட்ட கிளைகள் மற்றும் அதன் டிஜிட்டல் தளம் வழியாக வழங்கப்படும்.
இந்தக் கூட்டாண்மை குறித்து எச்டிஎஃப்சி லைஃப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான விபா பாடல்கர் கூறுகையில்: “முத்தூட் ஃபின்கார்ப் லிமிடெட் உடனான எங்களது இந்த ஒப்பந்தம், ‘2047 ஆண்டுக்குள் அனைவருக்கும் காப்பீடு’ என்ற காப்பீட்டுத் துறையின் இலக்கை அடைவதற்கான ஒரு முக்கியமான படியாகும். முத்தூட் ஃபின்கார்ப் நிறுவனத்தின் பழைய மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் நீண்டகால நிதி இலக்குகளை அடைய உதவும் பயனுள்ள ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களை வழங்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். மேலும், எங்களது எளிமையான டிஜிட்டல் ஒருங்கிணைப்பு செயல்முறை மூலம், முத்தூட் ஃபின்கார்ப் ஊழியர்கள் தங்களுக்குள்ளும் மற்றும் வாடிக்கையாளர்களுக்கும் ஒரு சிறந்த அனுபவத்தை வழங்க முடியும். இந்தக் கூட்டாண்மை மூலம் ஆயுள் காப்பீட்டின் எல்லையை விரிவுபடுத்தவும், நாட்டில் நிதி உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கவும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்றார்.
முத்தூட் ஃபின்கார்ப் லிமிடெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஷாஜி வர்கீஸ் கூறுகையில்: எச்டிஎஃப்சி லைஃப் உடன் இணைவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். முத்தூட் ஃபின்கார்ப் மற்றும் எச்டிஎஃப்சி லைஃப் ஆகிய இரண்டுமே வாடிக்கையாளர்களின் ஆழமான நம்பிக்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டவை. எங்களது 3,750க்கும் மேற்பட்ட கிளைகள், டிஜிட்டல் தளங்கள் மற்றும் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுடனான நெருங்கிய உறவு ஆகியவற்றோடு, HDFC லைஃப்-ன் காப்பீட்டுத் தயாரிப்பு மற்றும் இடர் மேலாண்மை நிபுணத்துவத்தை இணைத்து, இந்தியக் குடும்பங்களுக்கு ஒரு அர்த்தமுள்ள பாதுகாப்பை உருவாக்குவதே இந்தக் கூட்டாண்மையின் நோக்கமாகும்” என்றார்.