தி ரைஸ், கிவ் லைஃப் அறக்கட்டளைகள் இனைந்து நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்



ஐநூறுக்கும் அதிகமான தொழில் நிறுவனங்கள் பங்கேற்கும் "மாபெரும் சென்னை வேலைவாய்ப்பு முகாம்" வரும் ஜூலை 11-ம் நாள் லொயோலா கல்லூரியில் நடைபெறுகிறது. 'தி ரைஸ்', கிவ் லைஃப் அறக்கட்டளைகள் இணைந்து லொயோலா கல்லூரி மற்றும் சென்னையின் மனிதவள மேம்பாட்டுச் சமூகத்தினரின் ஆதரவுடன் இவ் வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன. இது இந்தியாவின் மிகப்பெரிய வேலைவாய்ப்பு முகாமாக அமையும்.

50000-ற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளுடன் தொழில் நிறுவனங்கள் இந்த முகாமிற்கு வருகின்றன. உற்பத்தி துறை சார்ந்து மட்டுமே 216 நிறுவனங்களும், ஐ.டி துறைகள் சார்ந்து 94 நிறுவனங்களும் பங்கேற்கின்றன. வங்கி - நிதிசார் துறைகள், மருத்துவத்துறை, மருந்து பொருட்கள் உற்பத்தி துறை, கல்வி - பயிற்சித் துறைகள், போக்குவரத்து, சுற்றுலா, விற்பனை - சந்தைப்படுத்தல் என பல்துறைப்பட்ட நிறுவனங்களும் பங்கேற்பது சிறப்பு.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் "தி ரைஸ்", "கிவ் லைஃப்" அமைப்புகள் திருநெல்வேலியில் நடத்திய வேலைவாய்ப்பு முகாமில் 8000-ற்கும் மேலான இளைஞர்களுக்கு ஒரே நாளில் வேலைவாய்ப்பு நியமன ஆணை கிடைத்தது. இவ்வாண்டு பிப்ரவரி மாதம் திருச்சியில் நடத்திய முகாமில் 12000 இளையர்களுக்கு வேலை நியமன ஆணை கிடைத்தது. சென்னையில் ஜூலை 11 நடைபெறும் முகாமில் 25000-ற்கும் மேலான இளையர்களுக்கு ஒரே நாளில் வேலை நியமன ஆணை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள முன்பதிவு செய்கிறவர்களுக்கு கட்டணம் எதுவும் இல்லை. அமைப்பாளர்களும் கட்டணம் பெறுவதில்லை, நிறுவனங்களும் கட்டணம் பெறுவதில்லை. ஆனால் முன்பதிவு செய்யாமல் நேரடியாக வருபவர்களிடம் ரூ.100/- பெறப்படும். முன்பதிவு செய்தால் நேர்காணலை எதிர்கொள்ளும் பயிற்சிகள் இணைய வழியில் வழங்குவதோடு, விருப்பப்படும் நிறுவனங்களை தேர்வு செய்து சந்திப்பதற்கான வாய்ப்புகளும் அதிகமாகும். www.givelifes.com என்ற இணையதளம் மூலமாகவோ, +917530088293 எண்களுக்குத் தொடர்பு கொண்டோ முன்பதிவு செய்யலாம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form