டாடா குழுமத்தைச் சேர்ந்த இந்தியாவின் மிகப்பெரிய நகை சில்லறை வர்த்தக பிராண்டான தனிஷ்க் தமிழ்நாட்டின் விழுப்புரத்தில் தனது புதிய விற்பனை நிலையத்தின் பிரம்மாண்டத் தொடக்கத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டு சந்தையில் தனது விற்பனை செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்துவதோடு, மாநிலத்தில் உள்ள தனது மொத்த விற்பனை நிலையங்களின் எண்ணிக்கையை 67 ஆக உயர்த்தியுள்ளது. புதிதாகத் தொடங்கப்பட்ட இந்த விற்பனை நிலையத்தை, தனிஷ்க் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி, சில்லறை வர்த்தக செயல்பாட்டுப் பிரிவு, முனிஷ் சாவ்லா திறந்து வைத்தார். இந்நிகழ்வில், தனிஷ்க் நிறுவனத்தின் தமிழ்நாட்டின் மண்டல வணிக மேலாளர் தினேஷ் குமார் மற்றும் விழுப்புரம் பகுதி வணிக மேலாளர் ராம் கௌதம் ஆகியோர் உடனிருந்தனர். இந்தத் தொடக்க விழாவில் நிறுவனத்தின் முக்கியப் பிரதிநிதிகளும், மதிப்புமிக்க வாடிக்கையாளர்களும் கலந்து கொண்டனர். திறப்பு விழாவைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பும் நடைபெற்றது.
எண் 135. பண்டிட் ஜவஹர்லால் நேரு சாலை, மந்தகரை, மகாலக்ஷ்மி பிளாசா எதிரில், விழுப்புரம், தமிழ்நாடு என விழுப்புரத்தில் மிக முக்கியப் பகுதியில் அமைந்துள்ள இந்த புதிய விற்பனை நிலையம் 5000+ சதுர அடி பரப்பளவில் மிகப்பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. தனிஷ்க் நிறுவனத்தின் நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் வாடிக்கையாளர்களுக்கு முதலிடம் வழங்கும் தத்துவத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த விற்பனை நிலையம் அறிமுகப்படுத்தபப்ட்டுள்ளது. நவீனமயமாகவும், விசாலமாகவும் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையிலும் சிந்தனைப்பூர்வமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விற்பனை நிலையம், இன்றைய வாடிக்கையாளர்களின் மாறிவரும் விருப்பங்களுக்கு ஏற்ப மேம்பட்ட ஷாப்பிங் அனுபவத்தை வழங்குகிறது.
இந்த விற்பனை நிலையத்தின் தொடக்கத்தைக் கொண்டாடும் வகையில், தனிஷ்க் ஒரு சிறப்பு அறிமுகச் சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி வாடிக்கையாளர்கள் தங்க நகைகளின் செய்கூலியில் 20% வரை தள்ளுபடியும்*, அதோடு தங்க நகைகள் வாங்குவதற்கு கிராமுக்கு ₹101 நேரடித் தள்ளுபடியும்* பெறலாம். இச்சலுகை 2026 ஜூன் 18 முதல் 20 வரை 2026 மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும், வாடிக்கையாளர்கள் தனிஷ்க் நிறுவனத்தின் ‘சிறந்த நகை பரிமாற்றப் பலன்’ மற்றும் பிராண்டின் ‘ரிவா கோல்ட் அட்வாண்டேஜ்’ திட்டத்தையும் பயன்படுத்தி கூடுதல் மதிப்பையும் தங்களது விருப்பங்களுக்கேற்ற புதிய நகைகளை வாங்கலாம்.
தங்கத்திலான நேர்த்தியான பிளைன் கோல்டு நகைகள் மற்றும் கண்கவர் வைர நகைகள் முதல் தென்னிந்தியாவின் பாரம்பரிய குந்தன் மற்றும் போல்கி வேலைப்பாடுகள் வரை தனிஷ்க்கின் புகழ்பெற்ற ஆபரண வடிவமைப்புகளிலான நகைகளை இந்த புதிய விற்பனை நிலையம் விற்பனைக்காக காட்சிப்படுத்துகிறது. அன்றாட பயன்பாட்டிற்கான கல் பதித்த நகைகள், திருமண நகைகள், தாலிகொடி, சங்கிலிகள், வளையல்கள் என அனைத்தும் இங்கு கிடைக்கின்றன என்பது விழுப்புரத்தைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒன்றாக அமைந்திருக்கிறது.
மேலும், சோழப் பேரரசின் பெருமைகளைத் தழுவி, அதன் வளமான கலாச்சார பாரம்பரியத்தின் கதைகள், சின்னங்கள் மற்றும் புனைவுகளுக்கு உயிர் கொடுக்கும் உண்மையான வடிவமைப்புகளைக் கொண்ட தனிஷ்க்கின் பிரத்தியேக நகைத்தொகுப்பான ‘சோழா’ இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதனுடன், ஆடம்பரமான நகாஷி தங்க நெக்லஸ் டிசைன்களை முன்னிலைப்படுத்தும் மிகநேர்த்தியான ‘அர்ப்பணம்’ நகைத்தொகுப்பும், தமிழ் பாரம்பரியத்தின் ஆழமான காட்சி மொழியால் ஈர்க்கப்பட்டு வடிவமைக்கப்பட்ட ‘அகல்யம்’ நகைத்தொகுப்பும் இங்கு இடம்பெற்றுள்ளன. இந்த அகல்யம் நகைத்தொகுப்பு காமாட்சி விளக்கு, பாவை விளக்கு, தூக்கு விளக்கு மற்றும் தட்டு விளக்கு உள்ளிட்ட பாரம்பரிய விளக்குகளின் புனிதமான ஒளியை போற்றும் வகையில் உருவாக்கப்பட்டு, காலத்தால் அழியாத கைவினைத்திறனையும் கலாச்சார அடையாளத்தையும் கொண்டாடுகிறது. இவற்றுடன், பன்முகப் பயன்பாடு கொண்ட அன்றாட பயன்பாட்டு நகைகளான ‘கிளாம்டேஸ்’ மற்றும் பல்வேறு இந்திய சமூகங்களின் திருமண மரபுகளைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட பிரத்தியேக திருமண நகைகளின் துணை பிராண்டான ‘ரிவா’ ஆகியவையும் இந்த விற்பனை நிலையத்தில் உள்ளன.
தனிஷ்க்கின் புதிய விற்பனை நிலைய தொடக்கவிழாவில் தனிஷ்க் நிறுவனத்தின் தமிழ்நாட்டின் மண்டல வணிக மேலாளர் தினேஷ் குமார் பேசுகையில், "தமிழ்நாடு எப்போதும் தனிஷ்க் நிறுவனத்திற்கு ஒரு முக்கியமான சந்தையாக இருந்து வருகிறது. எங்களது விழுப்புரம் விற்பனை நிலையத்தின் தொடக்கம் இப்பகுதியில் எங்களது விற்பனை செயல்பாடுகளை வலுப்படுத்துவதில் மற்றொரு விரிவாக்க நடவடிக்கையாகும்.. எங்களது சிந்தனைப்பூர்வமாக வடிவமைக்கப்பட்ட நகைகளையும், மேம்பட்ட சில்லறை விற்பனை அனுபவத்தையும் இங்குள்ள வாடிக்கையாளர்களுக்கு மிக அருகில் கொண்டு சேர்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். தனிஷ்க்கில் நகை வாங்கும் அனுபவத்தை வரையறுக்கும் மிக நேர்த்தியான கைவினைத்திறன், தொடரும் நம்பிக்கை மற்றும் நுணுக்கமான வடிவமைப்புத் திறன் ஆகியவற்றை நாங்கள் தக்கவைத்து கொள்வதோடு, மாறிவரும் வாடிக்கையாளர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த விற்பனை நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது," என்றார்.
"விழுப்புரம் என்பது வலுவான கலாச்சார ஈடுபாடும், நவீன நகைகளை அணிவதில் ஆர்வமும் கொண்ட ஒரு சந்தையாகும். இந்த புதிய விற்பனை நிலையத்தின் அறிமுகம் மூலம் அன்றாட பயன்பாடு, கொண்டாட்டங்கள், திருமணங்கள் மற்றும் பிற விசேஷங்களுக்கான பல்வேறு நகைகளை விழுப்புரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்த்திருக்கிறோம், பாரம்பரியமிக்க வடிவமைப்பு மற்றும் புதுமையான அம்சங்கள் இரண்டும் சரியான விகிதத்தில் கலந்திருக்கும் நகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க நாங்கள் இலக்கு வைத்துள்ளோம். இப்பகுதியில் உள்ள எங்களது வாடிக்கையாளர்களின் வாழ்வின் முக்கிய மைல்கற்கள் மற்றும் கொண்டாட்டங்களில் ஒரு அங்கமாக மாற நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்," என்று விழுப்புரம் பகுதி வணிக மேலாளர் ராம் கௌதம் கூறினார்.
.jpeg)