புதுச்சேரியில் மேம்படுத்தப்பட்ட தனியார் வங்கி கிளையை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்



தென்னிந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் பிராந்தியங்களில் ஒன்றான புதுச்சேரியில், தனது மேம்படுத்தப்பட்ட புதிய கிளையை ரங்கப்பிள்ளை வீதியில் தொடங்குவதன் மூலம் டிபிஎஸ் வங்கி இந்தியா  தனது வங்கி செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இது இப்பகுதி வாடிக்கையாளர்களுக்குச் சேவையாற்றுவதில் நிறுவனம் கொண்டுள்ள அசைக்க முடியாத அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. இந்த கிளையை முதலமைச்சர் என். ரங்கசாமி திறந்து வைத்தார்.

டிபிஎஸ் வங்கி இந்தியா, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள நான்கு கிளைகள் உட்பட தமிழ்நாட்டில் ஏறத்தாழ  260 கிளைகளுடன் இயங்கி வருகிறது. புதுச்சேரியின் பாரம்பரிய மற்றும் வணிக மையப்பகுதியில், 3,200 சதுர அடி பரப்பளவில் இந்த புதிய கிளை அமைக்கப்பட்டுள்ளது முந்தைய புதுச்சேரி கிளையானது தற்போது இந்த புதிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ஒயிட் டவுன்  மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி வாடிக்கையாளர்களுக்குச் சேவைகளை வழங்கும் இக்கிளை, சில்லறை வர்த்தகம், செல்வ மேலாண்மை,  சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மற்றும் வணிக வங்கிச் சேவைகளின் விரிவான தொகுப்பை வழங்குகிறது.

அதிநவீன வசதிகளுடன், வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமையளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வங்கி வளாகம், டிஜிட்டல் தொழில்நுட்பத் திறன்களையும், தனிப்பயனாக்கப்பட்ட வாடிக்கையாளர் உறவு நிர்வாகத்தையும்  ஒன்றாக இணைக்கிறது. இது தனிநபர்கள், தொழில்முனைவோர், தொழில் வல்லுநர்கள், சிறு வணிகர்கள் மற்றும் செல்வமிகுந்த வாடிக்கையாளர்களுக்கு வங்கியியல் நடைமுறைகளை மிகவும் எளிதாகப் பெறமுடிந்தாகதவும், சுலபமாக பயன்படுத்தக் கூடியதாகவும் மாற்றும் டிபிஎஸ் வங்கியின் நோக்கத்தைப் பிரதிபலிக்கிறது.


உற்பத்தி, வர்த்தகம், சுற்றுலா, மருத்துவம் மற்றும் கல்வி எனப் பல்வேறு துறைகளை உள்ளடக்கியிருக்கும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின்  கட்டமைப்பைக் கொண்டுள்ள புதுச்சேரி, டிபிஎஸ் வங்கி இந்தியாவின் மிக முக்கியமானதொரு சந்தையாகும். இப்பகுதி மக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களின் பொருளாதார இலக்குகளை அடைய மிகவும் மேம்பட்ட நிதிச்  சேவைகளை நாடுவதால், இங்கு சில்லறை வர்த்தகம், செல்வ மேலாண்மை மற்றும் சிறு வணிக வங்கிச் சேவைகளுக்கான தேவை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இது குறித்து டிபிஎஸ் வங்கி இந்தியாவின் நேஷனல் டிஸ்ட்ரிபியூஷன் பிரிவின் மேனேஜிங் டைரக்டர் மற்றும் தலைவர், சுதர்சன் சாரி பேசுகையில், "சம்பளம் பெறும் பணியாளர்கள், தொழில்முனைவோர், சிறு வணிகங்கள் முதல் பெரும் முதலீட்டாளர்கள், வசதி படைத்தவர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வரை பல்வேறு தரப்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்ட ஒரு சிறந்த தளமாகப் புதுச்சேரி விளங்குகிறது. வாடிக்கையாளர்களின் அன்றாட வங்கிச் செயல்பாடுகள், செல்வ உருவாக்கம், வணிக விரிவாக்கம் மற்றும் சர்வதேச அளவில் மேற்கொள்ள வேண்டிய  தேவைகள் என அவர்களின் தனிப்பட்ட மற்றும் வணிகப் பயணங்களுக்குத் துணைபுரியும் ஒருங்கிணைந்த நிதிச் சேவைகளுக்கான தேவை இங்கு அதிகரிப்பதைக் காண்கிறோம்.” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், மாநகரின் முக்கிய வணிகப் பகுதியான ரங்கப்பிள்ளை வீதியில் முக்கிய இடத்தில் அமைந்துள்ள இந்த புதிய கிளை, இச்சந்தையில் எங்களது வாடிக்கையாளர்களுடனான உறவை மேலும் ஆழப்படுத்த உதவும். எங்களது அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்ப வசதிகளுடன் இணைந்து, சில்லறை வர்த்தகம், சொத்து மேலாண்மை மற்றும் வணிக வங்கிச் சேவைகளில் டிபிஎஸ் வங்கியின் முழுமையான பலன்களையும் வாடிக்கையாளர்களுக்குத் தடையின்றி வழங்க இக்கிளை உதவும்," என்றார்.

டிபிஎஸ் வங்கி இந்தியாவின் தனித்துவமான சிறப்பம்சம் என்னவென்றால், அது வாடிக்கையாளர்களின் நிதிப் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் துணைநிற்கும் 'செல்வ மேலாண்மை தொடர்  முன்மாதிரி' கட்டமைப்பைக் கொண்டுள்ளது. 'டிபிஎஸ் ஆஸ்பயர்' 'டிபிஎஸ் ட்ரெஷர்ஸ்' மற்றும் 'டிபிஎஸ் ட்ரெஷர்ஸ் பிரைவேட் க்ளையண்ட்'  ஆகியவற்றின் மூலம், வளர்ந்து வரும் செல்வந்தர்கள், அதிக நிகர சொத்து மதிப்புடைய நபர்கள் மற்றும் மிக அதிக சொத்து மதிப்புடைய வாடிக்கையாளர்களுக்குத் தனிப்பயனாக்கப்பட்ட செல்வ மேலாண்மைச் சலுகைகள், பிரத்தியேக உறவு அதிகாரிகள் மற்றும் டிஜிட்டல் சேவைகளை வங்கி வழங்குகிறது.

· டிபிஎஸ் ஆஸ்பயர்  

ஒட்டுமொத்தக் கணக்கு மதிப்பு  ₹10 லட்சம் அல்லது சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச மாதாந்திர இருப்பாக ₹2 லட்சம் பராமரிக்கும் வாடிக்கையாளர்களுக்கானது. இதன் வசதிகளில் ஆஸ்பயர் டெபிட் கார்டில் பூஜ்ஜிய அந்நிய செலாவணி மாற்று விகிதக் கட்டணம் மற்றும் ₹2 லட்சம் முதல் ₹50 லட்சம் வரையிலான கணக்கு இருப்புத் தொகைக்கு ஆண்டுக்கு 5% வரை வட்டி விகிதம் ஆகியவை அடங்கும்.

· டிபிஎஸ் ட்ரெஷர்ஸ் 

₹30 லட்சம் மற்றும் அதற்கு மேல் ஒட்டுமொத்தக் கணக்கு மதிப்பு கொண்ட வாடிக்கையாளர்களுக்கானது. 'டிபிஎஸ் ட்ரெஷர்ஸ் பிரைவேட் க்ளையண்ட்' என்பது ₹6 கோடிக்கும் அதிகமான கணக்கு மதிப்புடைய மிக உயர்தர வாடிக்கையாளர்களுக்கான பிரத்தியேகச் சேவையாகும்.

சர்வதேச அளவில் தொடர்பில் இருக்கும்   வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக டிபிஎஸ் வங்கி பணப் பரிமாற்றம், சொத்து மேலாண்மை, முதலீட்டு சேவைகள்  மற்றும் எஃப்சிஎன்ஆர்(பி)  டெபாசிட்டுகளை உள்ளடக்கிய ஒரு விரிவான என்ஆர்ஐ வங்கிச் சேவையை வழங்குகிறது. டிபிஎஸ் வங்கி இந்தியா தற்போது 3 முதல் 5 ஆண்டுகள் வரையிலான கால அவகாசம் கொண்ட அமெரிக்க டாலர் எஃப்சிஎன்ஆர்(பி) டெபாசிட்டுகளுக்கு ஆண்டுக்கு 5.6% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது. தகுதியுடைய வெளிநாடு வாழ் இந்தியர்கள் வெளிநாடுகளில் இருந்தபடியே டிஜிட்டல் முறையில் இக்கணக்குகளைத் தொடங்கலாம்.

புதுச்சேரியில் தங்கநகைக் கடன்களுக்கானதேவையும் அதிகமாக உள்ளது. டிபிஎஸ் வங்கியின் மேம்பட்ட டிஜிட்டல்மயமாக்கல், வலுவான பாதுகாப்பு மேலாண்மை நடைமுறைகள்  மற்றும் நெறிமுறைகளைப் பயன்படுத்தி, விவசாயம் மற்றும் விவசாயம் சாரா தங்கநகைக் கடன்களை வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப வங்கி வழங்குகிறது. கடன் வாங்குபவர்கள் தங்களின் பணப்புழக்கத் தேவைகளுக்கு ஏற்ப வசதியான   திருப்பிச் செலுத்தும் முறைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

வாடிக்கையாளர்கள் கணக்குத் தொடங்குவது முதல், நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்து எளிமையான முறையில் முதலீடுகளை மேற்கொள்ள உதவும் 'டிபிஎஸ் டிஜிபோர்ட்ஃபோலியோ'  வரை, தங்களின் அன்றாட வங்கிச் சேவைகளை 'டிஜிபேங்க்' செயலி மூலம் மிக எளிதாக பயன்படுத்த முடியும்.

புதுச்சேரியின் வலுவான தொழில்முனைவோர் மற்றும் எம்எஸ்எம்இ கட்டமைப்பு வணிக வங்கித் துறையில் பெரும் சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது. டிபிஎஸ் வங்கி இந்தியா குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தேவைகளுக்கு ஏற்ப சொத்தின் மீதான கடன் , ஓவர் டிராப்ட் வசதிகள் மற்றும் குறு, சிறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத நிதி அறக்கட்டளை  திட்டத்தின் கீழ் கடன்கள் உள்ளிட்ட விரிவான நிதி உதவிகளை வழங்குகிறது. மேலும், நிறுவனங்கள் தங்களின் அன்றாடச் செயல்பாடுகளை திறம்பட நிர்வகிக்கவும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வணிகத்தை விரிவுபடுத்தவும் 'டிபிஎஸ் ஐடியல்' போன்ற டிஜிட்டல் தளங்களின் ஆதரவோடு செயல்பாட்டு மூலதன நிதி, வர்த்தக நிதி, ரொக்க மேலாண்மை, வெளிநாட்டு நாணய மாற்று மற்றும் ஊதியப் பட்டுவாடா போன்ற பல்வேறு வணிக வங்கிச் சேவைகளை இங்கு பெற முடியும்.






Post a Comment

Previous Post Next Post

Contact Form