செளகரியமான தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனமான விளங்கும் ஸ்கெச்சர்ஸின் ஆதரவுடன், அல்ட்ரா எண்டூரன்ஸ் வீரர் கார்த்திக் ஜோஷி, மலைப்பகுதிகள், தேசிய நெடுஞ்சாலைகள், நகரங்கள் மற்றும் பல்வேறு நிலப்பரப்புகளைக் கடந்து, 67 நாட்களில் 4200 கிலோமீட்டர் தூரத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளார்.கார்கில் போர் நினைவிடத்தில் தொடங்கிய இந்த வரலாற்றுப் பயணம், இந்தியாவின் தென்முனையான கன்னியாகுமரியில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிகவும் சவால்மிக்க நீண்டதூர ஓட்டப் பயணங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
இந்தச் சவாலான பயணத்தின் போது, கார்த்திக் உயரமான மலைப்பாதைகள், தேசிய நெடுஞ்சாலைகள், நகர்ப்புறச் சாலைகள் மற்றும் மாறுபட்ட வானிலைச் சூழல்களைக் கடந்து பல்வேறு நிலப்பரப்புகளில் ஓடி தனது உடல் மற்றும் மன உறுதியின் எல்லைகளைச் சோதிக்கும் வகையில் இந்த அரிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இந்த முழுப் பயணத்திலும், கார்த்திக் ஜோஷி ஸ்கெச்சர்ஸ் பெர்ஃபார்மன்ஸ் காலணிகளை அணிந்து ஓடினார். குறிப்பாக, ஸ்கெச்சர்ஸ் ஏரோ பர்ஸ்ட் மற்றும் ஸ்கெச்சர்ஸ் ஏரோ ஸ்பார்க் காலணிகளின் மேம்பட்ட ஓட்டத் தொழில்நுட்பத்தை சார்ந்து, நாட்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிகவும் கடினமான சகிப்புத்தன்மை வாய்ந்த சவால்களில் ஒன்றை வெற்றிகரமாக எதிர்கொண்டு நிறைவு செய்தார்.
ப்ராஜெக்ட் கே2கே' வெற்றிகரமாக நிறைவடைந்தது, இந்தியாவின் வளர்ந்து வரும் நீண்டதூர சகிப்புத்தன்மை விளையாட்டுத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. மேலும், மனித மனஉறுதி மற்றும் விடாமுயற்சிக்கு எல்லைகளே இல்லை என்பதை இந்தச் சாதனை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது. 'ப்ராஜெக்ட் கே2கே' மூலம், இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஓட்டக் கலாச்சாரத்திற்கு தனது உறுதியான ஆதரவை ஸ்கெச்சர்ஸ் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், அடிமட்ட ஓட்ட சமூகங்களை ஊக்குவிப்பதுடன், உடல்தகுதி மற்றும் எண்டூரன்ஸ் விளையாட்டுகளில் அதிகளவிலான பங்கேற்பையும் நிறுவனம் ஊக்குவித்து வருகிறது.
இந்தச் சாதனைப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ததை குறித்து பேசிய கார்த்திக் ஜோஷி: "கன்னியாகுமரியில் இலக்கை அடைந்த அந்தத் தருணத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இந்தப் பயணம் ஒவ்வொரு நாளும் என்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சோதித்தது. கார்கிலின் மலைப்பகுதிகளிலிருந்து கன்னியாகுமரிக்குச் செல்லும் சாலைகள் வரை, ஒவ்வொரு கிலோமீட்டரும் உறுதியையும் தன்னம்பிக்கையையும் கோரியது. ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் மற்றும் பல்வேறு நிலப்பரப்புகளைக் கடந்த இந்தப் பயணத்தில், ஸ்கெச்சர்ஸின் ஏரோ சீரிஸ் காலணிகள் எனது பயணத்தின் பிரிக்க முடியாத அங்கமாக இருந்தன. அவை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து ஓடுவதற்கு தேவையான சௌகரியம், மென்மையான பாதுகாப்பு மற்றும் உறுதியான ஆதரவை வழங்கின. இந்தப் பயணத்தை வெற்றிகரமாக முடிக்க நாடு முழுவதும் உள்ள மக்களிடமிருந்து கிடைத்த ஊக்கமும், இந்த ஓட்டத்தின் நோக்கமும் எனக்கு தொடர்ந்து முன்னேறுவதற்கான உந்துசக்தியாக இருந்தது. கார்கில் முதல் கன்னியாகுமரி வரையிலான இந்தப் பயணத்தை நிறைவு செய்தது என் நீண்டநாள் கனவை நனவாக்கியுள்ளது. இந்த மறக்க முடியாத அனுபவம் முழுவதும் எனக்குத் துணையாக இருந்த ஸ்கெச்சர்ஸ் நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
இந்தச் சாதனை குறித்து ஸ்கெச்சர்ஸ் சவுத் ஏஷியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ராகுல் வீரா பேசுகையில், "கார்கில் முதல் கன்னியாகுமரி வரையிலான ஓட்டப் பயணத்தை கார்த்திக் வெற்றிகரமாக நிறைவு செய்திருப்பது ஒரு மகத்தான சாதனையாகும். விடாமுயற்சி, ஒழுக்கம் மற்றும் அசைக்க முடியாத மனஉறுதியால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு அவரது பயணம் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. வழக்கமான எல்லைகளைத் தாண்டி புதிய சவால்களை ஏற்கும் வீரர்களுக்கு ஆதரவளிப்பதில் ஸ்கெச்சர்ஸ் எப்போதும் பெருமை கொள்கிறது. கார்த்திக்கின் இந்தப் பயணம் அந்த மதிப்புகளை முழுமையாக பிரதிபலிக்கிறது. இந்த அபாரமான சவாலின் ஒவ்வொரு கட்டத்திலும், நீண்ட தூர ஓட்டங்களுக்கு ஏற்ற இலகுரக வடிவமைப்பு, சிறந்த அதிர்வுகளைத் தாங்கும் திறன், வேகமான செயல்திறன் மற்றும் உயர்ந்த சௌகரியத்தை வழங்கும் எங்களின் ஸ்கெச்சர்ஸ் ஏரோ சீரிஸ் ஓட்டக் காலணிகளை அவர் தேர்ந்தெடுத்தது எங்களுக்கு கூடுதல் பெருமையை அளிக்கிறது” என்றார்.
