புன்னகை மாற்றச் சிகிச்சைகளில் முன்னணி பல் சீரமைப்பு நிறுவனமாக விளங்கும் மேக் ஓ டூத்சி சென்னை தாம்பரத்தில் தனது புதிய கிளினிக்கைத் தொடங்கி, நகரில் தனது சேவைகளை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. தாம்பரத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த கிளினிக்கிற்கு, டாக்டர் நிவேதினி டி. மற்றும் டாக்டர் சேரன் ஆகியோர் தலைமையேற்கின்றனர். இவர்கள் இருவரும் இணைந்து 17 ஆண்டுகளுக்கும் மேலான பல் மருத்துவ அனுபவம் பெற்றவர்கள். இந்த கிளினிக்கில் கண்ணுக்குப் புலப்படாத அலைய்னர்கள் மூலம் புன்னகை மாற்றச் சிகிச்சை, பிரேஸ்கள் பல் உள்வைப்புச் சிகிச்சை வேர் சிகிச்சை உள்ளிட்ட முழுமையான பல் மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன. இந்த கிளினிக் எண்: 29/3, தரைத்தளம், ஜிஎஸ்டி சாலை, கடப்பேரி, மேற்கு தாம்பரம், சென்னை - 600045 என்ற முகவரியில் அமைந்துள்ளது.
டாக்டர் நிவேதினி டி. 8 ஆண்டுகளுக்கும் மேலான எண்டோடான்டிக்ஸ் துறையில் நிபுணத்துவம் பெற்றவர். 1,500-க்கும் மேற்பட்ட பல் வேர் சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளதுடன், மைக்ரோ-எண்டோடான்டிக்ஸ் துறையிலும் மேம்பட்ட பயிற்சி பெற்றுள்ளார். டாக்டர் சேரன், ஆர்த்தோடான்டிக்ஸ் மற்றும் அலைய்னர் சிகிச்சைத் துறையில் 9 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். மேலும், சிறப்பு ஆர்த்தோடான்டிக் கிளினிக்கில் அலைய்னர் ஆலோசகராக பணியாற்றிய அனுபவமும் பெற்றுள்ளார்.
டூத்ஸியின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி டாக்டர் அர்பி மேத்தா கூறுகையில், “எந்தவித சமரசமும் செய்யாமல், தொழில்முறை பல் சீரமைப்பு சிகிச்சையை அனைவரும் எளிதில் பெறும் வகையில் வழங்குவதே எங்கள் நோக்கமாகும். தாம்பரம் மையத்தில், அனுபவமிக்க பல் சீரமைப்பு நிபுணர்களின் வழிகாட்டுதலின் கீழ், அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் சிகிச்சைத் திட்டங்கள் வழங்கப்படுகின்றன. மேலும், டிஜிட்டல் கண்காணிப்பு வசதியுடன் கூடிய இந்த சிகிச்சைகள், உறுதியான பலன்களையும் நோயாளிகளுக்கு வசதியான சிகிச்சை அனுபவத்தையும் வழங்குகின்றன” என்றார்.
இந்த புதிய கிளினிக், நாடு முழுவதும் தனது நேரடி சேவை வலையமைப்பை மேலும் வலுப்படுத்தி, வளர்ந்து வரும் நகர்ப்புற சந்தைகளில் உயர்தர பல் மருத்துவச் சேவைகளை பொதுமக்கள் எளிதில் பெறும் வாய்ப்பை மேம்படுத்தும் நிறுவனத்தின் தொடர்ச்சியான முயற்சியில் மற்றொரு முக்கிய மைல்கல்லாகும். மேம்பட்ட தொழில்நுட்பம், நவீன மருத்துவ உள்கட்டமைப்பு, கடுமையான பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையிலான சிகிச்சை முறைகள் மூலம், நோயாளிகளை மையமாகக் கொண்ட உயர்தர பல் மருத்துவச் சேவைகளை இந்நிறுவனம் தொடர்ந்து வழங்கி வருகிறது.இந்த கிளினிக்கில் நெகிழ்வான ஈஎம்ஐ வசதி, இலவச புன்னகை ஆலோசனை மற்றும் ஆன்லைன், ஆஃப்லைன் ஆகிய இரு முறைகளிலும் எளிதாக முன்பதிவு செய்யும் வசதி வழங்கப்படுகிறது.
