உலக கூட்டுறவு கண்காணிப்பு அறிக்கை 2023-ல் மீண்டும் “இப்கோ” முதலிடம்



 ‘இப்கோ’ எனப்படும் இந்திய உழவர் உரக் கூட்டுறவு லிமிடெட் கடந்த ஆண்டிலிருந்து அதன் நிலையைத் தக்கவைத்து, உலகின் சிறந்த 300 கூட்டுறவு நிறுவனங்களில் நம்பர் 1-வது இடத்தைப் பிடித்துள்ளது. தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விற்றுமுதல் விகிதத்தின் அடிப்படையில் தரவரிசை அமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு இப்கோ குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கிறது என்பதை இது குறிக்கிறது.  

சர்வதேச கூட்டுறவுக் கூட்டணி வெளியிட்ட 12-வது உலக கூட்டுறவு கண்காணிப்பு அறிக்கையின் 2023 பதிப்பின் படி, இது நிறுவனத்தின் வருவாயை நாட்டின் செல்வத்துடன் தொடர்பு படுத்துகிறது. ஒட்டுமொத்த விற்றுமுதல் தரவரிசையில் கடந்த நிதியாண்டில் 97-வது இடத்தில் இருந்த இப்கோ, 72-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

இப்கோ அதன் 35,500 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டுறவுச் சங்கங்கள், 25,000 பிஏசிஎஸ் மற்றும் 52,400 பிஎம்கேஎஸ்கே மையங்களுடன் இணைந்து ‘ஆத்மநிர்பர் பாரத்’ மற்றும் ‘ஆத்மநிர்பர் கிரிஷி’ ஆகியவற்றை நோக்கி முன்னேறி வருகிறது.

இப்கோ, கடந்த பல ஆண்டுகளாக அதன் நம்பர் 1 தரவரிசையை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இது இப்கோ மற்றும் அதன் நிர்வாகத்தின் கூட்டுறவு கொள்கைகளில் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு சான்றாகும். அமைச்சகத்தின் முன்முயற்சிகள் இந்தியாவில் கூட்டுறவு இயக்கம் வளர்ச்சியடைய ஒரு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது. 

பிரதமரின் "சஹ்கர் சே சம்ரிதி" என்ற தொலைநோக்குப் பார்வையில் பல ஆண்டு கடின உழைப்பு, ஆராய்ச்சி மற்றும் பல்வேறு பயிர்கள் மீதான பரிசோதனை மூலம், விவசாயிகளுக்காக உலகின் முதல் நானோ யூரியா மற்றும் நானோ டிஏபியை இப்கோ உருவாக்கியது.சமீபத்திய ஆண்டுகளில்,  இப்கோ, நாட்டின் விவசாய சூழ்நிலையை மாற்ற முயற்சிக்கிறது. 

விவசாயம் 2.0 இன் பார்வையில் பணிபுரியும் இப்கோ, நானோ தொழில்நுட்பம் சார்ந்த உரங்கள், வேளாண் டிரோன்களை ஊக்குவித்தல், கிராமப்புற இ-காமர்ஸ், விவசாயிகள் மற்றும் பண்ணைகளின் டிஜிட்டல் செயலாக்கம், இன்டர்நெட் ஆப் திங்ஸ் போன்றவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இப்கோவின் நிர்வாக இயக்குநர் டாக்டர் உதய்ஷங்கர் அவஸ்தி, தொடர்ச்சியான ஆண்டுகளில் முதலிடத்தைத் தக்கவைத்துக்கொள்வது குறித்து கருத்துத் தெரிவிக்கையில், “இந்திய கூட்டுறவு இயக்கத்தில் இப்கோவுக்கு இது பெருமையான தருணம். நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதி செய்யவும், கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தவும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். புதுமையை நாங்கள் நம்புகிறோம். அது வெற்றிக்கான திறவுகோலாக இருக்கிறது. அதனால்தான் விவசாயத்திற்கான நானோ தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளை குறிப்பாக மாற்று உரங்களை அறிமுகப்படுத்துகிறோம். இது, இந்திய விவசாயிகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த மகத்தான சாதனைக்காக இப்கோவில் உள்ள ஒவ்வொருவரையும் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்த கூட்டுறவு சகோதரத்துவத்தையும் நான் வாழ்த்துகிறேன்” என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form