இந்தியாவின் கிராமப்புற பகுதிகளில் பருவமழைக் காலத்தில் அதிகரித்து வரும் பாம்புக்கடி பாதிப்பை எதிர்கொள்ள பிஎஸ்வி தனது 4ஏ உத்தியை செயல்படுத்துகிறது

 


இந்தியா முழுவதும் பருவமழை பெய்து வரும் நிலையில், கிராமப்புறங்களில் பாம்புக்கடி சம்பவங்களின் ஆபத்தான பருவகால அதிகரிப்பை எதிர்கொண்டு வருகின்றன-இது பெரும்பாலும் கவனிக்கப்படாத, ஆனால் மிக முக்கியமான பொது சுகாதார அவசரநிலையாகும். இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக உயர்தர பாம்பு விஷ முறிவு மருந்து தயாரிப்பில் நம்பிக்கைக்குரிய முன்னணி நிறுவனமாகவும், மேன்கைண்ட் குரூப் நிறுவனத்தின் ஓர் அங்கமாகவும் உள்ள பிஎஸ்வி, இந்த சவாலை நாடு முழுவதும் எதிர்கொள்ளும் நோக்கில் விரிவான ‘4ஏ’ கட்டமைப்பை செயல்படுத்தி தனது முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது.

பாம்புக்கடி சம்பவங்களில் தடுப்பு, சரியான நேரத்தில் சிகிச்சை தலையீடு மற்றும் மருத்துவ விளைவுகளை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும். நீண்டகாலமாக நிலவி வரும் தவறான நம்பிக்கைகளை அகற்றி, ஆதாரப்பூர்வமான பாம்புக்கடிக்கான முதலுதவி மற்றும் சிகிச்சை குறித்து கிராமப்புற மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே பிஎஸ்வி-யின் முதன்மை குறிக்கோளாக உள்ளது. திறமையான மேலாண்மைக்கு அருகிலுள்ள சுகாதார மையத்தை எளிதில் அணுகுவதை உறுதி செய்வதுடன், கிராமப்புற மற்றும் சிறு நகர்ப்புற பகுதிகளில் தரம் உறுதி செய்யப்பட்ட பாம்பு விஷ முறிவு மருந்து போதுமான அளவில் கிடைப்பதை வலுப்படுத்துவதும் மிகவும் அவசியமாகும். மிக முக்கியமாக, சரியான நேரத்தில் சரியான சிகிச்சையை வழங்குவது உயிரிழப்பை குறிப்பிடத்தக்க அளவில் குறைப்பதோடு, நரம்பு நச்சுத்தன்மை இரத்த உறைவு கோளாறு, திடீர் சிறுநீரக பாதிப்பு, பல உறுப்பு செயலிழப்பு மற்றும் உயிரிழப்பு போன்ற கடுமையான சிக்கல்களையும் தடுக்க உதவும்.

பிஎஸ்வி இந்தியா வணிகப் பிரிவின் தலைமை செயல்பாட்டு அதிகாரி சிவானி சர்மா டேகா கூறுகையில்: “பாம்பு விஷ முறிவு மருந்து தயாரிப்பில் சந்தையின் முன்னணி நிறுவனமாக இருக்கும் பிஎஸ்வி பாம்புக்கடிக்கான மேலாண்மையில் அறிவியல் ரீதியாக மேம்பட்ட, உயர்தரமான மற்றும் பயனுள்ள சிகிச்சைகளை தொடர்ந்து வழங்குவதில் முன்னணியில் இருந்து வருகிறது. பாம்புக்கடியை கட்டாயமாக அறிவிக்கப்பட வேண்டிய நோயாக வகைப்படுத்துமாறு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவு, தரவுச் சிதறலைச் சமாளிப்பதற்கும், பாம்பு விஷ முறிவு மருந்தின் விநியோகத்தை மேம்படுத்துவதற்கும், நாடு முழுவதும் வலுவான கண்காணிப்பு அமைப்பை உருவாக்குவதற்கும் முக்கியமான மைல்கல்லாகும். எனினும், 2030-க்குள் பாம்புக்கடியால் ஏற்படும் உயிரிழப்புகளை பாதியாகக் குறைக்கும் இலக்கை அடைய, தரைமட்டத்தில் வலுவான செயல்படுத்தல் அவசியமாகும். இதற்காக சமூக விழிப்புணர்வை தீவிரப்படுத்துதல், சிகிச்சைக்கான கடைசி மைல் அணுகலை தடையின்றி உறுதி செய்தல், கிராமப்புற சுகாதாரப் பணியாளர்களின் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் சரியான முதலுதவி குறித்த அறிவை சமூகங்களுக்கு வழங்கி சிகிச்சை பெறுவதில் ஏற்படும் தாமதத்தை நீக்குதல் ஆகியவை அடங்கும்” என்றார்.

இதுகுறித்து  கருத்து தெரிவித்த ஈரோட்டில் உள்ள மனியன் மருத்துவ மையத்தின் மருத்துவ இயக்குநர் டாக்டர் எஸ். செந்தில்குமரன் “பாம்புக்கடி இந்தியாவில் தொடர்ந்து ஒரு முக்கியமான பொது சுகாதாரப் பிரச்சினையாக இருந்து வருகிறது.  சிகிச்சை அளிப்பதில் ஏற்படும் ஒவ்வொரு நிமிட தாமதமும் பாதிக்கப்பட்டவர் குணமடைவதற்கான வாய்ப்பை கணிசமாகக் குறைக்கிறது. களமட்டத்தில் பாம்புக்கடியை அடையாளம் காண்பதற்கும், விரைவான மருத்துவத் தலையீட்டிற்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பது மிகவும் முக்கியமானதாகும். தீங்கான தவறான நம்பிக்கைகளை நீக்கும் வகையில் சமூகக் கல்வியை வழங்குவதோடு, உயிர்காக்கும் சிகிச்சையை கடைசி மைல் வரை சென்றடையச் செய்வதில் உறுதியான அர்ப்பணிப்புடன் செயல்பட்டால், கடுமையான மருத்துவச் சிக்கல்களைத் தடுக்கவும், ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றவும் முடியும்” என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form