மின்சார ஸ்கூட்டர் பிரிவில் நுழையும் கீவே இந்தியா



கீவே இந்தியா நிறுவனம் அதன் மிகவும் மேம்பட்ட மின்சார ஸ்கூட்டரான கீவே ஹைப்வோல்ட்- ஆர் வாகனத்தை வெளியிடுவதாக அறிவித்தது, இது இந்தியாவின் பிரீமியம் செயல்திறன் மிக்க மின்சார ஸ்கூட்டர் பிரிவில் கீவே பிராண்டு நுழைவதைக் குறிக்கிறது.  அறிமுக சலுகையாக ரூ.1,99,000/-  என்ற விலைக்கு வரும் ஹைப்வோல்ட்-ஆர் ஸ்கூட்டர் கிரிஸ்டல் ஒயிட் மற்றும் பிளாட்டினம் கிரே ஆகிய நிறங்களில் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் ரூ.5,000/- மட்டும் செலுத்தி கீவே இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம்  இந்த ஸ்கூட்டரை முன்பதிவு செய்யலாம். 

இந்த அறிமுகமானது கீவே இந்தியா நிறுவனத்தின் வளர்ந்து வரும் பிரீமியம் மொபிலிட்டி போர்ட்ஃபோலியோவை மேலும் வலுப்படுத்துகிறது. இந்திய  பயணிகளின் பரிணமித்து வரும் தேவைகளுக்காக பிரத்தியேகமாக என்ஜினியரிங் செய்யப்பட்டு, உலகளவில் கவனத்தை ஈர்த்த தயாரிப்புகளை இந்தியாவிற்கு கொண்டு வரவேண்டும் என்கிற பிராண்டின் உறுதிப்பாட்டையும் ஹைப்வோல்ட்-ஆர்-இன் வெளியீடு பிரதிபலிக்கிறது. கீவே ஹைப்வோல்ட் ஆர் ஸ்கூட்டரை இப்போது நாடு முழுவதும் உள்ள 40+ மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்களை உள்ளடக்கிய கீவே இந்தியா நிறுவனத்தின் நெட்வொர்க், மற்றும் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்.

ஹைப்வோல்ட்- ஆர்  ஸ்கூட்டரின் முக்கய அம்சமாக இருப்பது அதன் 5 கிலோவாட் டூயல் பேட்டரி கட்டமைப்பாகும், இது ஐடிசி-சான்றளிக்கப்பட்ட 180 கிமீ பயண தூர வரம்பை  வழங்குகிறது. இது நீக்கக்கூடிய பேரலல் ரிமூவபில் பேட்டரி பேக்குகளைக்  கொண்டுள்ளதால் - அவற்றை வாகனத்தில் வைத்தோ அல்லது வெளியே எடுத்தோ வசதியாக சார்ஜ் செய்யலாம். இதன் பேட்டரி சிஸ்டம் வாகனத்திலேயே சார்ஜின் செய்யும் இன்- சார்ஜிங் வசதியுடன் வருகிறது, சுமார் 0-80 சதவிதம் சார்ஜிங்கை சுமார் 3 மணி நேரத்தில் செய்யலாம். 12கிவாட் என்கிற அதிகபட்ச பவரை உற்பத்தி செய்யும் மிட்-மவுண்டட் பர்மனென்ட் மேக்னட் சின்க்ரோனஸ் மோட்டாரிலிருந்து இதற்கான சக்தி வருகிறது; இது ஹைப்வோல்ட்-ஆர் வெறும் 2.3 வினாடிகளில் மணிக்கு 0-40 கிமீ வேகத்தை ஆக்சிலரேட் செய்ய உதவுகிறது; அதே  நேரத்தில் மணிக்கு அதிகபட்சமாக 115 கிமீ/ஹார் வேகம் மற்றும் அற்புதமான 30 டிகிரி கிரேடபிளிட்டியுடன் வருகிறது. ஸ்கூட்டர் ஓட்டுனர்கள் வெவ்வேறு பயண நிலைமைகளுக்கு ஏற்ப ஈகோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் ஆகிய ரைடிங் மோடுகள் மூலம் தங்களுக்கு வேண்டிய அனுபவத்தை தேர்ந்தெடுக்கலாம். இதன் மையத்தில் பொருத்தப்பட்ட மோட்டார், அதன் பேரலல் பேட்டரி கட்டமைப்புடன் இணைந்து, அற்புதமான வகையில் சீராக எடையை  விநியோகம் செய்வதால் - ஸ்கூட்டரை கச்சிதமாக  கையாள உதவுகிறது; மேலும், பிரீமியம் மின்சார ஸ்கூட்டர் பிரிவில் ஒரு புதிய தரநிலையை நிர்ணயிக்கும் உடனடி த்ராட்டில் ரெஸ்பான்ஸ் அம்சத்தையும் வழங்குகிறது.

 இதில் டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் டூயல்-சேனல் ஏபிஎஸ், ஹில் ஹோல்ட் கன்ட்ரோல், ஹில் டிசென்ட் கன்ட்ரோல், இன்டெலிஜென்ட் க்ரூஸ் கன்ட்ரோல், பிளைண்ட் ஸ்பாட் டிடெக்ஷன், ரியர் ரிவர்ஸ் கேமரா, முன்புற டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், 130 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் 5-ஸ்டெப் அட்ஜஸ்ட்டபிள் பின்புற சஸ்பென்ஷன் உள்ளிட்ட நுண்ணறிவு மிக்க பல்வேறு மேம்பட்ட ஓட்டுனர் உதவி தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளது. நவீன தோற்றத்தை வழங்க வாட்டர்-ஃப்ளோயிங் எல்இடி லைட் ஸ்ட்ரிப், ஹை மற்றும் லோ பீம் செயல்பாட்டுடன் வரும் பிரத்யேக புரொஜெக்டர் எல்இடி  ஹெட்லேம்ப்,  புளூடூத் இணைப்புடன் வரும் முழுமையான டிஜிட்டல் 5 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் 14-இன்ச் அலாய் வீல்களுடன் வருகிறது; முன்புறத்தில் 100/80 மற்றும் பின்புறத்தில் 120/70 செமி-ஸ்லிக் டயர்களைக் கொண்டுள்ளது. இது நகரத்தின் தெருக்கள் அல்லது விஸ்தாரமான நெடுஞ்சாலைகளில் செல்லும்போது சிறந்த பிடிமானம், நிலைத்தன்மை மற்றும் நம்பிக்கையை உறுதி செய்கிறது.

 ஹைப்வோல்ட்-ஆர்  27-லிட்டர் அண்டர்-சீட் ஸ்டோரேஜ் கம்பார்ட்மென்ட், வசதியான 770மிமீ உயரமான இருக்கை வசதி மற்றும் சிந்தித்து ஒருங்கிணைக்கப்பட்ட யுஎஸ்பி டைப் ஏ மற்றும் டைப் சி சார்ஜிங் போர்ட்களுடன் வருகிறது. ரிவர்ஸ் மோடு, வெளியே எடுக்கக்கூடிய ரிமூவபில் பேட்டரிகள் மற்றும் இன்-வெஹிக்கிள் சார்ஜிங் போன்ற  அம்சங்கள் இருப்பதால் ஹைப்வோல்ட்-ஆர் அன்றாட பயணங்கள் மற்றும் உற்சாகமான வார இறுதி பயணங்கள் என இரண்டுக்கும் சமமாக பொருந்தும் வாகனமாக உள்ளது. இது பிரீமியம் மின்சார ஸ்கூட்டர் பிரிவில் ஒரு புதிய தரநிலையையும் நிர்ணயிக்கிறது.

இதன் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய கீவே இந்தியா நிறுவனத்தின், நிர்வாக இயக்குனர் விகாஸ் ஜபக், “இந்தியாவில் கீவேயின் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக ஹைப்வோல்ட்-ஆர் ஸ்கூட்டர் அமைந்துள்ளது. துடிப்பான ஆக்சிலரேஷன், அறிவார்ந்த ரைடர் தொழில்நுட்பங்கள் மற்றும் சமரசம் இல்லாத அற்புதமான பயன்பாட்டு மதிப்பு ஆகியவற்றை  வழங்கும் ஒரு பிரீமியம் மின்சார ஸ்கூட்டராக ஹைப்வோல்ட்-ஆர்-ஐ நாங்கள் உருவாக்கியுள்ளோம். இது இந்தியாவில் செயல்திறன் மிக்க மின்சார ஸ்கூட்டர்கள் மீதான எதிர்பார்ப்புகளை மறுவரையறை செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form