எச்டிஎப்சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நாரி நிவேஷ் யாத்ரா, ஜூன் 26ஆம் தேதி சென்னையில் தொடங்கப்பட்ட இந்த முயற்சியைத் தொடர்ந்து, தூத்துக்குடி கட்டத்தை நிறைவு செய்தது. நாடு முழுவதும் முதலீட்டாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வுக்கான இந்த வகையின் முதல் யாத்திரை, தகவலறிந்த முதலீடு, நீண்டகால நிதித் திட்டமிடல் மற்றும் அதிக நிதி ரீதியான பங்களிப்பு ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில், நகரம் முழுவதும் பொதுமக்களை ஈடுபடுத்தியது.
குடும்ப நிதி ரீதியான முடிவுகள் மற்றும் செல்வ உருவாக்கத்தில் பெண்கள் வகிக்கும் முக்கியத்துவம் அதிகரித்து வருவதை உணர்ந்து இந்த நாரி நிவேஷ் யாத்ரா முயற்சி, ஆறு மாத கால விரிவான வெளிப்புற செயல்திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள சமூகங்களுக்கு நேரடியாக முதலீட்டாளர் கல்வியை கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, இரண்டு பரிவாரங்கள் இந்தியா முழுவதும் இரண்டு வெவ்வேறு திசைகளில் பயணித்துக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு இடத்திலும், பல்வேறு பகுதிகளில் முக்கிய நிதிக் கருத்துகளை எளிமைப்படுத்தி, முதலீடு குறித்த உரையாடல்களை ஊக்குவிக்கிற நுக்கட் நாடக் (தெருநாடகங்கள்) மற்றும் ஊடாடும் முதலீட்டாளர் விழிப்புணர்வு அமர்வுகள் இடம்பெறுகின்ற சமூக ஈடுபாடு நடவடிக்கைகளை எச்டிஎப்சி மியூச்சுவல் ஃபண்ட் மேற்கொள்கிறது.
தூத்துக்குடி கட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த நாரி நிவேஷ் யாத்ரா, தூத்துக்குடி மார்க்கெட், மட்டக்கடை மார்க்கெட், திரேஸ்புரம் மார்க்கெட், எட்டயபுரம் மார்க்கெட், கோவில்பட்டி மார்க்கெட் மற்றும் தூத்துக்குடி மீன் மார்க்கெட் உள்ளிட்ட முக்கிய இடங்களில் உள்ளூர் சமூகங்களுடன் ஈடுபட்டது. நாட்டுப்புற நாடகங்கள், முதலீட்டாளர் விழிப்புணர்வு அமர்வுகள் மற்றும் சமூக கலந்துரையாடல்கள் மூலம், இந்த முயற்சி நிதித் திட்டமிடல், ஒழுங்கமைக்கப்பட்ட முதலீடு மற்றும் நீண்டகால செல்வ உருவாக்கம் ஆகியவை குறித்த உரையாடல்களை நகரம் முழுவதும் உள்ள பெண்களிடம் நேரடியாக கொண்டு சென்றது.
அடித்தள மட்டத்தில் உள்ள பெண்களுடன் நேரடியாக ஈடுபடுவதில் இந்த யாத்ரா வின் முக்கிய கவனம் உள்ளது. இந்த பிரச்சாரத்தின் போது, எச்டிஎப்சி மியூச்சுவல் ஃபண்ட், நாடு முழுவதும் உள்ள பெண்கள் சுயஉதவிக் குழுக்களுடன் நிதித் திட்டமிடல், இலக்கு சார்ந்த முதலீடு, நீண்டகால செல்வ உருவாக்கம் மற்றும் ஒழுக்கமான முதலீட்டுப் பழக்கவழக்கங்களை வளர்ப்பதன் முக்கியத்துவம் ஆகியவை குறித்த விவாதிப்பதற்கான தளங்களை உருவாக்குகின்ற 60 சிறப்பு அமர்வுகளை நடத்தும்.
இந்த முயற்சி குறித்து கருத்து தெரிவித்த எச்டிஎப்சி அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி நவநீத் முனோத் கூறுகையில், "இந்தியாவெங்கும், ஒரு குடும்பத்தில் மிகவும் ஒழுக்கத்துடன் சேமிப்பவர்களாகப் பெரும்பாலும் பெண்களே திகழ்கின்றனர்; இருப்பினும், தனிநபர் நிதி மேலாண்மை குறித்த சரியான உரையாடல்கள் நிகழாததால், முறையான முதலீடு என்பது பலருக்கும் எட்டாத ஒன்றகவே இருந்து வருகிறது. இந்த நாரி நிவேஷ் யாத்ரா அந்த உரையாடலை மையமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. தெரு நாடகங்கள், சமூகக் கூட்டங்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களுடனான நேரடி ஈடுபாடு ஆகியவற்றில் மூலம், அந்த உரையாடலை நேரடியாக பெண்களிடம் கொண்டு செல்லவும், முதலீடு என்பது சிக்கலானதும் தொலைவில் உள்ளதுமான ஒன்று அல்ல, மாறாக அவர்கள் ஏற்கனவே மனதில் கொண்டுள்ள நிதி இலக்குகளுக்கான நடைமுறைக் கருவி என்பதை அவர்கள் உணர்வதற்கு உதவவும் நாங்கள் விரும்புகிறோம்." என்று கூறினார்.
