எல்பிஜி விநியோகத்தை முன்னெடுக்க இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ஒப்பந்தம்



 ‘டிவிஎஸ் வேணு’ குழுமத்தின் ஒரு அங்கமும், இருசக்கர மற்றும் மூன்றுசக்கர வாகனச் சந்தையில் சர்வதேச அளவில் முன்னணி நிறுவனமுமான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், இந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த பொதுத்துறை எரிசக்தி நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன் லிமிடெட் நிறுவனத்துடன் ஒரு முக்கிய உத்திசார் கூட்டு செயல்பாட்டை மேற்கொண்டுள்ளதாக  அறிவித்துள்ளது. நீடித்து நிலைக்கத்தக்க வணிகப் போக்குவரத்துத் தீர்வுகள் மூலம், இந்தியாவில் வீடுகளுக்கான எல்பிஜி சிலிண்டர் விநியோகக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதை இக்கூட்டு செயல்பாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த புதிய முன்முயற்சியின் ஒரு பகுதியாக, டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் இந்தியா முழுவதும் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 13,000-க்கும் மேற்பட்ட எல்பிஜி விநியோகஸ்தர்களின் நெட்வொர்க்குடன் இணைந்து பணியாற்றவுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று எல்பிஜி சிலிண்டர்களை விநியோகம் செய்யும் பணிகளுக்குத் 'டிவிஎஸ் கிங் கார்கோ எச்டி'  வாகனங்கள் பயன்படுத்தப்படும். இது தூய்மையான, அதிக திறன்மிக்க மற்றும் குறைந்த செலவிலான சிலிண்டர் விநியோகத்தை உறுதி செய்வதோடு, இந்தியாவின் பசுமைப் போக்குவரத்து மாற்றத்திற்கு ஆதரவளிக்கும் முயற்சிக்கு முக்கிய நகர்வாகவும் அமையும்.


தங்களின் துறைகளில் மிகவும் நம்பகமான மற்றும் மதிப்புமிக்க இரண்டு பெரிய நிறுவனங்களை ஒன்றிணைக்கும் இந்த கூட்டு செயல்பாடானது, டிவிஎஸ் மோட்டாரின் வணிகப் போக்குவரத்து நிபுணத்துவத்தையும், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பரவலான விநியோக நெட்வொர்க்கையும் ஒருங்கிணைத்து இந்தியா முழுவதும் எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லவுள்ளது. எல்பிஜி சிலிண்டர் விநியோகத்திற்காகத் டிவிஎஸ் கிங் கார்கோ எச்டி ரக வாகனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் கார்பன் உமிழ்வு பெருமளவு குறைவதோடு, இந்தியன் ஆயில் விநியோகஸ்தர்களுக்கான வாகனப் பராமரிப்பு மற்றும் இயக்கச் செலவுகளும்  குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முன்முயற்சி, வணிகச் செயல்பாடுகளின் செயல்திறனையும் லாபத்தையும் மேம்படுத்துவதோடு, இரு நிறுவனங்களும் சுற்றுச்சூழல் நல்வாழ்வு மற்றும் இந்திய அரசின் தூய்மையான போக்குவரத்துத் தொலைநோக்குப் பார்வைக்குக் கொண்டுள்ள அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

இந்த கூட்டு செயல்பாடு குறித்து டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் வணிகப் போக்குவரத்துப் பிரிவின் வணிகத் தலைவர்  ரஜத் குப்தா பேசுகையில், "டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தில், அன்றாட வணிகச் செயல்பாடுகளை அதிக திறன்மிக்கதாகவும், சுற்றுச்சூழல் பாதிப்பற்றதாகவும் மற்றும் போக்குவரத்துத் தீர்வுகளை உருவாக்குவதில் நாங்கள் தீவிரக் கவனம் செலுத்தி வருகிறோம். இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன் லிமிடெட் நிறுவனத்துடனான எங்களது கூட்டு செயல்பாடு, நாடு முழுவதும் உள்ள எல்பிஜி சிலிண்டர் விநியோக முறையை மேம்படுத்துவதில், மக்களின் நம்பிக்கையைப் பெற்ற இரு நிறுவனங்களின் வலிமையையும் ஒன்றிணைக்கிறது. டிவிஎஸ் கிங் கார்கோ வாகன வரிசையின் மூலம், விநியோகஸ்தர்களின் இயக்கச் செலவுகளைக் குறைக்கவும், உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், தூய்மையான செயல்பாடுகளுக்கு ஆதரவளிக்கவும் கூடிய நம்பகமான, உயர் செயல்திறன் கொண்ட வாகனங்களை நாங்கள் வழங்குகிறோம். எங்களுக்கு இடையேயான இந்த கூட்டு செயல்பாடு, இந்தியா முழுவதும் உள்ள வணிகங்களுக்கு நீடித்து நிலைக்கத்தக்க போக்குவரத்தை மிகவும் நடைமுறையானதாகவும், எளிதில் பயன்படுத்தக்கூடியதாகவும் மாற்ற உதவும், மேலும், சுற்றுச்சூழலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும் பசுமையான போக்குவரத்தை முன்னெடுக்கும் மற்றொரு முக்கிய நகர்வாகும்,” என்றார்.

இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் தெற்கு பிராந்திய செயல் இயக்குநர் மற்றும் மாநில தலைமை நிர்வாகி- தமிழ்நாடு மாநில அதிகாரி  வி.சி.அசோகன்பேசுகையில், "நாட்டின் வளர்ச்சியை மூன்னெடுக்கும் ஆற்றல் தீர்வுகளை வழங்குவதிலும், அதே நேரத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கடைப்பிடிப்பதிலும் இந்தியன் ஆயில் எப்போதும் முன்னணியில் இருந்து வருகிறது. இந்த முன்முயற்சியானது, நீடித்து நிலைக்கத்தக்க போக்குவரத்துத் தீர்வுகள் மூலம் எங்களது எல்பிஜி விநியோகக் கட்டமைப்பை நவீனமயமாக்குவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாகும். இந்த மின்சார கார்கோ வாகனங்களின் வருகையானது விநியோகக் குழுவின் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், எங்களது விநியோகஸ்தர்களின் இயக்கச் செலவுகளைக் குறைக்கவும், கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்தவும் பெரிதும் உதவும். இத்தகைய உத்திசார் தொழில்துறை கூட்டு செயல்பாடுகள், இந்தியாவின் பசுமை போக்குவரத்தை நோக்கிய மாற்றத்தை எந்தளவிற்கு துரிதப்படுத்தும் என்பதற்கு இந்தத் திட்டம் ஒரு சிறந்த முன்மாதிரியாக அமையும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form