‘டிவிஎஸ் வேணு’ குழுமத்தின் ஒரு அங்கமும், இருசக்கர மற்றும் மூன்றுசக்கர வாகனச் சந்தையில் சர்வதேச அளவில் முன்னணி நிறுவனமுமான டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் , புகழ்பெற்ற ‘டிவிஎஸ் அபாச்சி’ பிராண்ட் உலகளவில் 70 லட்சம் வாடிக்கையாளர்களைக் கடந்து சாதனை படைத்திருக்கிறது. இந்த மைல்கல் சாதனையைக் கொண்டாடும் வகையில் இந்தியத் திரைப்படத் துறையின் புகழ்பெற்ற இயக்குநரும் தேசிய விருது வென்றவருமான ராம் மாத்வானி இயக்கத்தில் புதிய பிரச்சாரப் படமான ‘து ரேஸ் லகா’ என்ற விளம்பரத் திரைப்படத்தை டிவிஎஸ் மோட்டார் அறிமுகப்படுத்தியுள்ளது.
அபாச்சியின் 'ட்ராக் டு ரோடு' தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படம், பந்தயக் களத்தின் வேகம், கட்டுப்பாடு மற்றும் உற்சாகத்தை அபாச்சி பிராண்ட் எவ்வாறு தன்னுள் கொண்டுள்ளது என்பதை மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. டிவிஎஸ் அப்பாச்சியின் பிரச்சாரத் திரைப்படத்தைக் காண டிவிஎஸ் அபாச்சியின் 'து ரேஸ் லகா' பிரச்சாரத் திரைப்படம் <https://youtu.be/i5VJ6TsuOuQ> என்ற யூடியூப் தளத்தில் காணலாம். உலகளவில் 90 நாடுகளில் 70 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களுடன் டிவிஎஸ் அபாச்சி உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் செயல்திறன் மிக்க மோட்டார்சைக்கிள் பிராண்டுகளில் ஒன்றாகத் தனித்து விளங்குகிறது.
கடந்த பல ஆண்டுகளாகவே, டிவிஎஸ் அபாச்சி இத்துறையில் பல புதிய அதிநவீனத் தொழில்நுட்பங்களை முதன்முறையாக அறிமுகப்படுத்தி வந்துள்ளது: ரோட்டோ-பெட்டல் டிஸ்க் பிரேக்குகள் ஃபியூயல் இன்ஜெக்ஷன், டூயல்-சேனல் ஏபிஎஸ், மல்டிபிள் ரைய்ட் மோடுகள், டிவிஎஸ் ஸ்மார்ட்எக்ஸ்கனெக்ட், க்ளைட் த்ரூ டெக்னாலஜி, பில்ட்-டு-ஆர்டர் தளம் மூலமாக உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலையிலேயே வாடிக்கையாளரின் விருப்பப்படி மாற்றிமைக்கும் வசதி, கீ-லெஸ் ரைய்ட் சிஸ்டம், மற்றும் ட்ராக்சன் கண்ட்ரோல் மற்றும் டைனமிக் ஸ்டெபிலிட்டி சிஸ்டம் போன்ற மேம்பட்ட ரைடர்-அசிஸ்ட் அம்சங்கள் இதில் அடங்கும்.
வாடிக்கையாளர்களுக்குத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டு டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் இந்திய இருசக்கர வாகன வணிகப் பிரிவின் தலைவர் கௌரவ் குப்தா பேசுகையில், - "கடந்த இருபது ஆண்டுகளாக எங்களின் மீது நம்பிக்கையும் ஆர்வமும் கொண்டுள்ள 70 லட்சம் டிவிஎஸ் அபாச்சி ரைடர்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். பந்தயக் களத்தின் குணாதிசயத்தைக் கொண்டிருக்கும் வேர்களில் தொடங்கி இன்று ஒரு சர்வதேச செயல்திறன் மிக்க பிராண்டாக வளர்ந்துள்ள இந்த மைல்கல், ஒட்டுமொத்த டிவிஎஸ் மோட்டார் கட்டமைப்பின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது" என்றார்.
இந்த முக்கிய மைல்கல் குறித்து டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ப்ரீமியம் பிரிவு வணிகத் தலைவர் விமல் சும்ப்ளி பேசுகையில், "இன்று, உலகளவில் 70 லட்சம் வாடிக்கையாளர்களைக் கடந்துள்ள இந்த மைல்கல்லைக் கொண்டாடும் வேளையில், டிவிஎஸ் அபாச்சி உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் ப்ரீமியம் மோட்டார்சைக்கிள் பிராண்டுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளதையும், டிவிஎஸ் அப்பாச்சி ரைடர்களின் அன்பால் ஒன்றிணைக்கப்பட்ட ஒரு பெரிய சமூகமாக வளர்ந்துள்ளதையும் கண்டு நாங்கள் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். ‘து ரேஸ் லகா’ பிரச்சாரத்தின் தொடக்கமானது இந்த நீண்ட பயணத்திற்கும், தங்களின் அன்றாட வாழ்க்கையில் எல்லைகளைத் தாண்டி முன்னேற்றத்தை நோக்கித் பந்தயக் கள வேகத்தை அனுபவித்து செல்லும் ஒவ்வொரு ரைடருக்கும் நாங்கள் செலுத்தும் மரியாதையாகும்" என்றார்.
