இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு கிளவுட் சேவை வழங்குநரான பாரத்கிளவுட், தனது முதல் பிராண்ட் சின்னமான ‘பாதல்’-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் வளர்ச்சிப் பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ள இந்த அறிமுகம், கிளவுட் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை இந்தியா முழுவதும் உள்ள தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், அரசு அமைப்புகள் மற்றும் பொதுமக்களுக்கு மேலும் எளிமையாகவும், அனைவரும் அணுகக்கூடிய வகையிலும் கொண்டு சேர்க்கும் பாரத்கிளவுட்டின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது. தொழில்நுட்பம் சார்ந்த கிளவுட் சேவையை மனிதநேய அணுகுமுறையுடன் அறிமுகப்படுத்தி, வாடிக்கையாளர்களின் கிளவுட் பயணத்தை எளிமையாக்கும் நோக்கத்துடன் ‘பாதல்’ உருவாக்கப்பட்டுள்ளது.
"கிளவுட் தொழில்நுட்பமும் அதற்கான உள்கட்டமைப்பும் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கக் கூடாது. ‘பாதல்’ மூலம் பாரத்கிளவுட்டிற்கு மனிதநேய முகத்தை வழங்குவதோடு, கிளவுட் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான உரையாடல்களை மேலும் சுவாரஸ்யமானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் மாற்றுகிறோம். இந்தியா தனது டிஜிட்டல் எதிர்காலத்தை உருவாக்கி வரும் நிலையில், தொழில்நுட்பம் எளிதில் அணுகக்கூடியதாகவும், பாதுகாப்பானதாகவும், உள்ளூர் தேவைகள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகளை அடிப்படையாகக் கொண்டதாகவும் இருக்க வேண்டும்," என பாரத்கிளவுட் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் தக்கல்லபள்ளி தெரிவித்தார்.
‘பாதல்’ வாடிக்கையாளர் இணைப்பு நடவடிக்கைகள், டிஜிட்டல் பிரச்சாரங்கள், கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தொழில்துறை நிகழ்வுகள் மற்றும் சமூக நலத் திட்டங்கள் உள்ளிட்ட அனைத்து முயற்சிகளிலும் பாரத்கிளவுட்டின் பிராண்ட் தூதுவராக செயல்படும். க்ளவுட் ஜர்னி சிம்ப்ளிஃபைட் என்ற கருப்பொருளின் கீழ், சுவாரஸ்யமான கதையாக்கம் மற்றும் தாக்கமிக்க தகவல் பரிமாற்றம் மூலம் தொழில் நிறுவனங்களும் பயனர்களும் தங்களது கிளவுட் பயணத்தை எளிதாக முன்னெடுக்க ‘பாதல்’ வழிகாட்டியாக இருக்கும். "‘பாதல்’ என்பது ஒரு சாதாரண பிராண்ட் சின்னம் என்பதைத் தாண்டி, எங்கள் வாடிக்கையாளர்களுடன் ஆழமான உணர்வுபூர்வமான தொடர்பை உருவாக்குவதோடு, இந்தியாவின் இறையாண்மை கொண்ட செயற்கை நுண்ணறிவு கிளவுட் சேவை வழங்குநராக பாரத்கிளவுட்டின் அடையாளத்தை மேலும் வலுப்படுத்துவதே எங்கள் நோக்கம்," என்று நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரி பத்மா ரெட்டி சமா தெரிவித்தார்.
‘பாதல்’ அறிமுகம், பாரத்கிளவுட்டின் விரிவான பிராண்ட் உருவாக்கம் மற்றும் சந்தைப்படுத்தல் உத்தியின் ஒரு பகுதியாகும். இதன் தொடர்ச்சியாக சிறப்பு சமூக ஊடகத் தொடர்கள், கல்வி விழிப்புணர்வு திட்டங்கள், பள்ளி மாணவர்களுடனான நிகழ்ச்சிகள், குறும்படங்கள், ஊடாடும் அனுபவங்கள் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் மூலம் இந்தியாவின் இறையாண்மை கொண்ட கிளவுட் தீர்வுகள் குறித்த புரிதலையும் ஏற்றுக்கொள்ளுதலையும் அதிகரிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ‘பாதல்’ அறிமுகத்தின் மூலம், கிளவுட் உள்கட்டமைப்பை சிக்கலான தொழில்நுட்பமாக அல்லாமல், மனிதநேய அணுகுமுறையுடனும், நம்பகத்தன்மையுடனும், இந்தியாவின் சொந்த கிளவுட் உள்கட்டமைப்பாகவும் மக்கள் மனதில் நிலைநிறுத்துவதே பாரத்கிளவுட்டின் இலக்காகும்.
