டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனம், தமிழ்நாட்டு மக்கள் தங்களின் தினசரி தேநீரை எவ்வாறு ரசித்து ருசிக்க விரும்புகிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட ‘டாடா டீ சக்ரா கோல்ட் செலக்ட்’ என்ற புதிய தேயிலையை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆழ்ந்த நிறம் , ஈர்க்கும் நறுமணம் மற்றும் நாவிற்கு நிறைவளிக்கும் சுவை ஆகியவற்றை ஒருங்கிணைத்து, 100 கிராம் பாக்கெட்டை ₹70/- என்ற கவர்ச்சிகரமான அறிமுக விலையில் ’டாடா டீ சக்ரா கோல்ட் செலக்ட்’ கொண்டுவந்துள்ளது. இது தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மளிகைக் கடைகள் மற்றும் பிற முக்கிய சில்லறை விற்பனை நிலையங்கள் வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் விற்பனைக்கு வந்துள்ளது.
உள்ளூர் மக்களுக்கிடையே அதிகம் விரும்பப்படும் தேநீர் குறித்த விருப்பங்களைப் புரிந்து கொண்டு, அதற்கேற்பத் தயாரிப்புகளை வழங்குவதே டாடா டீ சக்ரா கோல்டின் “தமிழர்களுக்கான தேநீர்” என்ற வாக்குறுதியின் மையக்கருத்தாகும். "உயர்தரமான தேநீர் பருகும் அனுபவம் எப்போதுமே அதிக விலையில் விற்க்கப்படும் தேயிலையில்தான் கிடைக்கும்" என்ற மக்களின் பொதுவான எண்ணத்தத் தகர்த்தெறியும் வகையில் ’டாடா டீ சக்ரா கோல்ட் செலக்ட்’ தேயிலையின் அறிமுகம் அமைந்துள்ளது.
வாடிக்கையாளர்கள் அதிகம் எதிர்பார்க்கும் உயர்ந்த தரத்திலான தேயிலையை, 100 கிராமிற்கு வெறும் ₹70 என்ற விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த சிறப்பம்சமானது, “நிறமும் மணமும் பிரைட், விலையும் ரொம்ப ரைட்!”என்ற பிரச்சார வாசகத்தின் மூலம் எளிய, நினைவில் நிற்கக்கூடிய, அசல் தமிழ் உணர்வோடு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிமுகம் குறித்து டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தின் பேக்கேஜ்ட் பிவரேஜஸ் அண்ட் ஆர்கானிக் இந்தியா பிரிவுத் தலைவர் சரத் வர்மா பேசுகையில், “ டாடா டீ சக்ரா கோல்ட் செலக்ட் மூலம் ஆழ்ந்த நிறம், ஈர்க்கும் மணம் மற்றும் மனநிறைவளிக்கும் சுவையை, பல குடும்பங்கள் எளிதில் வாங்கிப் பருகக்கூடிய விலையில் அவர்களுக்கு கொண்டு சேர்த்திருக்கிறோம். தமிழ்நாட்டு மக்களின் அன்றாட வாழ்வில் டாடா டீ சக்ரா கோல்டின் ஆத்மார்த்தமான இடத்தை மேலும் வலுப்படுத்துவதும், தற்போதுள்ள மற்றும் புதிய வாடிக்கையாளர்கள் அனைவரும் டாடா டீ சக்ரா கோல்ட் செலக்டின் சிறந்த சுவையைத் தேர்ந்தெடுப்பதற்கான ஒரு வலுவான காரணத்தை உருவாக்குவதுமே எங்களின் விருப்பம். தமிழ்நாட்டில் சாதாரணமாக விற்பனை செய்யப்படும் ஒன்றாக இல்லாமல், தமிழ்நாட்டின் ரசனைக்காகவே பார்த்துப் பார்த்து அக்கறையுடன் தயாரிக்கப்பட்ட தேநீராக டாடா டீ சக்ரா கோல்ட் செலக்ட் விளங்குவது அந்த அர்ப்பணிப்பின் மற்றொரு சான்றாகும்” என்றார்.
ஆடேஷியஸ் குழுவினர் பேசுகையில், “ டாடா டீ சக்ரா கோல்டின் ஆழமான தமிழ் நற்பெயரையும், அதிக நம்பிக்கையை வெளிப்படுத்தும்போது நம் ஊர் வீடுகளில் அடிக்கடி பேசப்படும் ‘மீசையை வழிச்சுக்கிறேன்’ என்ற பழக்கமான வாடிக்கையான சொல்லாடலையும் முன்னிறுத்தி, டாடா டீ சக்ரா கோல்ட் செலக்டின் அருமையான மணம் மற்றும் நிறத்தை, மிகவும் நியாயமான விலையோடு இணைத்துக் காட்சிப்படுத்தியுள்ளோம்” என்று தெரிவித்தனர்.
