இந்தியாவின் நம்பர் 1 ஸ்போர்ட்டி ஸ்கூட்டரான டிவிஎஸ் என்டார்க், அதன் அபார செயல்திறன், கவர்ந்திழுக்கும் ஸ்டைல், சாலைகளில் எளிதாக கையாளக்கூடிய சிறப்பம்சம் மற்றும் தனித்துவமிக்க நற்பெயர் ஆகியவற்றிற்காக தனித்துவமிக்க இடத்தைப் பிடித்திருக்கிறது. கால்பந்தாட்டத்துடனான இதன் உறவு வெறும் விளையாட்டு என்பதையும் தாண்டிய ஒன்றாக அமைந்திருக்கிறது.
கால்பந்தாட்டம் மீதான இந்த மதிப்புகள் டிவிஎஸ் என்டார்க்-ன் தனித்துவமிக்க குணாதிசயங்களை அப்படியே பிரதிபலிப்பதால், இந்த கூட்டு செயல்பாடு ஒரு இயல்பான பொருத்தமாக அமைந்துள்ளது. மேலும், இன்றைய கால்பந்தாட்டத்தை வரையறுக்கும் அதே தன்னம்பிக்கை, ஆர்வம் மற்றும் கம்பீரமான அணுகுமுறையால் இந்த உறவு மேலும் சிறப்பானதாக உருவெடுத்து இருக்கிறது.
அர்ஜென்டினா கால்பந்து சங்கத்தின்அதிகாரப்பூர்வ பிராந்திய பங்குதாரராக , சிறப்பான செயல்திறன், அசைக்க முடியாத தன்னம்பிக்கை மற்றும் களத்தில் ஆதிக்கம் செலுத்தும் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் வகையில், இந்த விளையாட்டை உலகிற்கு வரையறுத்த சாம்பியன்களுக்கு டிவிஎஸ் என்டார்க் தனது மரியாதையைச் செலுத்துகிறது. இதனால் ஒரு சாதனையாளர் மற்றொரு சாதனையாளரைச் சந்திக்கும், உண்மையான சாம்பியன்களின் சங்கமமாக இந்த கூட்டு செயல்பாடு. அமைந்திருக்கிறது.
டிவிஎஸ் என்டார்க்-ன் ‘பிரச்சாரம் அதன் குணாதிசயங்களுக்கும், கால்பந்தாட்டத்தின் ஆத்மார்த்தமான வெளிப்பாட்டுக்கும் இடையே இருக்கும் இந்த பொதுவான உணர்வை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது. உலகளாவிய கால்பந்து நட்சத்திரங்கள் மற்றும் இந்திய சாலைகளை ஆளும் கம்பீரமான ஸ்கூட்டர் என இரண்டு சாம்பியன்களை இப்பிரச்சாரம் ஒன்றிணைக்கிறது. உலகம் ஒருவரை அங்கீகரிக்கும் முன்பே, அவரது பெருமைக்குரிய ஆளுமையை உருவாக்கும் வீதிகளையும், மக்களையும், பயணங்களையும் இது கொண்டாடுகிறது
டிவிஎஸ் என் டார்க்-இன் ‘ஸ்ட்ரீட்ஸ் ரிமெம்பர்’ பிரச்சாரம் இந்த பகிரப்பட்ட உணர்வை அடிப்படையாகக் கொண்டது; இது உலகளாவிய கால்பந்து ஜாம்பவான்கள் மற்றும் இந்தியச் சாலைகளில் ஆதிக்கம் செலுத்தும் ஸ்கூட்டர் ஆகிய இரண்டு சாம்பியன்களை ஒன்றிணைக்கிறது. உலகம் கவனிப்பதற்கு வெகு காலத்திற்கு முன்பே மகத்துவத்தை உருவாக்கும் தெருக்கள், மக்கள் மற்றும் பயணங்களை இது கொண்டாடுகிறது.
டென்ட்சு கிரியேட்டிவ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட 'தி ஸ்ட்ரீட்ஸ் ரிமெம்பர்' பிரச்சாரமானது விளம்பரத் திரைப்படம், அச்சு ஊடகம், கள செயல்பாடுகள், வெளிப்புற விளம்பரங்கள்மற்றும் ரசிகர்களுக்கான பிரத்தியேக அம்சங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு ஒருங்கிணைந்த பிரச்சாரமாக உருவாக்கப்பட்டுள்ளது.. இந்த பிரச்சாரத்தின் மூலம், கால்பந்து ரசிகர்கள் காட்டும் தீவிரமான ஆதரவைக் கொண்டாடுவதோடு, லட்சியம், தன்னம்பிக்கை மற்றும் சிறந்ததை நோக்கிய தேடலால் ஈர்க்கப்பட்ட ஒரு தலைமுறையினருடன் அர்த்தமுள்ள உறவுகளை உருவாக்குவதை டிவிஎஸ் என்டார்க் தனது இலக்காக கொண்டுள்ளது.
