இந்தியாவின் மிகப்பெரிய வீட்டுமனைத் திட்ட மேம்பாட்டு நிறுவனமாக முன்னணி வகிக்கும் ஜி ஸ்கொயர் குரூப், திருநெல்வேலி மாவட்டத்தின் முதலாவது கேடட் கம்யூனிட்டி வீட்டுமனைத் திட்டமான , 'ஜி ஸ்கொயர் ஆர்டிஸ்டிக் என்கிளேவ்'-ஐ தச்சநல்லூரில் அறிமுகப்படுத்தியுள்ளது.
மதுரை சாலையில், திருநெல்வேலி சந்திப்பில் இருந்து சுமார் 5.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இத்திட்டம், சந்தை விலையை விடக் குறைவான மற்றும் கவர்ச்சிகரமான விலையில் வீட்டுமனைகளை வழங்குகிறது. இடைத்தரகர்கள் இல்லாத நேரடி விற்பனை முறை மற்றும் மறைமுகக் கட்டணங்கள் இல்லாத வெளிப்படைத்தன்மை மூலம், "எங்கு வேண்டுமானாலும் ஒப்பிடுங்கள். இங்கே புக் செய்யுங்கள் என்ற ஜி ஸ்கொயர் குழுமத்தின் வாக்குறுதியை இது உறுதிப்படுத்துகிறது. இத்திட்டம் டிடிசிபி மற்றும் ஆர்இஆர்ஏ அங்கீகாரம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், முழுமையான வெளிப்படைத்தன்மை, மற்றும் நெறிமுறைபடுத்தப்பட்ட ரியல் எஸ்டேட் நடைமுறைகளைப் பின்பற்றி செயல்படுவதையும் ஜி ஸ்கொயர் குழுமம் உறுதி செய்கிறது.
திருநெல்வேலியின் முதல் வளாக குடியிருப்பு சமூக வீட்டுமனைத் திட்டமான 'ஜி ஸ்கொயர் ஆர்டிஸ்டிக் என்கிளேவ்' திட்டம், 20 ஏக்கர் பரப்பளவில் 450 ப்ரீமியம் வில்லா மனைகள், மிகவும் பாதுகாப்பான, நன்கு திட்டமிடப்பட்ட வளாக குடியிருப்பு சமூகத்திற்கான சூழல்களுடன் திட்டமிடப்பட்டுள்ளது. முதல் 50 முன்பதிவுகளுக்கு மட்டும் ஒரு சென்ட் ரூ. 6.9 லட்சம் என்ற சிறப்பு விலையில் வீடுகள் கட்டுவதற்கு தயாரான நிலையில் உள்ள வில்லா மனைகள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தில் வில்லா மனைகளை வாங்குபவர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப 2, 3 மற்றும் 4 பிஎச்கே என தனித்தனி வில்லாக்களை கட்டிக்கொள்ள முடியும். இவை ரூ. 32.5 லட்சம் முதல் ரூ. 74.5 லட்சம் வரையிலான வரம்பில் உள்ளதால், பல்வேறு தரப்பட்ட மக்களுக்கும், வளர்ந்து வரும் குடும்பங்களுக்கும் ஏற்றதாக இத்திட்டம் இருக்கும்.
மேலும் 34 வகையான வாழ்க்கைமுறை மற்றும் நவீன கட்டமைப்பு வசதிகள், தெருவிளக்குகளுடன் கூடிய உள்புறச் சாலைகள், 24 மணி நேர சிசிடிவி கண்காணிப்பு மற்றும் ஒரு வருட இலவச பராமரிப்பு என ப்ரீமியம் வில்லா வாழ்க்கை முறையை அளிக்கும் வசதிகள் உள்ளன. இவை இங்கு ப்ரீமியம் வில்லா மனைகளை வாங்குபவர்களுக்கு சிரமமில்லா வாழ்க்கை அனுபவத்தை உறுதி செய்கிறது.
ஜி ஸ்கொயர் குரூப் தனது நேர்மையான வணிக நடைமுறைகளின் ஒரு பகுதியாக, அனைத்து வீட்டுமனைத் திட்டங்களிலும் ரொக்கமில்லா பரிவர்த்தனை என்ற கொள்கையை தீவிரமாகப் பின்பற்றுகிறது. இதன் மூலம் 100% வெளிப்படையான பணப்பரிவர்த்தனைகளை உறுதி செய்கிறது.
ஜி ஸ்கொயர் ஆர்டிஸ்டிக் என்கிளேவ்' ப்ரீமியம் வில்லா மனைத்திட்டத்தைத் தொடங்குவது குறித்து, ஜி ஸ்கொயர் குரூப் நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான பாலா ராமஜெயம் கூறுகையில், ”ஜி ஸ்கொயர் குரூப்பை பொறுத்தவரை, வீட்டுமனைகள் என்பவை அனைத்து சட்ட விதிகளுக்கும் உட்பட்டதாகவும், எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் திட்டமிடப்பட்டதாகவும் இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் உறுதியாக உள்ளோம். ஜி ஸ்கொயர் ஆர்டிஸ்டிக் என்கிளேவ் மூலம், வலுவான உள்கட்டமைப்பு, மற்றும் அத்தியாவசிய வாழ்க்கை முறை வசதிகளை ஒருங்கிணைப்பதில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளோம். திருநெல்வேலியில் வீடு வாங்குபவர்களுக்கு நீண்டகால மதிப்பு, சௌகரியம் மற்றும் நம்பிக்கையை வழங்கக்கூடிய வாழ்விடங்களை உருவாக்குவதே ஜி ஸ்கொயர் குழுமத்தின் பிரதான நோக்கம்" என்றார்.