இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பில் சர்வதேச அளவில் முன்னணியில் இருக்கும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், 'பெட்ரோனாஸ் டிவிஎஸ் இந்தியா ஒன் மேக் சாம்பியன்ஷிப் (ஓஎம்சி) 2026'-க்கான பயிற்சி மற்றும் தேர்வுத் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தியாவின் மோட்டார் பந்தயத் திறமைகளை அடையாளம் கண்டு வளர்த்தெடுப்பதில் டிவிஎஸ் ரேசிங் கொண்டுள்ள நீண்டகால அர்ப்பணிப்பை இந்த அறிவிப்பு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்திய அளவிலான இந்த தேர்வு முகாம்கள் வரும் ஜனவரி 17 முதல் பிப்ரவரி 7, 2026 வரை பெங்களூரு, புனே, டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் நடைபெறும். இதில் தேர்வாகும் வீரர்களுக்கான இறுதிச் சுற்று சென்னை மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடைபெறும்.
டிவிஎஸ் அபாச்சி, பந்தயக் களத்திலிருந்து பெறப்பட்ட செயல்திறன் பொறியியலின் 20 ஆண்டுகளை நிறைவு செய்யும் வேளையில், இந்த 2026 சீசன் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. "பந்தயக் களத்திலிருந்து சாலைகளுக்கு" என்ற டிவிஎஸ் ரேசிங்கின் தத்துவத்தின் அடிப்படையில், பந்தயக் களத்தில் நிரூபிக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் மோட்டார் சைக்கிள்களை வடிவமைப்பது மட்டுமின்றி, வீரர்களுக்கான பயிற்சி, பந்தய ஒழுக்கம் மற்றும் பாதுகாப்பு தரநிலைகளையும் மேம்படுத்துகின்றன. பந்தய வீரர்கள் எவ்வாறு பயிற்சி பெறுகிறார்கள், பந்தயக் களத்திற்கு எப்படி தயாராகிறார்கள் மற்றும் தொழில்முறை மோட்டார் ஸ்போர்ட்ஸ் வழியாக முன்னேறுகிறார்கள் என்பதையும் வடிவமைக்கிறது. இதில், பந்தயக் களத்தில் வாகனம் ஓட்டுவதற்கான பயிற்சி, பந்தயத்தின் பின்பற்ற வேண்டிய ஒழுக்க நெறிமுறைகள் மற்றும் சரிவான பாதுகாப்புத் தரங்கள் ஆகியவற்றிற்கும் இதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
புதிய சீசன் குறித்து டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ப்ரீமியம் பிசினஸ் பிரிவுத் தலைவர் விமல் சும்ப்ளி கூறுகையில், “டிவிஎஸ் ரேசிங்கை பொறுத்தவரை, ஒன் மேக் சாம்பியன்ஷிப் என்பது வெறும் பந்தயங்களை நடத்துவது மட்டுமில்லாமல் சிறந்த வீரர்களை உருவாக்குவதிலும் அக்கறை செலுத்தி வருகிறது. கட்டமைக்கப்பட்ட முறையான பயிற்சி, சர்வதேச பந்தயத் தரநிலைகள் மற்றும் சமரசமற்ற பாதுகாப்பு கலாச்சாரம் ஆகியவற்றின் மூலம் திறமையான வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களைப் பட்டை தீட்டவும் இந்த தளம் உதவுகிறது. டிவிஎஸ் அபாச்சியின் 20 ஆண்டு கால பந்தயப் பாரம்பரியத்துடன், ’2026 பெட்ரோனாஸ் டிவிஎஸ் இந்தியா ஒன் மேக் சாம்பியன்ஷிப்’ பந்தயக் களத்தை அனைவருக்குமான ஒன்றாகவும், ஒழுக்கமான ஒன்றாகவும் மாற்றுகிறது. இதன் மூலம் எங்கள் ரேசிங் டி.என்.ஏ.-வை உத்வேகப்படுத்துவதாகவும் அமையும். மேலும் இந்தியாவின் அடுத்த தலைமுறை பந்தய வீரர்களுக்காக மோட்டார் ஸ்போர்ட்ஸ் சூழலை நாங்கள் வலுப்படுத்துகிறோம்’’ என்றார்.
