இப்கோ தலைவர் திலீப் சங்காணி கோவை வருகை



இந்திய தேசிய கூட்டுறவு ஒன்றியம் (என்சியுஐ), குஜராத் மாநில கூட்டுறவு விற்பனை இணையம் லிமிடெட் (குஜ்கோமசோல்) மற்றும் இந்திய உழவர் உரக்கூட்டுறவு நிறுவனத்தின் (இப்கோ) தலைவர் திலீப் சங்காணி, கோயம்புத்தூரில் அமைந்துள்ள இப்கோ - நானோவென்ஷன்ஸ் ஆராய்ச்சி மையத்தைப் பார்வையிட்டார். அங்கு நடைபெற்று வரும் ஆராய்ச்சிகள் மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்.

0நவீன ஆய்வகங்களை பார்வையிட்ட பின், விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சி குழுக்களுடன் கலந்துரையாடிய சங்காணி, நானோ வென்ஷன்ஸ் நிறுவனத்தின் புதுமையான தயாரிப்புகள் மற்றும் விஞ்ஞானச் சிறப்பை பாராட்டினார். மேலும், இம்முயற்சிகள் நிலையான மற்றும் நீடித்த விவசாயத்தின் எதிர்காலத்தை உருவாக்கும் எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, இப்கோ - நானோவென்ஷன்ஸின் புதிய தயாரிப்பான “தார்அம்ருத் கோல்ட்” குறித்து அவருக்கு விளக்கமளிக்கப்பட்டது. சிலிக்கான் அடிப்படையிலான இந்த இயற்கை உரமானது, மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்தி, ஈரப்பதத்தை தக்கவைக்கும் திறனை அதிகரிப்பதுடன், வறட்சி மற்றும் அதிக வெப்பம் போன்ற சூழ்நிலைகளுக்கு எதிரான பயிர்களின் தாங்கும் திறனை உயர்த்தும் என தெரிவிக்கப்பட்டது.

திலீப் சங்காணி, பாரத பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை (ம) ஒத்துழைப்பு அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் “ஒத்துழைப்பின் மூலம் செழிப்பு” என்ற தொலைநோக்கு இயக்கத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்து, இரசாயன உரங்களின் அதிகப்படியான பயன்பாட்டை குறைத்து, இப்கோ நானோ உரங்கள், தார் அம்ருத் கோல்ட் போன்ற உரங்களை இரசாயன  உரங்களுக்கு மாற்றாக ஊக்குவிக்குமாறு அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகளிடம் கேட்டுக்கொண்டார். இவ்வுரங்களானது, மண் ஆரோக்கியத்தை மேம்படுத்தி , சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, நிலையான விவசாயத்திற்கு வழிவகுக்கும் எனவும் வலியுறுத்தினார்.

இப்கோ மற்றும் நானோவென்ஷன்ஸ் அதிகாரிகளிடம், ஆராய்ச்சி நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு கூறினார். மேலும் அவர், இப்கோவின் அனைத்து மாநில விற்பனை மேலாளார்களிடமும் கலந்துரையாடினர். தரமான, ஊட்டச்சத்து திறன் கொண்ட தயாரிப்புகளை  விவசாயிகளுக்கு அளித்து  பயிர் உற்பத்தியை மேம்படுத்தவும் , விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் வேண்டும்  எனக் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வில், இப்கோ நிர்வாக இயக்குநர், கே.ஜே.படேல், இயக்குநர் (சிஆர்எஸ்),  பீரிந்தர் சிங், இப்கோ - நானோவென்ஷன்ஸின்  நிர்வாக இயக்குநர்  அ.லஷ்மணன், இப்கோ கலோல் நானோ ஆலையின் தலைவர்,  பி.கே.சிங், அனைத்து மாநில விற்பனை மேலாளர்கள், பிற இயக்குநர்கள்  மற்றும் இப்கோவின் தலைமை அலுவலக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சி கூட்டுறவு நிறுவனங்களின் கண்டுபிடிப்பு, வேளாண் ஆராய்ச்சிகள், நிலையான மற்றும் வளமான விவசாயத்திற்கான  இப்கோவின் உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது.


Post a Comment

Previous Post Next Post

Contact Form