திருநெல்வேலியில் கோலாகலமாக நடைபெற்ற செடாயின் பிரம்மாண்ட தொடக்க விழா 2.0

தொழில்முனைவோர்களை உருவாக்கி, அவர்களின் தொழில் வளர்ச்சிக்கு தேவையான வழிகாட்டுதல்கள், புதிய தொழில் வாய்ப்புகள் மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடுகளை வழங்கி வரும் செடாய்  அமைப்பின் “பிரம்மாண்ட தொடக்க விழா 2.0 - செடாய் திருநெல்வேலி” நிகழ்ச்சி, “ஒன் டீம் ஒன் கோல்l” என்ற மையக் கருத்துடன் செப்டம்பர் 23 அன்று திருநெல்வேலி ஹோட்டல் ஆப்பில் ட்ரீயில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சேகர் தேஷ்முக், பாளையங்கோட்டை பெல் குரூப் தலைவர் குணசிங் செல்லதுரை, நடிகரும் மிஸ்டர் இந்தியா மற்றும் மோட்டிவேஷனல் ஸ்பீக்கர்-ஆக விளங்கும் கணேஷ் வெங்கட்ராம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.நிகழ்ச்சிக்கு செடாய் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் ஏ.எஸ். ரியாஸ் தலைமை வகித்தார். ஹனா பல் மருத்துவம் மற்றும் பற்சீரமைப்பு மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர், செடாய் – திருநெல்வேலி மண்டல இயக்குநர் டாக்டர் வி. பவேதி நாத் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

தொழில்முனைவோர் தங்களிடம் உள்ள திறமைகளை அடையாளம் கண்டு, புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கி, தொழில் வளர்ச்சிக்கான வலுவான வலையமைப்பை உருவாக்க வேண்டும் என்பதன் அவசியம் நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.மேலும், தொழில்முனைவு, தலைமைத்துவம், தொழில் வளர்ச்சி, நெட்வொர்க்கிங் மற்றும் எதிர்கால தொழில் வாய்ப்புகள் குறித்து சிறப்பு உரைகள் மற்றும் கலந்துரையாடல்கள் நடைபெற்றன. பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில்முனைவோர் மற்றும் தொழில்முனைவதில் ஆர்வமுள்ளவர்கள் ஒரே தளத்தில் இணைந்து தங்களது அனுபவங்கள் மற்றும் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

“ஒன் டீம் ஒன் கோல்” என்ற நோக்கத்தின் அடிப்படையில், தொழில்முனைவோர்களிடையே ஒற்றுமை, பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் வணிகத் தொடர்புகளை வலுப்படுத்தும் வகையில் செடாய் தொடர்ந்து செயல்படும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form