இந்தியாவின் முன்னணி சுதந்திரமான உடல்நல காப்பீட்டு நிறுவனமான ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைட் இன்சூரன்ஸ், ஏப்ரல் 22 முதல் ஜூன் 2023 வரையிலான 15 மாதங்களுக்குள் புதுச்சேரியில் ரூ.9 கோடி மதிப்பிலான உரிமைகொள்ளல்களை தீர்வு செய்துள்ளதாக அறிவித்தது. இந்த நிறுவனம், இந்த பிராந்தியத்தில் உள்ள நெட்வொர்க் மருத்துவமனைகளுக்கு உரிமைகோரல் தீர்வுகளில் ரூ.9 கோடி மற்றும் நெட்வொர்க் அல்லாத மருத்துவமனைகளுக்கு உரிமைகோரல் தீர்வுகளில் ரூ.58 இலட்சம் செலுத்தியது.ஏப்ரல் 2022 முதல் ஜூன் 2023 வரையிலான 15 மாதங்களில், புதுச்சேரியில் ரூ.6 கோடிக்கு மேல் உரிமைகோரல் செலுத்துதல்களில் பெரும்பாலான உரிமைகோரல்கள் அறுவை சிகிச்சைகளுக்காக இருந்தன .
வாடிக்கையாளர்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு இணங்க, இந்த நிறுவனம் அனைத்து ரொக்கமற்ற உரிமைகோரல்களையும் இரண்டு மணி நேரத்திற்குள் தீர்த்தது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ரொக்கமற்ற சிகிச்சைக்கான ஆரம்ப அங்கீகாரம் 2 மணி நேரத்திற்குள் வழங்கப்பட்டது. வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தி திரும்பப்பெறும் முறையிலும் கூட தீர்வு செய்வதில் சிக்கல்களை எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், உரிமை கோரல் சமர்ப்பித்த 7 நாட்களுக்குள், திரும்பப்பெறும் கோரிக்கைகளை தீர்வு செய்ய இந்த நிறுவனம் முயற்சித்துள்ளது என ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.