மான்யவரின் புதிய பிரச்சாரத்தில் இணையும் நடிகர் ராம்சரண்

 


சுபநிகழ்ச்சிகளுக்கான ஆடவர் ஆடைகளுக்கான இந்தியாவின் முன்னணி ஃபேஷன் பிராண்டான மான்யவர், சர்வதேச அளவில் புகழ்பெற்ற பிரபலமும், உலகளாவிய நடிகருமான ராம் சரணை அதன் விளம்பர தூதராக நியமித்துள்தை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது. திருமணம் மற்றும் பண்டிகை காலத்தின் துவக்கத்தைக் குறிக்கும் #தயார்ஹோகர்ஆயியே என்கிற புதிய விளம்பரப் பிரச்சாரத்துடன் ராம் சரண் நியமனத்தை மான்யவர் பிராண்டு கொண்டாட்டத்துடன் துவங்கியுள்ளது.  

ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான காலத்தால் அழியாத உறவினை அழகாக வெளிப்படுத்தும், மனதிற்கு நெருக்கமான ஒரு தலைசிறந்த கலைப் படைப்பாக இந்த விளம்பரப் படம் உருவாகியுள்ளது. மாறிவரும் காலத்திற்கு ஏற்ப புதியவற்றை கற்றுக்கொள்வது முதல், குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது வரை - ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையில் உருவாகும் பிணைப்பை இப்படம் அழகாக சித்தரிக்கிறது. கதை அதன் இறுதிகட்டத்தினை அடையும்போது மகன் தனது திருமணத்திற்கு தன்னைத் தயார்படுத்திக் கொள்ளும்போது, தனது தந்தை வழங்கிய ஆழமான அறிவையும் அன்பையும் தன்னுடன் எடுத்துச் செல்கிறார். அவற்றைக் கொண்டு எதிர்வரும் முக்கியமான வாழ்க்கைப் பயணத்திற்கு தன்னை தயார் செய்து கொள்கிறார். இந்த விளம்பரப் படத்தின் ஒவ்வொரு காட்சியும் தவறவிடாமல் காணவைக்கும் என்பதிலும், ஒருவரது ஆழ்மனதை தொடும் அனுபவமாக இருக்கும்.

வேதாந்த் ஃபேஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை வருவாய் அதிகாரியான வேதாந்த் மோடி, இந்த கூட்டணி குறித்து உற்சாகத்துடன் பேசுகையில், “ராம் சரணை மான்யவர் குடும்பத்திற்கு வரவேற்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.  ஒரு நவீன இந்திய ஆண் எத்தகைய ஆடைகளை அணிய வேண்டும் என்ற மான்யவரின் சிந்தனைக்கு அவர் கச்சிதமாகப் பொருந்துகிறார். எங்களுடன் இருக்கும் ராம் சரண், எங்கள் நேயர்களுடனும் ஒரு தவிர்க்க இயலாத பந்தத்துடன் இருப்பார் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என்று கூறினார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form