#விக்ஸ்ஹோல்இண்டியாபோல்-ன் சைகை மொழி பதிப்பை விக்ஸ் அறிமுகப்படுத்தியது

 


விக்ஸ் காஃப் டிராப்ஸ், இந்தியாவுக்கு கிச் கிச் இல்லாத குரலை வழங்குவதற்கான அர்ப்பணிப்புக்காக அறியப்பட்ட நம்பகமான பிராண்டானது, அதன் சிறப்பு இந்திய சைகை மொழிப் பதிப்பான #விக்ஸ்ஹோல்இண்டியாபோல் சியர் ஆன்தெம்-ஐ இந்தியாவில் காது கேளாதோர் சமூகத்திற்கான கல்வி, விழிப்புணர்வு மற்றும் அணுகல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அமைப்பான  'இண்டியா சைனிங் ஹேண்ட்ஸ் உடன் இணைந்து அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. 

இம்மாதத் தொடக்கத்தில், விக்ஸ் காஃப் டிராப்ஸ், கிரிக்கெட் ஐகான் யுவராஜ் சிங்குடன் கைகோர்த்து, அதன் புதிய #விக்ஸ்ஹோல்இண்டியாபோல் சியர் ஆன்தெம்-ஐ வெளியிட்டது. இந்த கீதத்தில் இச்சமூகத்தைச் சேர்ந்த தீவிர ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ஐகான் யுவராஜ் சிங் இந்திய சைகை மொழியைப் பயன்படுத்தி பாடல் வரிகளை உருவாக்கியுள்ளார்.

பெர்சனல் ஹெல்த்கேர், பி அண்ட் ஜி இந்தியா, கேட்டெகரி லீடர் சாஹில் சேத்தி பேசுகையில், "இந்த கிரிக்கெட் சீசனில் யுவராஜ் சிங்குடன் இணைந்து மில்லியன் கணக்கானவர்கள் கிச் கிச் இல்லாத குரலுடன் உரக்க உற்சாகப்படுத்தவும், தங்கள் அணியை ஆதரிப்பதற்கும் நாங்கள் #விக்ஸ்ஹோல்இண்டியாபோல் சியர் ஆன்த்தெம்மை வெளியிட்டு இருக்கிறோம். இப்போது இந்திய சைகை மொழியில் இந்த கீதத்தின் சிறப்புப் பதிப்பை வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தியாவைச் சேர்ந்த செவித்திறன் குறைபாடுள்ள சமூகத்தின் உறுப்பினர்கள் சைனிங் ஹேண்ட்ஸ், விக்ஸ் இந்தியாவுடன் இணைந்து, சைகை மொழி பதிப்பு இந்த சிறப்பு இரசிகர்களை ஒன்றிணைத்து தங்கள் சைகைகள் மூலம் உற்சாகப்படுத்துவதிலும், விளையாட்டின் மீதான அவர்களின் ஆர்வத்தைக் கொண்டாடுவதிலும் ஒருங்கிணைக்கிறது” என்றார்.

இண்டியா சைனிங் ஹேண்ட்ஸ் நிறுவனர் மற்றும் சிஇஓ  அலோக் கெஜ்ரிவால் கூறுகையில், " இந்த கிரிக்கெட் சீசனில் காது கேளாதவர்களும் சேர்ந்து உற்சாகப்படுத்த இந்திய சைகை மொழியில் இந்த மகிழ்ச்சியான கீதத்தை உருவாக்க விக்ஸ் காஃப் டிராப்ஸ் நிறுவனத்தால் அணுகப்பட்டதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். பங்கேற்பாளர்கள், அடிக்கடி தங்களை வெளிப்படுத்த போராடுகிறார்கள், இந்த கீதம் மூலம் தங்கள் குரல்களைக் கண்டறிந்தனர். அவர்கள் அதிகாரம் பெற்றதாக உணர்ந்தனர், மேலும் பதிவு செயல்முறை பலருக்கு மறக்கமுடியாத பயணமாக மாறியது, உணர்ச்சியும் மகிழ்ச்சியும் நிறைந்தது. இந்த அனைவரும் சேர்த்துக்கொள்ளும் முயற்சிக்காக விக்ஸ் காஃப் டிராப்ஸை நாங்கள் பாராட்டுகிறோம், மேலும் யுவராஜின் உற்சாகமான ஆதரவிற்கு நன்றி” எனத் தெரிவித்தார்.

“இந்திய சைகை மொழியில் #விக்ஸ்ஹோல்இண்டியாபோல் சியர் ஆன்த்தெம்மை கற்றுக்கொண்டு பாடுவதில் மகிழ்ச்சி அடைந்தேன். கிரிக்கெட் இரசிகர்களின் இந்த சிறப்புமிக்க சமூகத்துடன் இணைவதற்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்காக விக்ஸ் மற்றும் இண்டியா சைனிங் ஹேண்ட்ஸ் ஆகியோருக்கு நான் நன்றி கூறுகிறேன்,” என்று யுவராஜ் சிங் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form