நெசவுத் தொழில் குறித்த கருத்து கேட்புக் கூட்டம்




முன்னாள் பாராளுமன்ற உறுப்பிரான ஆனந்த பாஸ்கர் ரபோலு, சமீபத்தில் புது தில்லியில் உள்ள இந்திய அரசியலமைப்பு கிளப்பில், நம் நாட்டில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட மற்றும் இயற்கை இழைகள் பலவற்றின் பற்றாக்குறை குறித்து விவாதிக்கவும் வலியுறுத்தவும் ஒரு வட்டமேசை சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தார். இதில் பாஜக, காங்கிரஸ், திமுக, எஸ்ஒ மற்றும் இதர கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தொழில்துறை பிரதிநிதிகளும் பங்கேற்றனர். மூலப்பொருட்களின் தட்டுப்பாட்டினால் ஏற்படும் விளைவுகள் மற்றும் ‘பதுக்கலைத் தடுக்கும் வரி’ போன்ற சாத்தியமான வரி விதிப்புகளினால் மூலப்பொருட்கள் மீது ஏற்படும் தாக்கம் ஆகியவை குறித்த தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள  அவர்கள் இக்கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

ஜவுளித் தொழிலில் உலகளவில் இந்தியாவின் சந்தைப் பங்கு அதிகரித்து வருவதால், நாட்டில் நார் போன்ற மூலப்பொருட்கள் ஏராளமாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. மனிதர்களால் உருவாக்கப்பட்ட செயற்கை நார், நூல்கள் மற்றும் பாலியஸ்டர் உற்பத்தியில் இந்தியா உலகில் 2வது பெரிய நாடாக இருந்தபோதிலும் குறிப்பாக விஸ்கோஸ் பிரிவில் விநியோகம் மற்றும் தேவைக்கு இடையே மிகப்பெரிய பற்றாக்குறை உள்ளது.  2021 - 22-ஆம் நிதியாண்டில், உள்நாட்டு விஸ்கோஸ் ஸ்டேபிள் ஃபைபர்  என்னும் செயற்கை இழையின் தேவை 7 லட்சம் டன்களாக இருந்தது, மேலும் கிடைக்கும் அளவு 5.4 லட்சம் டன்களாக மட்டுமே இருந்தது. ஒரே ஒரு பெரிய விஸ்கோஸ் சப்ளை நிறுவனம் மட்டுமே விநியோகத்தில் 90 சதவீதத்திற்கும் மேல் பங்களிப்பதால், இந்தியாவின் முழு மதிப்புச் சங்கிலியும் ஒரு உற்பத்தியாளரைச் சார்ந்துள்ளது. இதன் விளைவாக, பல சிறிய நூற்பாளர்கள்  விஸ்கோஸை அணுக முடியாமல் போகிறது.

இந்தியாவின் நெசவுத் துறையின் தற்போதைய நிலைமையில் நிலவும் மேற்கண்ட சவால்களை உயர் அதிகாரிகள் எடுத்துரைத்தனர். பாலியஸ்டர் மற்றும் விஸ்கோஸ் போன்ற மூலப்பொருட்களின் மீது வரிகளை விதிக்காதது மற்றும் இந்திய நெசவாளர்கள் மற்றும் நூற்பாலைகளுக்கு பாதகமான விலைக் கொள்கைகள் இல்லாதிருப்பதை உறுதிசெய்யும் வழிமுறைகளை கட்டமைப்பதும் அவர்கள் முன்வைத்த சில பரிந்துரைகளில் அடங்கும். பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டவற்றை சம்பந்தப்பட்ட உரிய அலுவலகங்களுக்கு கொண்டு செல்வதில் ஒருமித்த கருத்தினை கொண்டிருந்தனர்.

விவாதத்தை சுருக்கமாக விவரிக்கும் விதமாக உரையாற்றிய, ரபோலு, இழை முதல் துணியாக மாற்றும் உற்பத்தி தொழிற்கூட வளத்தை விரிவுபடுத்த ஊக்கமளிக்கும் ஒரு சூழல் அமைப்பின் தேவையை எடுத்துக் கூறினார். பெரும்பாலும் கிராமப்புற ஏழைகள் மற்றும் பெண்களை உள்ளடக்கிய இந்த 45 மில்லியனுக்கும் அதிகமான வேலைவாய்ப்பை உருவாக்கும் தொழிலாளர் - நிறைந்த ஜவுளி தொழில் துறைக்கு போதுமான நார் மற்றும் நூல் கிடைப்பதை உறுதி செய்வது மிகவும் முக்கியமானதாகும் என்றார்.


Post a Comment

Previous Post Next Post

Contact Form