Amazon குளோபல் செல்லிங் திட்டத்தின் மூலம், 2015 மற்றும் 2025 ஆண்டுகளுக்கு இடையில் இந்தியாவில் இருந்து $20 பில்லியனை தாண்டிய ஒட்டுமொத்த e-வணிக ஏற்றுமதியை லட்சக்கணக்கான இந்திய விற்பனையாளர்களுக்கு அது சாத்தியமாக்கியுள்ளதை Amazon அறிவித்துள்ளது. 2025க்குள் இந்தியாவிலிருந்து 10 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒட்டுமொத்த e-வணிக ஏற்றுமதிகளை செயல்படுத்தும் என்று அமேசான் 2020-ல் உறுதியளித்திருந்தது; இந்த இலக்கு பின்னர் அதே காலக்கட்டத்திற்குள் 20 பில்லியன் டாலராக உயர்த்தப்பட்டது. இப்போது, Amazon தன்னுடைய ஏற்றுமதி இலக்கை நிர்ணயிக்கப்பட்ட காலக்கட்டத்திற்கு முன்னதாகவே அடைந்துவிட்டது.
Amazon நிறுவனத்தின் முதன்மையான e-வணிக ஏற்றுமதி திட்டமான Amazon குளோபல் செல்லிங், 2015-ல் தொடங்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில், இந்த திட்டத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏற்றுமதியாளர்கள் பதிவுசெய்துள்ளனர், மொத்தமாக 75 கோடிக்கும் அதிகமான 'இந்தியாவில் தயாரிக்கப்பட்ட' பொருட்களை உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் விற்பனை செய்துள்ளனர். இந்த திட்டத்தின் மொத்த விற்பனையாளர் தளம், கடந்த ஆண்டில் 33%க்கும் மேலாக வளர்ச்சியடைந்துள்ளது.
Amazon குளோபல் செல்லிங் நாட்டின் பல பகுதிகளிலும் குறிப்பிடத்தக்க வகையில் ஏற்றுக்கொள்ளப்பட்டதை கண்டு வருகிறது மேலும் இந்தியா முழுவதும் 28 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள் மற்றும் 200 க்கும் மேற்பட்ட நகரங்களிலிருந்து விற்பனையாளர்களை பதிவு செய்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், இந்திய தொழில்முனைவோருக்கு தொழில்நுட்பம் மூலம் உலகளாவிய வாய்ப்புகளை எவ்வாறு உருவாக்க முடியும் என்பதை இந்த திட்டம் வெற்றிகரமாக நிரூபித்துள்ளது. அமெரிக்கா, ஐக்கிய ராஜ்யம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவூதி அரேபியா, கனடா, மெக்சிகோ, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட 18 க்கும் மேற்பட்ட Amazon உலக சந்தைகளில், கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வதன் மூலம் உலகளாவிய பிராண்ட்களை உருவாக்க ஏற்றுமதியாளர்களுக்கு இந்த திட்டம் உதவுகிறது.
Amazon குளோபல் செல்லிங் இந்தியா நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீனிதி கல்வபுடி கூறுகையில்,"Amazon நிறுவனத்தில், மற்றவைகளுடன் சுகாதாரம் மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு, அழகுப்பொருட்கள், பொம்மைகள், வீட்டு உடை, மற்றும் ஃபர்னிச்சர் உள்ளிட்ட இந்தியாவின் பாரம்பரிய ஏற்றுமதி வலிமைகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை நாங்கள் கண்டுள்ளோம். 2015 முதல், Amazon குளோபல் செல்லிங் திட்டம் உட்பட, Amazon இந்தியாவில் இருந்து $20 பில்லியன் ஒட்டுமொத்த eவணிக ஏற்றுமதிகளை செயல்படுத்தியுள்ளது, மேலும் 2025 இலக்குக்கு முன்னதாகவே இந்த சாதனையை அடைந்துள்ளது. இந்த வேகம் இந்திய வணிகங்களின் லட்சியத்தையும், உலகளாவிய வணிகத்தில் e-வணிக ஏற்றுமதிகளின் வளர்ந்து வரும் பங்கையும் பிரதிபலிக்கிறது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, 2030க்குள் 80 பில்லியன் டாலர் ஒட்டுமொத்த e-வணிக ஏற்றுமதி இலக்கை அடைய நாங்கள் பணியாற்றும் போது,
தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், திறன் கட்டமைப்பு, மற்றும் சூழல் அமைப்பு கூட்டாண்மைகள் மூலம் உலகளாவிய விறபனையை எளிதாக்குவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். 2030 ஆம் ஆண்டுக்குள் 200-300 பில்லியன் டாலர்களை எட்டும் இந்திய அரசின் இலக்குடன் இசைவாக, இந்தியாவின் e-வணிக ஏற்றுமதி வளர்ச்சியை சாத்தியமாக்குவதில் நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.
"Amazon குளோபல் செல்லிங் இன் ஒரு விற்பனையாளரும், HomeMonde நிறுவனத்தின் நிறுவனருமான சர்வேஷ் அகர்வால் கூறுகையில், “HomeMonde இல், நிலைத்தன்மைவாய்ந்த, உயர்தர சணல் கம்பளங்கள் மூலம் இந்தியாவின் கைவினைக் கலைத்திறனை உலகெங்குமுள்ள வீடுகளுக்கு கொண்டு செல்வதே எங்கள் நோக்கமாகும். அந்தப்பகுதி கம்பளங்கள் Amazon இன் உலகளவில் அதிவேகமாக வளர்ந்து வரும் வகைகளில் ஒன்று என்பதை நாங்கள் கண்டறிந்த போது, சர்வதேச அளவில் விரிவுபடுத்துவதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு என நாங்கள் உணர்ந்தோம். Amazon குளோபல் செல்லிங் மூலம், சந்தைப் போக்குகளை ஆய்வு செய்யவும், சூழல் உணர்வு கொண்ட வாங்குபவர்களை அடையவும், Fulfillment by Amazon (FBA) மூலம் சரக்கு மேலாண்மையை தடங்கலின்றி நிர்வகிக்கவும் எங்களால் முடிந்தது. கையால் செய்யப்பட்ட, நிலைத்தன்மைவாய்ந்த பொருட்களை கவர்ச்சிகரமான விலையில் வழங்குவதன் மூலம், உலகளாவிய வாடிக்கையாளர்களை இந்தியாவின் நம்பகமான கலைத்திறனுடன் இணைக்கின்றோம். நாங்கள் விற்கும் ஒவ்வொரு கம்பளமும் கைத்திறன், நிலைத்தன்மை மற்றும் இந்தியாவின் வளமான கைவினைப் பாரம்பரியத்தின் ஒரு கதையை சொல்லும் என்பதை உறுதி செய்கின்ற Amazon நிறுவனத்தின் கருவிகளும் வழிகாட்டுதலும், நாங்கள் நம்பிக்கையுடன் விரிவடைய எங்களுக்கு உதவுகின்றன.” என்று கூறினார்.
