இரு மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தியில் உலகளாவிய முன்னணி நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், மிக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டிவிஎஸ் அபாச்சி ஆர்டிஎக்ஸ் மூலம் சாகச மோட்டார் சைக்கிள் சவாரியின் எதிர்காலத்தை மறுவரையறுக்கிறது. வேகத்தின் சிலிர்ப்பையும், ஒருவர் தன்னைப்பற்றிய சுய தேடுதலுக்காக செல்லும் நீண்ட தூர பயண மனப்பான்மையையும் இணைக்கும் ஒரு புதிய வாகனப் பிரிவை இது உருவாக்குகிறது.
இந்த பைக், 299.1 சிசி சிங்கிள்-சிலிண்டர், லிக்விட் - கூல்ட், 4 -ஸ்ட்ரோக் டி.ஓ.ஹெச்.சி என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது 9,000 ஆர்பிஎம்-ல் 36 பிஎஸ் பவரையும், 7,000 ஆர்பிஎம்-ல் 28.5 என்எம் டார்க்கையும் அளிக்கிறது. இது 6 ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன், ஃப்யூயல் இன்ஜெக்ஷன், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் ஸ்டீல் ட்ரெல்லிஸ் பிரேமுடன் இணைக்கப்பட்டு மிகவும் உறுதியான மோனோ - வால்யூம் பாடி டிசைனுடன் வருகிறது. அறிமுக விலையாக 1,99,000 ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் சென்னை) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஎக்ஸ்ஸின் ஒவ்வொரு அம்சமும் - என்ஜின், சவாரி முறைகள், மின்னணுவியல் அம்சங்கள், ஃப்ரேம், சஸ்பென்ஷன் மற்றும் அலங்காரத்திற்கான துணைக்கருவிகள் மூலம் அதன் உரிமையாளருக்கு நேரடியான நன்மைகளை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளன. அதிகரித்த பாதுகாப்பு, உயர் செயல்திறன், மேம்பட்ட செளகரியம் மற்றும் தடையற்ற ஆன்-ரோட் மற்றும் ஆஃப்-ரோட் அனுபவத்திற்கான ஸ்மார்ட் இணைப்புத் தொழில்நுட்ப வசதிகள் - மேடுபள்ளங்கள் இல்லாத நெடுஞ்சாலைகள் முதல் கொண்டை ஊசி மலை வளைவுகள் மற்றும் கட்டுப்பாடற்ற பாதைகள் வரை ஒவ்வொரு சவாரியிலும் அட்ரினலின் உச்சத்தை அடையும் அனுபவத்தை அளிக்கிறது.
டிவிஎஸ் அபாச்சி ஆர்டிஎக்ஸ் அறிமுக விழாவில் பேசிய டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் இரு சக்கர வாகன வணிகப் பிரிவின் தலைவர் கௌரவ் குப்தா " மோட்டார் சைக்கிள் ஓட்டுவதில் வாகனத்தின் செயல்திறனை மறுவரையறை செய்வதன் மூலம் டிவிஎஸ் அபாச்சி 20 ஆண்டுகளாக இதைச் செயல்படுத்தி வருகிறது. இதனால் இப்போது 6 மில்லியனுக்கும் அதிகமான ரைடர்களைக் கொண்ட உலகளாவிய சமூகமாக டிவிஎஸ் அபாச்சி சமூகம் விரிவடைந்து இருக்கிறது. டிவிஎஸ் அபாச்சி ஆர்டிஎக்ஸ் இந்த வெற்றிப் பயணத்தைத் தொடரும் என்றும், பெரும் எண்ணிக்கையில் சாகசப் பயணம் செல்லும் பிரிவில் புது உற்சாகத்தையும் புதிய உத்வேகத்தையும் உருவாக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்." என்றார்.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ப்ரீமியம் பிரிவின் தலைமை வணிக அதிகாரி, விமல் சம்ப்ளி, புதிய மாடலை அறிமுகப்படுத்தும் போது பேசுகையில், ‘’டிவிஎஸ் அபாச்சி, அதன் வடிவமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் செயல்திறன் உள்ளிட்ட அம்சங்களில் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. உலகெங்கிலும் உள்ள 6 மில்லியனுக்கும் அதிகமான ரைடர்களின் நம்பிக்கை மற்றும் ஆர்வத்தால், இருபது ஆண்டுகளாக இவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. புத்தம் புதிய டிவிஎஸ் அபாச்சி ஆர்டிஎக்ஸ் மூலம், இந்த மரபை சாகச சுற்றுலா உலகத்திற்கு கொண்டு செல்லும் ஒரு புதிய வகை மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம், என்றார்.
பல்வேறு சிறப்பம்சங்களுடன் அறிமுகமாகி இருக்கும் டிவிஎஸ் அபாச்சி ஆடிஎக்ஸ், எந்த நிலப்பரப்பிலும் பயணிப்பதற்கு ஏற்ற வகையில் உறுதியான வாகனமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் முதல் முறையாக ஆஃப் ரோட் பயணம் செய்பவராக இருந்தாலும், சரி அல்லது சாகசப் பயண ஆர்வலராக இருந்தாலும் சரி அவர்களுக்கு மிகச்சிறந்த துணைவனாக இருக்கும். இந்த மோட்டார் சைக்கிள் 5 வண்ணங்களில் 3 வகைகளில் கிடைக்கிறது.
.jpg)