டிபிஎஸ் பேங்க் இந்தியா நம் நாட்டின் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) ஆதரவளிக்கும் தனது தொலைநோக்குப் பார்வையுடனான நடவடிக்கைகளின் அடுத்தக்கட்டமாக, ’இ சமுதாய்’ நிறுவனத்துடன் மேற்கொண்டிருக்கும் முக்கிய ஒப்பந்தம் குறித்து அறிவித்தது. ’இ சமுதாய்' உடனான இந்த கூட்டுச் செயல்பாட்டின் மூலம், டிபிஎஸ் பேங்க் இந்தியா சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அதே நேரத்தில் ஓஎன்டிசி மூலம் தனது வர்த்தக செயல்பாடுகளை துரிதப்படுத்தவும், வழக்கமாக இருந்து வரும் பாரம்பரிய வங்கிச் சேவைகளையும் தாண்டி நவீனமயமான டிஜிட்டல் தீர்வுகளை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது. இம்முயற்சி சில தென்னிந்திய நகரங்களில் மேற்கொள்ளப்படும் மற்றும் நீண்ட கால திட்டமாக இந்தியா முழுவதும் பரவலாக உள்ள 24 நகரங்களுக்கு இது விரிவுப்படுத்தப்படும்.
இந்தக் கூட்டுச் செயல்பாட்டின் கீழ், டிபிஎஸ் பேங்க் இந்தியா தனது சேவைகள் மற்றும் திட்டங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் தேவைகளைப் பற்றிய முக்கிய தரவுகளை, தகவல்களைப் பெறமுடியும். இதன் மூலம் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட தீர்வுகளை வழங்க முடியும். இதை செயல்படுத்த இவ்வங்கி தனது வலுவான, உலகளவில் பிரபலமான டிஜிட்டல் தொழில்நுட்ப நிபுணத்துவங்களைப் பயன்படுத்துகிறது. மேலும், சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு இருக்கும் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்ய, அவர்களுக்கேற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட நிதி மேலாண்மை தீர்வுகளையும், பல அம்சங்களை கொண்ட சேவைகளையும் வழங்கி வருகிறது.
இம்முயற்சி எளிதில் சென்றடைய வேண்டுமென்பதற்காக வழக்கமான பாரம்பரிய வங்கி சேவைகளுக்கு அப்பாற்பட்ட நவீன சேவைகளையும் வழங்குகிறது. ’இ சமுதாய்’ நிறுவனத்தின் நிதி அடிப்படையிலான தயாரிப்புகளைப் பயன்படுத்தும் கூட்டு செயல்பாட்டு நிறுவனமான டிபிஎஸ் பேங்க் இந்தியா, அந்நிறுவனத்தின் தீர்வுகளை முன்னெடுத்து செயல்படுத்த உள்ளது.
டிபிஎஸ் பேங்க் இந்தியாவின் உலகளாவிய பரிவர்த்தனை சேவைகள் பிரிவின் தலைமை நிர்வாகி மற்றும் நிர்வாக இயக்குநர் திவ்யேஷ் தலால்கூறுகையில், எங்களது இந்த கூட்டுச் செயல்பாடு குறிப்பாக மெட்ரோ நகரங்கள் மற்றும் முதல்நிலை நகர சந்தைகளுக்கு அப்பாற்பட்டு இருக்கும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கிறது. புதுமையான தீர்வுகளின் மூலம் வர்த்தகங்களை வளர்ச்சிக்கு அழைத்துச் செல்லும் எங்களது குணாதிசயத்தையே ‘இ சமுதாய்’ நிறுவனமும் கொண்டிருப்பதால், அவர்களுடன் இணைந்து செயல்படுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்றார்.
இந்தியா மற்றுமில்லாமல் இதர நாடுகளுக்கும் பொருந்துகிற ஒரு தனித்துவமிக்க முன்னேற்ற முன்முயற்சியாக இது உருவெடுக்கும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்திய, ’இ சமுதாயின்’ இணை நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான அனுப் பாய் கூறுகையில், “சமூகத்தின் அனைத்து தரப்பினரும் பொருளாதாரரீதியாக முன்னேற்றமடையும் வகையில், அனைவருக்கும் அதிகாரமளிக்கும் டிஜிட்டல் தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளை நாங்கள் உருவாக்கியுள்ளோம். மேலும் அதே எண்ணத்தைக் கொண்டிக்கும் டிபிஎஸ் பேங்க் இந்தியா உடன் இணைந்து செயல்படுவது உற்சாகமளிக்கிறது" என்றார்.