ஏசிக்ஸ் நிறுவனம் ஜெல்-நிம்பஸ் 25 எனப்படும் ரன்னிங் ஷூக்களை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பயோமெக்கானிக்ஸ் ஆய்வகத்தின் ஒரு சுதந்திரமான சோதனையில் ஓட்டப்பந்தய வீரர்களால் நம்பர் 1 என மதிப்பிடப்பட்டது. ஜெல்-நிம்பஸ் 25 மிகவும் வசதியான ரன்னிங் அனுபவத்திற்காக அதிக குஷனிங் மற்றும் மென்மையான தரையிறக்கங்களை வழங்குகிறது மற்றும் புதிய பியூர் ஜெல் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. மேம்பட்ட காலடி வசதியை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட இந்த ஷூ புதிய இலகுரக மற்றும் ஆற்றல்மிக்க எஃப்எஃப் பிளாஸ்ட் பிளஸ் எக்கோ குஷனிங்குடன் வருகிறது. கரும்பு பதப்படுத்துதலில் இருந்து மீதமுள்ள கழிவுகள் போன்ற புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து நுரை மெத்தை குறைந்த பட்சம் 20 சதவிகிதம் உயிரி அடிப்படையிலான பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது.ஜெல்-நிம்பஸ்25 ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஏசிக்ஸ் சில்லறை விற்பனை கடைகள், ஆன்லைன் ஸ்டோர்கள் மற்றும் ஸ்பெஷலிஸ்ட் ரன்னிங் அவுட்லெட்ஸ் ஆகியவற்றில் ரூ.15999/- விலையில் கிடைக்கிறது என ஏசிக்ஸ் நிறுவன செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.