முன்னனி நகை பிராண்ட்களில் ஒன்றாக தனிஷ்க், மதுரையில் தனது மூன்றாவது கிளையை திறந்துள்ளது. இந்த புதிய கிளை ஸ்ரீ சீமா அசோசியேட்ஸ், 1/1 நேரு நகர், பைபாஸ் ரோடு, மதுரை என்ற முகவரியில் அமைந்துள்ளது. 7,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் புதிய ஷோரூம், வாடிக்கையாளர்களுக்கு நேர்த்தியான மற்றும் வசதியான சூழலில் சிறந்த நகை ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், 25 கார்களை நிறுத்துவதற்கான பிரத்தியேக வாகன நிறுத்துமிட வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு நவம்பர் 8 வரை ஒரு கிராமுக்கு ₹301 சலுகை, செய்கூலியில் 20% வரை தள்ளுபடி, பழைய தங்க நகைகளை மாற்றும்போது கூடுதலாக 1கேடி சலுகை மற்றும் நவம்பர் 10 வரை சிறந்த தங்க விலைக் சலுகைகளை வழங்குகிறது. இந்தச் சிறப்புச் சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளவும், தங்கம் மற்றும் வைர நகைகளின் பிரத்தியேகமான தொகுப்புகளையும் மதுரை காளவாசல் பைபாஸில் அமைந்துள்ள தனிஷ்க் ஷோரூமை பார்வையிடலாம். சலுகைகளுக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்.
வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை, தூய்மை, தரம் மற்றும் சிறந்த கைவினைத் திறன் ஆகியவற்றை வழங்கி வரும் தனிஷ்க் நிறுவனத்தின் பயணத்தில் இந்தப் புதிய ஷோரூம் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாகும். மதுரை மக்களை எங்கள் புதிய ஷோரூமிற்கு வரவேற்பதுடன், அவர்களுடனான எங்கள் உறவை மேலும் வலுப்படுத்த ஆவலுடன் காத்திருக்கிறோம் என தனிஷ்க் நிறுவனத்தினர் தெரிவித்தனர்.
