NPCI Bharat BillPay Limited (NBBL), இந்திய தேசியப் பணப் பரிவர்த்தனைக் கழகத்தின் (NPCI) முழு உரிமையுடைய துணை நிறுவனமாகும். இந்நிறுவனம், தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் (NABARD) துணை நிறுவனமான NABARD Financial Services Limited (NABFINS) நிறுவனத்தை, கடன் திருப்பிச் செலுத்துதல் பிரிவின் கீழ் பாரத் கனெக்ட் (Bharat Connect) தளத்தில் இணைத்துள்ளது.
இந்த ஒருங்கிணைப்பின் மூலம், NABFINS நிறுவனத்திடம் கடன் பெற்றவர்கள், பாரத் கனெக்ட் வசதியுடன் இணைக்கப்பட்டுள்ள விரிவான கட்டமைப்பின் வாயிலாகத் தங்களது கடனுக்கான மாதாந்திரத் தவணைகளை (EMI) மற்றும் நிலுவையில் உள்ள தவணைகளை எளிதாகச் செலுத்த முடியும். இதன் மூலம், நாடு முழுவதும் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட வங்கிச் சேவை மற்றும் பணப்பரிவர்த்தனைச் செயலிகள் மற்றும் எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட நேரடி முகவர் மையங்கள் வாயிலாக வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தும் வசதியைப் பெறுகின்றனர். இதனால், தற்போது அவர்களுக்குக் கிடைக்கும் வரையறுக்கப்பட்ட டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை வழிகளைத் தாண்டி, கூடுதல் கட்டண விருப்பங்கள் விரிவடைகின்றன.
NABFINS நிறுவனம், இந்தியாவின் 19 மாநிலங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்குச் சேவை வழங்கி வருகிறது. பாரத் கனெக்ட்டின் ஒன்றோடொன்று இணைந்து செயல்படும் (Interoperable) பணப்பரிவர்த்தனை வலையமைப்பைப் பயன்படுத்துவதன் மூலம், இந்தக் கடனாளிகள் தங்களுக்கு விருப்பமான டிஜிட்டல் அல்லது நேரடி உதவியுடன் கூடிய பணப்பரிவர்த்தனை வழிகளில் கடன் தவணைகளைச் செலுத்த முடியும். இந்த வசதியின் விரிவாக்கம், வழக்கமான கடன் தவணைகள் மற்றும் தவறவிடப்பட்ட தவணைகளைச் செலுத்தும் நடைமுறையை எளிதாக்குவதுடன், பணம் செலுத்துவதில் ஏற்படும் தாமதங்களைக் குறைத்து, வாடிக்கையாளர்களுக்கு மேலும் வசதியான, தடையற்ற கடன் திருப்பிச் செலுத்தும் அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒருங்கிணைப்பை, பில் கட்டணச் செயல்பாட்டு அலகாக (Biller Operating Unit - BOU) செயல்பட்ட கனரா வங்கி முன்னெடுத்தது. இது குறுநிதித் துறையில் எளிதில் அணுகக்கூடிய டிஜிட்டல் மற்றும் நேரடி உதவியுடன் கூடிய கடன் திருப்பிச் செலுத்தும் வசதிகளை விரிவுபடுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. மேலும், புவியியல் எல்லைகளைக் கடந்து பல்வேறு பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்குப் பாதுகாப்பான, ஒன்றோடொன்று இணைந்து செயல்படக்கூடிய மற்றும் வசதியான பணப்பரிவர்த்தனைச் சேவைகளை வழங்குவதன் மூலம், நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்துவதில் பாரத் கனெக்ட்டின் பங்கை இந்த ஒருங்கிணைப்பு மேலும் வலுப்படுத்துகிறது.
இந்தக் கூட்டாண்மையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த டாக்டர். ஒய். ஹரகோபால், மேனேஜிங் டைரக்டர், NABFINS, அவர்கள் கூறியதாவது: “NABFINS நிறுவனத்தைப் பொறுத்தவரை, நாடு முழுவதும் போதிய நிதிச் சேவைகள் கிடைக்காத சமூகங்களுக்கு பொறுப்பான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நிதிச் சேவைகளை வழங்குவதே எங்களது நோக்கமாகும். NPCI Bharat Connect நிறுவனத்துடனான எங்களது கூட்டாண்மை, வாடிக்கையாளர்களுக்குத் தடையற்ற, பாதுகாப்பான மற்றும் வசதியான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைத் தீர்வுகளை வழங்குவதற்கான மற்றுமொரு முக்கியமான படியாகும். நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்தவும், வாடிக்கையாளர் அனுபவத்தைச் சிறப்பாக்கவும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான எங்களது உறுதிப்பாட்டை இந்த முன்னெடுப்பு மேலும் வலுப்படுத்துகிறது,” என்று தெரிவித்தார்.
இந்த முன்னெடுப்பு குறித்து மிஸ்டர் சுனில் குமார் சுக், எக்ஸிக்யூட்டிவ் டைரக்டர், கனரா பேங்க் அவர்கள் கூறியதாவது: “பாரத் கனெக்ட் கட்டமைப்பில் NABFINS நிறுவனத்தை இணைப்பதற்கு உதவுவதில் கனரா வங்கி மகிழ்ச்சியடைகிறது. குறிப்பாக, குறுநிதித் துறையில் உள்ள கடனாளிகளுக்குத் தடையற்ற மற்றும் வசதியான டிஜிட்டல் கடன் திருப்பிச் செலுத்தும் தீர்வுகளை வழங்குவதில் இந்த ஒருங்கிணைப்பு ஒரு முக்கிய மைல்கல்லாகும். டிஜிட்டல் புத்தாக்கத்தை ஊக்குவிப்பதிலும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக் கட்டமைப்பை வலுப்படுத்துவதிலும் கனரா வங்கி தொடர்ந்து உறுதியாகச் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம், நாடு முழுவதும் நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்துவதற்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிக வசதிகளை வழங்குவதற்கும் வங்கி பங்களிக்கிறது,” என்று தெரிவித்தார்.
இந்த வளர்ச்சி குறித்து பேசிய டாக்டர் நூபுர் சதுர்வேதி, எம்.டி. & சி.இ.ஓ., என்.பி.பி.எல். அவர்கள் கூறியதாவது: “குறுநிதித் துறையில் கடன் வசூல் நடைமுறைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான முக்கியமான படியாக இந்த முன்னெடுப்பு அமைந்துள்ளது. இந்த ஒருங்கிணைப்பின் மூலம், விரிவடைந்து வரும் மற்றும் ஒன்றோடொன்று இணைந்து செயல்படும் பாரத் கனெக்ட்டின் பணப்பரிவர்த்தனை வலையமைப்பின் பலன்களைப் பெறும் வாய்ப்பைக் கடனாளிகளுக்கு ஏற்படுத்துகிறோம். இதன் மூலம், கடன் தவணைகளைச் செலுத்துவது மேலும் எளிதாகவும், வசதியாகவும், தடையற்றதாகவும் மாறுகிறது. பாரத் கனெக்ட் கட்டமைப்பிற்கு NABFINS நிறுவனத்தை வரவேற்கிறோம். இந்தியா முழுவதும் நிதிச் சேவைகளை எளிதில் அணுகும் வசதியை மேம்படுத்துதல், டிஜிட்டல் சேவைகளின் பயன்பாட்டை ஊக்குவித்தல் மற்றும் நிதி உள்ளடக்கத்தை முன்னேற்றுதல் ஆகியவற்றில் எங்களது உறுதிப்பாடு தொடர்ந்து நீடிக்கும்,” என்று தெரிவித்தார்.
NABFINS நிறுவனத்தின் இணைப்பு, பாரத் கனெக்ட் தளத்தில் கடன் திருப்பிச் செலுத்துதல் பிரிவை மேலும் விரிவுபடுத்துவதற்கான மற்றுமொரு முக்கியமான படியாக அமைந்துள்ளது. இப்பிரிவில் தற்போது வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் (NBFCs) மற்றும் குறுநிதி நிறுவனங்கள் (MFIs) உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட பில் செலுத்தும் நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. 2026-2027 நிதியாண்டின் முதல் அரையாண்டில் (H1 FY 2026-2027), இப்பிரிவின் மூலம் 18.8 கோடிக்கும் அதிகமான பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ₹1.23 லட்சம் கோடி ஆகும். முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், பணப்பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையில் 18% வளர்ச்சியும், அவற்றின் மதிப்பில் 31% வளர்ச்சியும் பதிவாகியுள்ளன. இந்த வளர்ச்சி, பயனர்களிடையே பாரத் கனெக்ட் தளத்தின் கடன் திருப்பிச் செலுத்துதல் சேவைகள் அதிகரித்து வரும் பயன்பாட்டைப் பிரதிபலிக்கிறது.
