RANGE ROVER SV ULTRA: இந்தியாவில் RANGE ROVER ஆடம்பரத்தின் உன்னத வெளிப்பாடு


ரேஞ்ச் ரோவர், தனது ஆடம்பரத்திற்கும் தனித்துவத்திற்கும் உச்சமாக விளங்கும் புதிய ரேஞ்ச் ரோவர் எஸ்வி அல்ட்ரா -வை அறிமுகப்படுத்தியுள்ளது. உலகிலேயே முதன்முறையாக அறிமுகமாகும் எஸ்வி எலக்ட்யராஸ்யடட்டிக் ஒலித் தொழில்நுட்பத்துடன், உயர்தர அலங்கார அம்சங்களை ஒருங்கிணைக்கும் எஸ்வி அல்ட்ரா, இதுவரை உருவாக்கப்பட்டவற்றில் மிகவும் ஆடம்பரமானதும், தொழில்நுட்ப ரீதியாக மிகவும் மேம்பட்ட மாடலாகும். 395 கிலோ வாட் பெட்ரோல் மைல்ட்-ஹைபிரிட் வி8 இன்ஜினுடன் கூடிய ரேஞ்ச் ரோவர் எஸ்வி அல்ட்ரா தற்போது கிடைக்கிறது.  முழுமையான மின்சார மாடலும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்த வரிசையில் இணையும்.ரேஞ்ச் ரோவர் எஸ்வி அல்ட்ரா, தற்போது ரூ. 3.80 கோடி (எக்ஸ்-ஷோரூம், புதுடெல்லி) என்ற ஆரம்ப விலையில் கிடைக்கிறது.

இதில் இடம்பெற்றுள்ள முழுமையான ஒலி அனுபவத்தை வழங்கும் தொழில்நுட்பங்களில், புரட்சிகரமான எஸ்வி எலக்ட்ரோஸ்டேட்டிக் சவுண்ட் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது. இது பாடி அண்ட் சோல் சீட்ஸ் மற்றும் சென்சரி ஹாப்டிக் ஃப்ளோர் ஆகியவற்றுடன் இணைந்து, வாகனத்தின் உட்புறத்தை இசை அரங்கமாக மாற்றுகிறது. எலக்ட்ரோஸ்டேட்டிக் சவுண்ட் அமைப்பில், ஒவ்வொரு இருக்கைக்கும் தனித்துவமான இசை அரங்க அனுபவத்தை வழங்கும் வகையில், எடை குறைந்த 21 மெல்லிய படல டிரான்ஸ்டியூசர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த 21 எலக்ட்ரோஸ்டேட்டிக் பேனல்கள், புதிதாக வடிவமைக்கப்பட்ட இறக்கை வடிவ தலைத்தாங்கிகள், இருக்கைகளின் முதுகுப்பகுதி மற்றும் வாகனத்தின் மேல்புற உள்பகுதி உட்பட ஏற்கனவே உள்ள ஸ்பீக்கர் அமைவிடங்களில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு எலக்ட்ரோஸ்டேட்டிக் ஸ்பீக்கரிலும், வெறும் 1 மிமீ தடிமன் கொண்ட, மிக இலகுவான மற்றும் மிக வேகமாகச் செயல்படும் மெம்பிரேன் இடம்பெற்றுள்ளது.பாரம்பரிய ஸ்பீக்கர்களைவிட 1,000 மடங்கு வேகமாக இதுசெயல்படுகிறது. எலக்ட்ரோஸ்டேட்டிக் ஸ்பீக்கர் தொழில்நுட்பம் பல கூடுதல் நன்மைகளையும் வழங்குகிறது. இது மாற்றியமைக்கப்படும் வழக்கமான காயில் ஸ்பீக்கர்களுடன் ஒப்பிடும்போது, 90 சதவீதம் வரை குறைவான மின்சக்தியைப் பயன்படுத்துவதோடு, அதன் எடையையும் 90 சதவீதம் வரை குறைக்கிறது. மொத்த எடையின் அடிப்படையில் 100 சதவீதம் மீள்பயன்படுத்தப்பட்ட மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களைக் கொண்டு இவை தயாரிக்கப்படுகின்றன.

ரேஞ்ச் ரோவர் எஸ்வி அல்ட்ரா-வுடன் பிரத்தியேகமாக அறிமுகமாகும் டைட்டன் சில்வர் வெளிப்புற நிறப்பூச்சு, நுண்தர அலுமினியத் துகள்கள் மற்றும் மேம்பட்ட நிறமித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, திரவ உலோகத்தின் தோற்றத்தை நினைவூட்டும் ஆழமான, கண்ணாடியைப் போன்ற பளபளப்பான மேற்பரப்பை உருவாக்குகிறது. சாடின் பிளாட்டினம் அட்லஸ் மற்றும் சில்வர் குரோம் அலங்கார அம்சங்கள் இதன் வெளிப்புற அழகை மேலும் மேம்படுத்துகின்றன. 23 அங்குல அலாய் சக்கரங்களில் இடம்பெற்றுள்ள சாடின் பிளாட்டினம் உட்செருகல்களும் இதன் கம்பீரமான தோற்றத்தை மேலும் வலுப்படுத்துகின்றன.உட்புறத்தில், புதிய இரட்டை நிற ஆர்ச்சிட் வைட் மற்றும் சிண்டர் க்ரே அல்ட்ரா ஃபேப்ரிக்ஸ் அமைப்பு, இருக்கைகளில் லேசர் தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட நுணுக்கமான மொசைக் வடிவம், உட்புறத்தில் புதிய ராட்டன் பாம் வெனீர்,  வெள்ளை செராமிக் அலங்காரம், நிறத்திற்கேற்ப வடிவமைக்கப்பட்ட ஆர்ச்சிட் பியர்ள் எஸ்வி ஒலிபெருக்கிகள், ஆர்ச்சிட் வைட் இருக்கைப் பாதுகாப்புப் பட்டைகள், எஸ்வி அல்ட்ரா முத்திரை பதிக்கப்பட்ட கதவு நுழைவுத் தகடுகளும் இடம்பெற்றுள்ளன. நீளமான அலங்காரத் திண்டில், தோலுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் Kvadrat ரீமிக்ஸ் துணி ஆகிய அம்சங்களுடன் வருமிறது.

ஜேஎல்ஆர் இந்தியா நிர்வாக இயக்குநர் ராஜன் அம்பா கூறுகையில், "ரேஞ்ச் ரோவர் எஸ்வி அல்ட்ரா என்பது, பிரத்தியேகமான வடிவமைப்பு அம்சங்களையும், புதுமையான தொழில்நுட்ப முன்னேற்றங்களையும் ஒருங்கிணைக்கும் ஆடம்பரத்தின் உன்னத வெளிப்பாடாகும். புதிய எஸ்வி எலக்ட்ரோஸ்டேட்டிக் சவுண்ட் அமைப்பு, ஒவ்வொரு இசைக் குறிப்பையும் அதன் நுணுக்கங்களையும் மிகத் துல்லியமாக மீட்டுருவாக்கி, இசைக்கலைஞர் எண்ணியபடியே இசையை வழங்குகிறது. இதன் பிரத்தியேகமான வடிவமைப்பு அம்சங்கள், மேம்பட்ட பொருள் கைவினைத்திறன் மற்றும் உலகிலேயே முதன்முறையாக அறிமுகமான முழுமையான ஒலி அனுபவத் தொழில்நுட்பங்களுடன், ஆடம்பரம், நலவாழ்வு மற்றும் உயர்தர தொழில்நுட்ப அனுபவத்தில் மிகச் சிறந்ததை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு இது உண்மையிலேயே அற்புதமான அனுபவத்தை வழங்குகிறது” என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form