தத்கால் NPS’ வசதியுடன் BHIM Payments App மூலம் உடனடியாக NPS கணக்கைத் தொடங்கலாம்!


என்பிசிஐ பிம் சர்வீசஸ் லிமிடெட் இந்திய தேசியப் பணப்பரிவர்த்தனைக் கழகத்தின் முழுமையான துணை நிறுவனமாகும். இந்நிறுவனம், தத்கால் என்.பி.எஸ். சேவை தற்போது பிம் பணப்பரிவர்த்தனைச் செயலியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘தத்கல் என்.பி.எஸ்.’ வசதியின் மூலம், பயனர்கள் வங்கிக் கிளைக்குச் செல்லாமலும், புதிதாக ஆவணங்களைச் சமர்ப்பிக்காமலும், வெறும் மூன்று படிகளில் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கணக்கைத் தொடங்க முடியும்.

ஏற்கெனவே வங்கியால் சரிபார்க்கப்பட்ட கேஒய்சி விவரங்களைப் பயன்படுத்தி இந்தக் கணக்குத் தொடங்கும் நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது. பயனர்கள் தங்களது பிறந்த தேதியை உள்ளிட்டு, தகுதியான வங்கிக் கணக்கைத் தேர்ந்தெடுத்து, ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை இடைமுகம் மூலம் முதல் என்பிஎஸ் பங்களிப்பைச் செலுத்த வேண்டும். 

முதுமைக் காலத்தில் பாதுகாப்பான வருமானத்தைப் பெறுவதற்கான வாய்ப்பை ஒவ்வொரு குடிமகனுக்கும் உருவாக்கி, ஓய்வூதியம் பெறும் சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு ‘தத்கால் என்பிஎஸ்’ வசதி ஆதரவளிக்கிறது.

18 முதல் 85 வயதுக்குட்பட்ட தகுதியுள்ள இந்தியக் குடிமக்கள், பிம் பணப்பரிவர்த்தனைச் செயலியில் உள்ள ‘தத்கால் என்பிஎஸ்’ வசதியின் மூலம் குறைந்தபட்சம் ₹250 ஆரம்பப் பங்களிப்புடன் என்பிஎஸ் கணக்கைத் தொடங்கலாம். இதற்காக, செயலியில் என்பிஎஸ் வசதியைத் தேர்ந்தெடுத்து, பிறந்த தேதியை உள்ளிட்டு, வங்கிக் கணக்கைத் தேர்ந்தெடுத்து, பங்களிப்பைச் செலுத்த வேண்டும். அதன் பின்னர், பொருந்தக்கூடிய விதிமுறைகளுக்கு உட்பட்டு, ₹10 முதல் தொடர்ந்து பங்களிப்புகளைச் செலுத்தலாம்.

இதுகுறித்து என்பிஎஸ்எல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான லலிதா நடராஜ் கூறுகையில், ‘தத்கால் என்பிஎஸ்’ வசதியானது, என்பிஎஸ் கணக்கைத் தொடங்குவதில் உள்ள ஆரம்பகட்டத் தடையை நீக்குகிறது. இதன் மூலம், தகுதியுள்ள பயனர்கள் ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை இடைமுகச் செயலியின் வாயிலாகவே நேரடியாக என்பிஎஸ் கணக்கைத் தொடங்க முடியும். இதன் வாயிலாக, பங்களிப்புகளைச் செலுத்துவதற்கு உதவும் தளமாக மட்டுமல்லாமல், என்பிஎஸ் கணக்குத் தொடங்கும் நடைமுறைக்கும் பிம் ஆதரவளிக்கிறது” என்றார்.

இதுகுறித்து ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் எஸ். ராமன் கூறுகையில்,  “இந்திய தேசியப் பணப்பரிவர்த்தனைக் கழகம், வங்கிகள் மற்றும் ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை இடைமுகச் செயலிகளுடனான எங்கள் கூட்டாண்மையின் மூலம், தகுதியுள்ள எந்தவொரு குடிமகனும் வெறும் மூன்று தொடுதல்களில் ஓய்வூதியக் கணக்கைத் தொடங்க முடியும்.எங்களது தாரக மந்திரம் எளிமையானது: ‘முதுமை அடைவதற்கு முன்பே செல்வத்தைப் பெருக்குங்கள்.’ இது ஒவ்வொரு இந்தியரையும் சென்றடைய வேண்டும் என்பதே எங்களது விருப்பம்” என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form