இந்திய ஸ்மார்ட்போன் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, ஏஐ+ ஸ்மார்ட்ஃபோன் நிறுவனம் ப்ராஜக்ட் ட்ரஸ்ட்+ என்ற துணிச்சலான புது முயற்சியைத் தொடங்கியுள்ளது. நீண்ட கால சமூக ஈடுபாட்டின் மூலம் நாட்டின் மிகப்பாதுகாப்பான ஸ்மார்ட்போன் சூழலமைப்பை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். தனது சாதனங்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், அவற்றின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தவும் தொழில்நுட்ப மற்றும் மென்பொருள் உருவாக்குநர்கள் சமூகத்தை ஈடுபடுத்தும் வகையில், இந்நிறுவனம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் ₹20 கோடி வீதம் மொத்தம் ₹100 கோடியை ஒதுக்கீடு செய்வதாக உறுதியளித்துள்ளது.
இம்முயற்சியின் மூலம், அந்நிறுவனம் தனது அமைப்புகளைத் தீவிரமாகச் சோதிக்கவும், அதன் பாதுகாப்பு கட்டமைப்பை கேள்விக்குட்படுத்தவும், நுகர்வோரைப் பாதிக்கும் முன் சரிசெய்யக்கூடிய பாதிப்புகளை முன்னிலைப்படுத்தவும் தற்சார்பான ஆராய்ச்சியாளர்களை அழைக்கிறது.இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க, மாதவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள பயோ-வில் உள்ள லிங்கைப் பார்வையிடவும். டிஜிட்டல் தளங்கள் மேலும் மேலும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டு இருப்பதால், பாதுகாப்பான ஸ்மார்ட்போன்களை உருவாக்குவதற்கு சமூகத்தின் ஒத்துழைப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் தீவிரப் பங்கேற்பு தேவை என்பதை ஏஐ+ வலியுறுத்துகிறது. இதன் மூலம், டெவலப்பர்கள், பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நெறிமுறையுள்ள ஹேக்கர்கள் ஆகியோர் ஏஐ+ தயாரிப்புகளின் பாதுகாப்பு மற்றும் மீள்தன்மைக்குக் கூட்டாகப் பங்களிக்கக்கூடிய ஒரு திறந்த சூழலை இது வளர்க்கிறது.
இந்த அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த ஏஐ+ ஸ்மார்ட்போனின் தலைமை நிர்வாக அதிகாரியும், நெக்ஸ்ட்க்வாண்டம் ஷிப்ட் டெக்னாலஜில் -ன் நிறுவனருமான மாதவ் ஷேத், "பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் சாதனங்கள் பாதுகாப்பானவை என்று பயனர்களிடம் கூறுகின்றன. நாங்கள் அதை நிரூபிக்க விரும்புகிறோம். உண்மை என்னவென்றால், எந்தவொரு ஸ்மார்ட்போனும், எந்தவொரு தளமும், எந்தவொரு தொழில்நுட்பச் சூழலும் பாதுகாப்பை ஒரு முழுமையான இலக்காகக் கூறிவிட முடியாது. நம்பிக்கை வெளிப்படையாகவும் கூட்டாகவும் கட்டமைக்கப்பட வேண்டும் என்ற எங்கள் நம்பிக்கையை ப்ராஜெக்ட் ட்ரஸ்ட்+ பிரதிபலிக்கிறது. இந்தியாவின் தொழில்நுட்ப சமூகத்திற்கு நாங்கள் எங்கள் கதவுகளைத் திறக்கிறோம்” என்றார்.
