பயணத்தின்போது மாதவிடாய் பாதுகாப்பை மறுவரையறை செய்யும் ஸ்டேஃப்ரீ எக்ஸ்பர்ட்



முன்னணி மாதவிடாய் சுகாதார பிராண்டான ஸ்டேஃப்ரீ, 'ஸ்டேஃப்ரீ எக்ஸ்பர்ட் எக்ஸ்எல்' என்ற புதிய தயாரிப்பு அறிமுகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் சிறந்த பாதுகாப்பையும் வசதியையும் வழங்குவதோடு, எளிதாக எடுத்துச் செல்வதற்கும் அப்புறப்படுத்துவதற்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய மாதவிடாய் சுகாதார தீர்வாகும். இந்த அறிமுகத்தின் மூலம், ஸ்டேஃப்ரீ பெண்களுக்கான சுகாதாரப் பிரிவில் தனது தயாரிப்புகளை விரிவுபடுத்துகிறது. மேலும், பெண்களின் மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் வளர்ந்து வரும் தேவைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் மிகச்சிறந்த தீர்வை வழங்குகிறது.

ஸ்டேஃப்ரீ எக்ஸ்பர்ட் எக்ஸ்எல்-இன் அறிமுகம், பெண்களின் ஒட்டுமொத்த மாதவிடாய் மேலாண்மையில் எழுந்துள்ள புதிய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, புதுமைகளைப் புகுத்துவதில் இந்த பிராண்ட் கொண்டுள்ள தொடர்ச்சியான கவனத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. ஸ்டேஃப்ரீ எக்ஸ்பர்ட் எக்ஸ்எல் 3-இன்-1 (ஒன்றில் மூன்று நன்மைகள் கொண்ட) பாதுகாப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆழமான மற்றும் உடனடி உறிஞ்சுதலுக்கான 'ஜெல் லாக் பாக்கெட்டுகள்' திரவத்தை விரைவாகத் தக்கவைத்து, நாள் முழுவதும் உலர்ந்த உணர்வையும் பாதுகாப்பையும் அளிக்கிறது. சருமத்திற்கு காற்றோட்டமான மற்றும் மென்மையான உணர்வைத் தரும் 'ஏர் சாஃப்ட் கவர்' பயன்படுத்துகின்ற நேரம் முழுவதும் வசதியை உறுதி செய்கிறது. தனித்தனியாக உறையிடப்பட்ட நேப்கின்கள், பெண்கள் தங்களது பேடை வசதியாக எடுத்துச் செல்ல உதவுவதோடு, எளிதாக அப்புறப்படுத்துவதற்கான உறையையும் கொண்டுள்ளது.

ஸ்டேஃப்ரீ தயாரிப்புப் பிரிவின் விரிவாக்கம் குறித்து, ஸ்டேஃப்ரீ நிறுவனத்தின் மார்கெட்டிங் இயக்குனர் சுப்ரியா சீனிவாசா கூறுகையில், "ஸ்டேஃப்ரீயில், ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதவிடாய் காலம் வெவ்வேறு விதமான அனுபவமாக இருக்கிறது என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். அவர்களின் மாதவிடாய் கால அனுபவத்தை மேம்படுத்துவதற்கான தீர்வுகளை நாங்கள் தொடர்ந்து உருவாக்கி வருகிறோம். ஸ்டேஃப்ரீ எக்ஸ்பர்ட் எக்ஸ்எல் என்பது பின்வருவனவற்றின் மூலம் சிறந்த 3-இன்-1 பாதுகாப்பை வழங்கும் ஒரு புரட்சிகரமான புதிய கண்டுபிடிப்பு ஆகும்: ஆழமான மற்றும் உடனடி உறிஞ்சுதலை வழங்குவதற்கான ஜெல் லாக் பாக்கெட்டுகள், சருமத்திற்கு பேட்  தரும் உணர்வை மேம்படுத்துவதற்கான ஏர் சாஃப்ட் கவர் மற்றும் எளிதாக எடுத்துச் செல்வதற்கும் அப்புறப்படுத்துவதற்கும் தனித்தனியாக உறையிடப்பட்டு பாக்கெட்டில் அடங்கும் வடிவம். எங்களின் நுகர்வோர்கள் தங்களின் மாதவிடாய் காலத்தை நிர்வகிக்க எது சிறப்பாகச் செயல்படுகிறது என்பதை அவர்களே தேர்வு செய்யும் வகையில், பல்வேறு தீர்வுகளை வழங்குவதில் ஸ்டேஃப்ரீ தொடர்ந்து உறுதியுடன் செயல்படுகிறது”, என்றார்.

இந்த தயாரிப்பு அறிமுகத்தை இன்னும் பெரிய அளவில் கொண்டு சேர்க்கும் வகையில், ஸ்டேஃப்ரீ நிறுவனம் அதிதி பாட்டியா, அஷ்னூர் கவுர் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களுடன் இணைந்து ஒரு பிரம்மாண்டமான இன்ஃப்ளூயன்ஸர் விளம்பரப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. இது டிஜிட்டல் தளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் இளைய தலைமுறை நுகர்வோரைச் சென்றடைய உதவும்.

3-இன்-1 பாதுகாப்புடன் கூடிய புதிய ஸ்டேஃப்ரீ எக்ஸ்பர்ட் எக்ஸ்எல், நாடு முழுவதும் உள்ள சில்லறை விற்பனை நிலையங்கள், மாடர்ன் டிரேடு, ஜெனரல் டிரேடு, மருந்தகங்கள், இ-காமர்ஸ் மற்றும் குவிக் காமர்ஸ் தளங்களில் கிடைக்கிறது. 6 யூனிட்டுகள் கொண்ட பேக்கின் அதிகபட்ச சில்லறை விலை (எம்ஆர்பி) ரூ. 48/- (அனைத்து வரிகளும் உட்பட) ஆகும். ஸ்டேஃப்ரீ எக்ஸ்பர்ட் எக்ஸ்எல் 6, 18 மற்றும் 40 யூனிட்டுகள் கொண்ட பேக்குகளில் கிடைக்கிறது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form