திருச்சி ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் மாணவர்கள் 3 பேர் நீட் யுஜி 2026 தேர்வில் சிறந்த தரவரிசை பெற்றனர்

 

நாட்டின் முன்னணி தேர்வுப் பயிற்சி நிறுவனமான ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட், திருச்சியில் உள்ள தனது வகுப்பறைப் பயிற்சி மாணவர்களில் 3 பேர் தேசிய தகுதித் தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வான நீட் யுஜி 2026 தேர்வில் சிறந்த தரவரிசைகளைப் பெற்றுள்ளதாக பெருமையுடன் அறிவித்துள்ளது.

இந்த சிறப்பான சாதனை, மாணவர்களின் தொடர்ச்சியான கடின உழைப்பு, உறுதியான குறிக்கோள் மற்றும் ஒழுக்கமான பயிற்சியின் பிரதிபலிப்பாகும். இதற்கு ஆகாஷ் வழங்கிய கல்வி வழிகாட்டுதல் மற்றும் கட்டமைக்கப்பட்ட கற்றல் சூழலும் முக்கிய காரணிகளாக இருந்தன.

மாணவர்களில் யாழினி மணிவண்ணன் அகில இந்திய தரவரிசையில் 777வது இடத்தை பெற்று முதலிடம் பிடித்தார். அவரைத் தொடர்ந்து கௌதம் வெங்கடேஷ் 1097வது இடத்தையும், தக்ஷின் நாகராஜ் எஸ்.ஏ.1678-வது இடத்தையும் பெற்று திருச்சி மையத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

நீட் யுஜி 2026 தேர்வில் சிறப்பான முடிவுகளைப் பதிவு செய்ததன் மூலம், மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான பயிற்சியில் இந்தியாவின் மிகவும் நம்பகமான கல்வி நிறுவனமாக ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் மீண்டும் தனது முன்னணி இடத்தை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு, ஆகாஷ் மாணவர்களில் 4 பேர் அகில இந்திய தரவரிசையில் முதல் 10 இடங்களிலும், 18 பேர் முதல் 50 இடங்களிலும், 41 பேர் முதல் 100 இடங்களிலும் இடம்பெற்று தொடர்ந்து சிறப்பான சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இந்த குறிப்பிடத்தக்க வெற்றி, நிறுவனத்தின் கல்விசார் சிறப்பிற்கான நீண்டகால பாரம்பரியம், மாணவர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறை, அனுபவமிக்க ஆசிரியர்கள், விரிவான பாடப்பொருள், கடுமையான தேர்வு முறை மற்றும் தனிப்பட்ட வழிகாட்டுதல் ஆகியவற்றின் மூலம் நாடு முழுவதும் தொடர்ந்து உயர்தர மருத்துவ நுழைவுத் தேர்வு சாதனையாளர்களை உருவாக்கி வரும் திறனை மீண்டும் வெளிப்படுத்துகிறது, என்று ஆகாஷ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மாணவர்கள் கூறுகையில்: நீட் யுஜி 2026 தேர்வில் சிறந்த தரவரிசை பெற்றது எங்களின் நீண்டநாள் கனவு நனவாகிய தருணமாகும். எங்கள் மீது எப்போதும் நம்பிக்கை வைத்து உறுதுணையாக இருந்த பெற்றோருக்கும், தொடர்ந்து வழிகாட்டி ஊக்கமளித்த ஆகாஷ் ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம், என்றனர்.

ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் துணை மண்டல இயக்குநர் டி. சிவா பிரசாத் கூறுகையில், "மாணவர்களின் இந்தச் சாதனை, ஆகாஷ் குடும்பம் முழுவதற்கும் பெருமையான தருணமாகும். அவர்களின் ஒழுக்கம், தொடர்ச்சியான முயற்சி மற்றும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் ஆகியவை தேர்வுத் தயாரிப்பு முழுவதும் அவர்களை தனித்துவமாக வெளிப்படுத்தியது. இந்த சிறப்பான வெற்றிக்காக மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோருக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்கள் எதிர்காலத்தில் மேலும் பல உயரங்களை எட்டி, சிறந்த மருத்துவர்களாக உருவாக எங்களது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form