க்ரோமா புதிய ஐஃபோன்18 ப்ரோ மாடல்களுக்கான முன்பதிவைத் தொடங்கியது: ரூ.12,000 வரை பிரத்தியேக எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகை!


டாடா குழுமத்தின் முன்னணி மின்னணு சாதன விற்பனை நிறுவனமான க்ரோமா, புதிய ஐஃபோன் 18 ப்ரோ மற்றும் ஐஃபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடல்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் ஐஃபோன் 17 ப்ரோ மாடல்களுக்கு இதுவரை இல்லாத தள்ளுபடி விலையாக ரூ.69,990* முதல் தொடங்கும் அதிரடி சலுகையையும் அறிவித்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் இந்த அதிநவீன சாதனங்களை வாடிக்கையாளர்கள் சுலபமாக முன்பதிவு செய்துகொள்ளலாம். இதற்கான வசதி நாடு முழுவதும் உள்ள க்ரோமா விற்பனை நிலையங்கள், க்ரோமா டாட் காம் இணையதளம், டாடா நியு செயலி மற்றும் பிக்பேஸ்கட் தளம் ஆகியவற்றில் இன்றே வாங்கி கொள்ளமுடியும்.

புதிய ஐஃபோன் ப்ரோ மாடல்கள் செயல் திறன் மற்றும் புகைப்படக் கலையில் ஆப்பிளின் அதிநவீனத் தொழில்நுட்பங்களுடன் வெளிவந்துள்ளன. இதில் சக்திவாய்ந்த ஏ20 ப்ரோ சிப் இடம்பெற்றுள்ளது. மேலும், ஆப்பிளின் சொந்த தயாரிப்பான சி2 வயர்லெஸ் மோடம் பொருத்தப்பட்டுள்ளது. அத்துடன், நாமாகவே மாற்றியமைக்கூடிய பிசிக்கல் வேரியபிள் அப்பேர்ச்சர் கொண்ட புதிய 48எம்பி ஃப்யூஷன் முதன்மை கேமராவும்  இதில் இடம்பெற்றுள்ளது.

வாடிக்கையாளர்கள் க்ரோமா ஸ்டோர்களில் ரூ.5,000 செலுத்தி ஐஃபோன் 18 ப்ரோ அல்லது ஐஃபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடல்களை முன்பதிவு செய்துகொள்ளலாம். இணையம் வாயிலான தளங்களில் முன்பதிவு செய்ய முழுத் தொகையையும் செலுத்த வேண்டும். மேலும் க்ரோமாவில் ரூ.12,000 வரை பிரத்தியேக எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையைப் பெறலாம்.

அதேப்போல ஐஃபோன் 17 ப்ரோ மற்றும் ஐஃபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடல்களுக்குச் சிறப்பான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஐஃபோன் 17 ப்ரோ 256 ஜிபி மாடல் ரூ.69,990* விலையிலும், 512 ஜிபி மாடல் ரூ.88,490* விலையிலும் க்ரோமா விற்பனை நிலையங்களில் கிடைக்கிறது.

குறிப்பிட்ட வங்கி கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.4,000 உடனடி கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது. பழைய ஐஃபோன் 15 ப்ரோ மாடலை எக்ஸ்சேஞ்ச் செய்யும்போது ரூ.44,500 வரை மதிப்பு கிடைக்கும் ( பரிமாற்றம் செய்யும்ஃபோனின் நிலை மற்றும் மாடலைப் பொறுத்து). இதனுடன் கூடுதலாக ரூ.12,000* பிரத்தியேக எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படும்.

செப்டம்பர் 15 முதல் க்ரோமா வலைத்தளத்திலும் இச்சலுகை கிடைக்கும். ரூ.4,000 வங்கி கேஷ்பேக் உட்பட, 256ஜிபி மாடல் ரூ.1,26,490* விலையிலும், 512ஜிபி மாடல் ரூ.1,45,990* விலையிலும் கிடைக்கும்.

இந்த பிரத்தியேக சலுகை குறித்து இன்ஃபினிட்டி ரீடெய்ல் லிமிடெட்டின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,  "புதிய ஐஃபோன் ப்ரோ மாடல்களின் அறிமுகம் எப்போதுமே வாடிக்கையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். தங்களுக்கு விருப்பமான மாடலை மிக எளிய முறையில் முன்பதிவு செய்வதையே வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர். இந்தியா முழுவதிலும் பரவலாக இருக்கும் க்ரோமாவின் விற்பனை நிலையங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்கள் மூலம், இந்த முன்பதிவு நடைமுறையை நாங்கள் மிகவும் எளிமையாக்கியுள்ளோம். சரியான மாடலைத் தேர்ந்தெடுப்பது, பழைய சாதனங்களை எக்ஸ்சேஞ்ச் செய்வது முதல் வாங்குவது வரை அனைத்தையும் எந்தவித தடையுமின்றி சுலபமாக வாங்க முடியும். அதேநேரம், ஐஃபோன் 17 ப்ரோ மற்றும் ஐஃபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடல்களும் கவர்ச்சிகரமான விலையில் தொடர்ந்து கிடைக்கின்றன. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்திற்கும் பட்ஜெட்டிற்கும் ஏற்ற சிறந்த ப்ரோ மாடலைத் தேர்வு செய்துகொள்ள முடியும்." என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form