ஸ்கோடா ஆட்டோ இந்தியா, முற்றிலும் புதிய கோடியாக் ஆர்எஸ் (Kodiaq RS) மூலம் தனது உயர் செயல்திறன் கொண்ட ஆர்எஸ் வரிசையை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தத் தயாராக உள்ளது. 50 ஆண்டுகளுக்கும் மேலான ஆர்எஸ் பாரம்பரியம் மற்றும் 125 ஆண்டுகளுக்கும் மேலான மோட்டார் பந்தய மரபை அடிப்படையாகக் கொண்டு, இந்த சமீபத்திய மாடல், நிறுவனத்தின் செயல்திறன் டிஎன்ஏ- ஐ அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
ஜூன் 22, 2026 அன்று முன்பதிவுகள் தொடங்கவுள்ள நிலையில், கோடியாக் ஆர்எஸ், பரவசமூட்டும் செயல்திறனைத் தனித்துவமான மோட்டார் பந்தயத் தன்மையுடனும், ஏழு இருக்கைகள் கொண்ட சொகுசின் பன்முகத்தன்மையுடனும், மற்றும் 4x4 தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் மேம்படுத்தப்பட்ட அனைத்து நிலப்பரப்புத் திறனுடனும் ஒருங்கிணைக்கிறது.
இந்த அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் பிராண்ட் இயக்குனர் ஆஷிஷ் குப்தா, “ஆர்எஸ் பேட்ஜ், 50 ஆண்டுகளுக்கும் மேலான உலகளாவிய செயல்திறன் பாரம்பரியத்தையும், இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஆக்டேவியா ஆர்எஸ் அறிமுகமானதிலிருந்து இந்தியாவில் பெரும் விசுவாசமுள்ள ரசிகர் பட்டாளத்தையும் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சமீபத்திய ஆக்டேவியா (Octavia) ஆர்எஸ், வெறும் 20 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது, இது ஆர்வலர்கள் மத்தியில் உள்ள அதன் தனித்துவமான அந்தஸ்தை எடுத்துக்காட்டுகிறது. இப்போது, அந்தப் பாரம்பரியத்தை கோடியாக் ஆர்எஸ் மூலம் நாங்கள் முன்னோக்கி எடுத்துச் செல்கிறோம். இது, புகழ்பெற்ற ஆர்எஸ் பேட்ஜை அணிந்திருக்கும் எங்களின் முதல் ஏழு இருக்கைகள் கொண்ட இந்தியாவிற்கான வாகனம் மற்றும் நாட்டிலேயே இதுவரை இல்லாத வேகமான ஸ்கோடா ஆகும். இது செயல்திறன், இடவசதி மற்றும் 4x4 திறன் ஆகியவற்றை ஒன்றிணைத்து, எங்களின் பந்தய மரபணுவின் ஒரு துணிச்சலான, சந்தேகத்திற்கு இடமில்லாத வெளிப்பாடாக அமைகிறது” என்றார்.
கோடியாக் ஆர்எஸ்: செயல்திறனே அதன் மையம்
ரேலி ஸ்போர்ட் என்பதன் சுருக்கமான RS பேட்ஜ், செயல்திறன் பொறியியலில் ஸ்கோடா ஆட்டோவின் அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. உலகளவில், RS மாடல்கள் ஆற்றல்மிக்க திறன், துல்லியம் மற்றும் ஈர்க்கும் ஓட்டுநர் அனுபவத்திற்குப் பெயர்போனவை. கோடியாக் RS மூலம், இந்தத் தத்துவம் இப்போது இந்தியாவில் சொகுசு SUV பிரிவில் நுழைகிறது. இது பல்துறை மற்றும் அனைத்து நிலப்பரப்புகளுக்கும் ஏற்ற ஒரு தொகுப்பில், கூர்மையான மற்றும் மேலும் உற்சாகமான ஓட்டுநர் அனுபவத்தை வழங்குகிறது. பிராண்டின் முக்கிய உத்திசார் தூணான வேறுபடுத்திக் காட்டும் தன்மையில் கோடியாக் RS தன் கவனத்தையும் பிரதிபலிக்கிறது, மேலும் ஒவ்வொருவரின் விருப்பத்திற்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட ஒரு SUV மூலம் தன் தயாரிப்பு வரிசையை மேலும் வலுப்படுத்துகிறது.
ஸ்கோடாவின் பந்தய டிஎன்ஏ
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ஸ்கோடா ஆட்டோவின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக மோட்டார்ஸ்போர்ட் இருந்து வருகிறது. கைலாக், குஷாக் மற்றும் ஸ்லாவியா முதல் கோடியாக் மற்றும் குறைந்த எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்ட ஆக்டேவியா ஆர்எஸ் வரையிலான இந்த பிராண்டின் முழுமையான கார் தொகுப்பு, ‘ஒரு பந்தயத் தடத்தில் ஒரே உற்பத்தியாளரின் பல அதிவேக கார் தொடர் ஓட்டம்’ என்ற பிரிவில் இந்தியா மற்றும் ஆசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தது. ஓட்டுநர் மாற்ற நேரங்கள் உட்பட, ஐந்து கார்களும் கோயம்புத்தூரில் உள்ள கோஸ்ட் பந்தயத் தடத்தில் மொத்தமாக 12:30.97 என்ற ஒரு சுற்று நேரத்தைப் பதிவு செய்தன. இதன் மூலம், பிராண்ட் தனது தயாரிப்பு வரிசை முழுவதும் அதன் பொறியியல் மற்றும் இயக்க ஆற்றலை வெளிக்காட்டும் வகையில், ‘தடத்தில் மிகச்சிறந்தது என்பது தடத்தில் செல்லும் ஒரு ஸ்கோடா என்ற பிரச்சாரத்தையும் தொடங்கியது. கோடியாக் RS, SUV வரிசையில் இந்தத் தத்துவத்தின் உச்சத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது; இது பிராண்டின் மோட்டார்ஸ்போர்ட் மரபணு, செயல்திறன் பொறியியல் மற்றும் அனைத்து நிலப்பரப்புத் திறன் ஆகியவற்றை, இதுவரை இல்லாத மிக வெளிப்படையான வடிவத்தில் ஒன்றிணைக்கிறது.
