யுடிஐ லார்ஜ் கேப் ஃபண்ட், இந்தியாவின் முதல் ஈக்விட்டி சார்ந்த மியூச்சுவல் ஃபண்டாகும். (1986 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது) கடந்த 38 ஆண்டுகளுக்கும் மேலாக முதலீட்டாளர்களுக்கு செல்வ உருவாக்கத்தில் சிறப்பான சாதனையைப் பதிவு செய்து வருகிறது.
யுடிஐ லார்ஜ் கேப் ஃபண்ட் என்பது ஓப்பன்-எண்டட் ஈக்விட்டி திட்டமாகும். இது, தங்களது துறைகளில் போட்டித்திறன் மற்றும் வலுவான சந்தை நிலையை கொண்ட லார்ஜ் கேப் நிறுவனங்களில் பெரும்பாலும் முதலீடு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஃபண்ட், பங்குகளைத் தேர்வு செய்வதில் ‘பிளெண்ட்’ (Blend) முதலீட்டு அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. அதாவது, வளர்ச்சி திறன் கொண்ட (Growth) பங்குகள் மற்றும் மதிப்புமிக்க (Value) பங்குகள் ஆகிய இரண்டையும் இணைத்து, பல்வேறு சந்தை சூழல்களிலும் நிலைத்த செயல்திறனை வழங்கக்கூடிய சமநிலையான ஈக்விட்டி போர்ட்ஃபோலியோவை உருவாக்கும் முதலீட்டு உத்தியை இது கடைப்பிடிக்கிறது.
கட்டுப்படுத்தப்பட்ட கடன் சுமையுடனான வலுவான அடிப்படை நிதி நிலை, தொடர்ச்சியான வருவாய், லாபத்தன்மைக்கு முக்கியத்துவம் அளித்தல், மூலதனச் செலவை விட அதிக வருமானத்தை (Return on Capital) ஈட்டுவது, நிலையான செயல்பாட்டு பணப்புழக்கத்தை (Operating Cash Flow) உருவாக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்வதை இந்த ஃபண்ட் நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்தகைய நிறுவனங்கள் எதிர்கால விரிவாக்கத்திற்குத் தேவையான சுதந்திர பணப்புழக்கத்தை (Free Cash Flow) உருவாக்கும் திறன் கொண்டிருப்பதுடன், கூடுதல் பங்குகளை வெளியிடுவதன் மூலம் தற்போதைய பங்குதாரர்களின் பங்கு மதிப்பு குறையக்கூடிய (Dilution) நிலையைத் தவிர்க்கவும் உதவுகின்றன.
யுடிஐ லார்ஜ் கேப் ஃபண்ட் பின்பற்றும் ‘பிளெண்ட்’ (Blend) முதலீட்டு அணுகுமுறையின் அடிப்படையில், வலுவான போட்டித்திறன் கொண்ட நிறுவனங்களில் முதலீடு செய்ய வாய்ப்புகளைத் தேடுகிறது. குறிப்பாக, பின்வரும் அம்சங்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது:
1. நிறுவனத்தின் நீண்டகால வளர்ச்சித் திறன் அல்லது அதன் விலை நிர்ணயிக்கும் ஆற்றலின் (Pricing Power) பயன்களை சந்தை முழுமையாக மதிப்பிடாமல் இருக்கும் சூழல்.
2. சாதகமான தேவைச் சுழற்சி (Favourable Demand Cycle), துறை ஒருங்கிணைப்பு (Industry Consolidation), ஒழுங்குமுறைத் தடைகள் நீக்கம் (Regulatory Clearances) போன்ற துறை சார்ந்த காரணிகள் அல்லது செலவுக் கட்டுப்பாட்டுத் திறன் (Cost Competitiveness), விவேகமான திறன் விரிவாக்கம் (Prudent Capacity Expansion) போன்ற நிறுவனம் சார்ந்த காரணிகள் மூலம் வளர்ச்சி பாதை மேம்பட்டு வரும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
3. அதிக மூலதன முதலீடு தேவைப்படும் (Capital Intensive) தொழில்களில் இருந்தாலும், முதலீடுகளை விவேகத்துடன் மேற்கொண்டு திறமையாக செயல்படுத்தும் நிறுவனங்கள்.
4. உருவாகும் பணப்புழக்கத்தை (Cash Flow) அதிக மூலதன வருவாய் விகிதம் (Return on Capital Employed - RoCE) கிடைக்கும் வாய்ப்புகளில் மீண்டும் முதலீடு செய்யும் திறன் கொண்ட நிறுவனங்கள்.
5. துறை சார்ந்த ஒப்பீட்டில் கவர்ச்சிகரமான மதிப்பீட்டில் (Attractive Relative Valuation) உள்ள நிறுவனங்கள்.
இத்தகைய தரமான மற்றும் நீண்டகால வளர்ச்சித் திறன் கொண்ட நிறுவனங்களின் போர்ட்ஃபோலியோவில் முதலீடு செய்வதன் மூலம், முதலீட்டாளர்கள் நீண்டகால செல்வ உருவாக்கத்திற்கான வாய்ப்பைப் பெறுகின்றனர்.
யுடிஐ லார்ஜ் கேப் ஃபண்டின் போர்ட்ஃபோலியோவில், எச்டிஎஃப்சி வங்கி லிமிடெட், ஐசிஐசிஐ வங்கி லிமிடெட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், இன்போசிஸ் லிமிடெட், கோடக் மகிந்திரா வங்கி லிமிடெட், லார்சன் & டூப்ரோ லிமிடெட், பார்தி ஏர்டெல் லிமிடெட், பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட், எடர்னல் லிமிடெட் மற்றும் ஆக்சிஸ் வங்கி லிமிடெட் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் பங்குகள் இடம்பெற்றுள்ளன. மேலும், போர்ட்ஃபோலியோவில் உள்ள முதல் 10 பங்குகள் மட்டும் சுமார் 50% பங்கைக் கொண்டுள்ளன. 2026 மே 31 நிலவரப்படி, இந்தத் திட்டம் நுகர்வோர் சேவைகள் (Consumer Services), நுகர்வோர் நீடித்த பயன்பாட்டு பொருட்கள் (Consumer Durables), தகவல் தொழில்நுட்பம் (Information Technology), கட்டுமானம் (Construction) மற்றும் நிதிச் சேவைகள் (Financial Services) ஆகிய துறைகளில் அதிக முதலீட்டு ஒதுக்கீட்டை (Overweight) கொண்டுள்ளது. அதே நேரத்தில், வேகமாக நுகரப்படும் அன்றாடப் பொருட்கள் (FMCG), மின்சாரம் (Power), உலோகங்கள் மற்றும் சுரங்கம் (Metals & Mining), எண்ணெய், எரிவாயு மற்றும் நுகர்வுப் பயன்பாட்டு எரிபொருட்கள் (Oil, Gas & Consumable Fuels), மற்றும் சுகாதாரத் துறை (Healthcare) ஆகியவற்றில் ஒப்பீட்டளவில் குறைந்த முதலீட்டு ஒதுக்கீட்டை (Underweight) கொண்டுள்ளது.
2026 மே 31 நிலவரப்படி, இந்த ஃபண்டின் நிர்வகிப்பு சொத்து மதிப்பு (AUM) ரூ.11,852 கோடிக்கும் அதிகமாக உள்ளது. நீண்டகால அடிப்படையில் மூலதன மதிப்பு உயர்வு (Capital Appreciation) மற்றும்/அல்லது வருமான விநியோகத்தை (Income Distribution) உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்படும் இந்த ஃபண்ட், மேற்கூறிய ஒழுங்குமுறையுடனான முதலீட்டு அணுகுமுறையை தொடர்ந்து பின்பற்றி வருகிறது. மேலும், தொடங்கப்பட்டதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து ஆண்டு டிவிடெண்ட் வழங்கி வரும் சிறப்பையும் இந்த ஃபண்ட் பெற்றுள்ளது. யுடிஐ லார்ஜ் கேப் ஃபண்ட் இதுவரை மொத்தமாக சுமார் ரூ.4,500 கோடி அளவிலான டிவிடெண்டை முதலீட்டாளர்களுக்கு விநியோகித்துள்ளது.