டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் திண்டுக்கல்லில் புதிய இருசக்கர வாகன விற்பனை மையத்தைத் தொடங்குகிறது



உலகளவில் இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாகத் திகழும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், திண்டுக்கல்லில் தனது புதிய அங்கீகரிக்கப்பட்ட விற்பனை மையமான 'அபி ஆட்டோமொபைல்ஸ் எல்எல்பி' திறக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த புதிய விற்பனை மையம், இப்பிராந்தியத்தில் இந்நிறுவனத்தின் சில்லறை விற்பனை செயல்பாடுகளை வலுப்படுத்தும். மேலும், டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் தங்களது இருசக்கர வாகனங்களுக்கான சேவைகளை எளிதில் பெறும் அனுபவத்தை மேம்படுத்தும். இந்த டீலர்ஷிப்பின் மூலம், டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் திண்டுக்கல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தனது செயல்பாடுகளை தொடர்ந்து விரிவுப்படுத்தி வருகிறது.

திண்டுக்கல்லின் முக்கியப் பகுதியில் அமைந்துள்ள இந்த 'அபி ஆட்டோமொபைல்ஸ் எல்எல்பி' விற்பனை மையம், வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற ஒட்டுமொத்த அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது, பல்வேறு தரப்பு மக்களின் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் அனைத்து வகையான இருசக்கர வாகனங்களின் தயாரிப்புகளையும் இங்கே விற்பனைக்காக காட்சிப்படுத்துகிறது.

திண்டுக்கல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் டிவிஎஸ் மோட்டார் பிராண்டின் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்த இந்தத் தொடக்க விழாவில், டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பிராந்திய விற்பனை மேலாளர் அபராஜித் சடகோபன் மற்றும் விற்பனை மற்றும் சேவை நிலைய பங்குதாரர்களான  முகிதன் பாரதி &  பிரகாசம்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

டிவிஎஸ் மோட்டார் தனது அங்கீகரிக்கப்பட்ட 'அபி ஆட்டோமொபைல்ஸ் எல்எல்பி' டீலர்ஷிப் தொடக்கத்தின் மூலம், டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களிடையே நம்பகமான சில்லறை விற்பனை செயல்பாடுகளை தொடர்ந்து விரிவுபடுத்துகிறது; அத்துடன் புதுமையான, வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட போக்குவரத்துத் தீர்வுகளை இந்தியாவில் உள்ள இரு சக்கர வாகனப் பிரியர்களுக்கு மிக எளிதில் கிடைக்கச் செய்து வருகிறது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form