இந்தியாவின் ஏஐ-தயார்நிலை கொண்ட கிளவுட் சேவை வழங்குநரான பாரத்க்ளவுட், கண்ட்ரோல் எஸ் டேட்டாஸ் சென்டர் நிறுவனத்தின் ஹைதராபாத் டிசி1 வளாகத்தில் தனது முதல் கிளவுட் மையத்தை தொடங்கியுள்ளது. இது இந்தியாவின் ஆற்றல் மிக்க மற்றும் ஏஐ-தயார்நிலை கொண்ட டிஜிட்டல் கட்டமைப்பு சூழலை மேலும் வலுப்படுத்தும் முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
இந்த பரிவர்த்தனையில், ஜேஎல்எல் நிறுவனம் பிரத்யேக ஆலோசகராக செயல்பட்டது. இதன் மூலம், பாரத்க்ளவுட் தனது டேட்டா சென்டர் சூழலை நிறுவியுள்ளது. இந்த கிளவுட் மையத்தை, கண்ட்ரோல் எஸ் டேட்டாசென்டர்ஸின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி, ஸ்ரீதர் பினப்புரெட்டி, அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார். ஏஐ பணிச்சுமைகள், தரவு உள்ளூர்மயமாக்கல் மற்றும் டிஜிட்டல் மாற்றம் பல்வேறு துறைகளில் வேகமெடுத்து வரும் நிலையில், பாதுகாப்பான, விரிவாக்கக்கூடிய மற்றும் சுயாட்சிமிக்க டிஜிட்டல் கட்டமைப்பிற்கான தேவைகள் அதிகரித்து வருவதை இந்த தொடக்கம் பிரதிபலிக்கிறது.
பாரத்க்ளவுட் நிறுவனத்தின் முதல் கிளவுட் மையம், கண்ட்ரோல் எஸ் டேட்டாசென்டர்ஸ்-ன் ஹைதராபாத் டிசி1 வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் பாரத்க்ளவுட் நிறுவனத்தின் கட்டமைப்பு விரிவாக்கப் பயணத்தின் தொடக்கமாகும். ஜேஎல்எல் நிறுவனத்தின் உலகளாவிய கட்டமைப்பு ஆலோசனை திறன்களின் ஆதரவுடன் கண்ட்ரோல் எஸ் டேட்டாசென்டர்ஸ் நிறுவனத்தின் ஏஐ-தயார்நிலை கொண்ட ரேட்டட்-4 டேட்டா சென்டர் சூழலில் அமைந்துள்ள இந்த முயற்சி, வலுவான மற்றும் உயர்திறன் கொண்ட டிஜிட்டல் கட்டமைப்பு சூழல்களுக்கான அதிகரித்து வரும் தேவையை வெளிப்படுத்துகிறது.
பாரத்க்ளவுட் நிறுவனத்தின் இந்த தொடக்கத்திற்கு வாழ்த்து தெரிவித்த CtrlS டேட்டாசென்டர்ஸின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி, ஸ்ரீதர் பினப்புரெட்டி கூறுகையில் “இந்தியாவின் ஏஐ மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி பயணத்திற்கு விரிவான அளவில் வலுவான, பாதுகாப்பான மற்றும் ஆற்றல் முக்க டிஜிட்டல் கட்டமைப்பு தேவைப்படுத்துகிறது. கண்ட்ரோல் எஸ் டேட்டாசென்டர்ஸ் நிறுவனமாக, நிறுவனங்கள், அரசு மற்றும் டிஜிட்டல் தளங்களுக்கு ஆதரவளிக்கும் நம்பகமான கட்டமைப்பு சூழல்களுடனும், ஆற்றல் மிக்க ஏஐ-தயார்நிலை டேட்டா சென்டர்களுடனும் இந்த மாற்றத்தை முன்னெடுக்க கவனம் செலுத்தி வருகிறோம். எங்கள் ஹைதராபாத் வளாகத்தில் தனது முதல் கிளவுட் மையத்தை தொடங்கியுள்ள பாரத்க்ளவுட் நிறுவனத்திற்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். அவர்களின் வளர்ச்சி பயணம் சிறக்க எங்கள் நல்வாழ்த்துகள்.” என்றார்.
பாரத்க்ள்வுட்-ன் இணை நிறுவனர்கள் ராகுல் தக்கல்லபள்ளி மற்றும் பத்மா ரெட்டி சமா கூறுகையில், “ ஸ்ரீதர் தொலைநோக்கு பார்வையும், கண்ட்ரோல் எஸ் டேட்டாசென்டர்ஸ் நிறுவனத்தின் உலகத் தரத்திலான டிஜிட்டல் கட்டமைப்பு திறனும், இந்தியாவின் மிக நம்பகமான ஏஐ-தயார்நிலை கொண்ட திறன் மிக்க கிளவுட் சூழலை உருவாக்கும் எங்கள் பயணத்தில் அவர்களை சிறந்த கூட்டாளராக மாற்றுகின்றன. மேலும், ஜேஎல்எல் நிறுவனத்தின் மூலோபாய நிபுணத்துவத்துடன் இணைந்த இந்த கூட்டாண்மை, தேசிய மற்றும் உலகளாவிய அளவில் எங்கள் கட்டமைப்பு தடத்தை விரிவுபடுத்த தேவையான அளவையும், வலிமையையும், நம்பிக்கையையும் வழங்குகிறது” என்றார்.
டேட்டாசென்டர் லீசிங், நிர்வாக இயக்குநர், ஜேஎல்எல், இந்தியா மற்றும் ஏபிஏசி தலைவர் ரச்சித் மோகன் கூறுகையில், “இந்த கூட்டாண்மை, உலகளாவிய அளவில் பாதுகாப்பான, விரிவான மற்றும் ஏஐ-தயார்நிலை கொண்ட கிளவுட் கட்டமைப்புகளுக்கான அதிகரித்து வரும் தேவையை எடுத்துக்காட்டுகிறது. எதிர்கால டிஜிட்டல் வளர்ச்சிக்காக வடிவமைக்கப்பட்ட அடுத்த தலைமுறை கிளவுட் சூழல்களை உருவாக்கும் பணியில் பாரத்க்ளவுட் நிறுவனத்திற்கு ஆதரவளிப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
