ஐஇடி இந்தியாவின் 10வது ஸ்காலர்ஷிப் பதிப்பு துவக்கம்

 


உலகின் மிகப்பெரிய தொழில்முறை பொறியியல் அமைப்புகளில் ஒன்றான இன்ஸ்டிட்யூஷன் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி இந்தியாவின் பட்டப்படிப்பு பொறியியல் மாணவர்களுக்கான முன்னணி தளங்களில் ஒன்றாக விளங்கும் ஐஇடி இந்தியா ஸ்காலர்ஷிப் விருதின் 10வது பதிப்பின் துவக்கத்தை அறிவித்துள்ளது.இந்த மைல்கல் பதிப்பை முன்னிட்டு, ஸ்காலர்ஷிப் திட்டத்தின் மொத்த பரிசுத் தொகை ₹10 லட்சத்திலிருந்து இரட்டிப்பு செய்து ₹20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. அவை 2026 ஜூன் 15 அன்று முடிவடையும்.

முந்தைய வெற்றியாளர்கள் மற்றும் இறுதிச்சுற்றுக்கு தேர்வானவர்கள், ஆப்பிள், கூகுள், நாசா, எம்ஐடி உள்ளிட்ட உலகளவில் புகழ்பெற்ற நிறுவனங்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் தொடர்ந்து வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். இந்த திட்டம் தொடர்ந்து வளர்த்து வரும் திறமையின் தரத்தையும் தரநிலையையும் பிரதிபலிக்கிறது.

10வது பதிப்பை குறித்து கருத்து தெரிவித்த ஐஇடி இந்தியா ஸ்காலர்ஷிப் விருது ஆலோசனைக் குழுவின் தலைவர், பேராசிரியர் அபிஜித் சக்ரவர்த்தி, “ஐஇடி இந்தியா ஸ்காலர்ஷிப் விருது மூலம், மாணவர்கள் நிஜ உலகச் சவால்களை ஆழமாக சிந்தித்து, பொறியியல் கோட்பாடுகளை புதுமையான மற்றும் நடைமுறை ரீதியில் பயன்படுத்த வேண்டும் என்பதையே நாங்கள் ஊக்குவிக்கிறோம். கடந்த ஆண்டுகளில், நாடு முழுவதும் இருந்து குறிப்பிடத்தக்க திறமைகள் வெளி வந்ததை நாம் கண்டுள்ளோம். இந்த 10வது பதிப்பு, அந்த பயணத்தை தொடர்வதில் ஒரு முக்கிய மைல்கல் ஆகும்” என்றார்.

இந்த ஸ்காலர்ஷிப், இந்தியா முழுவதும் உள்ள ஏஐசிடிஇ/யுஜிசி அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படிக்கும் எந்த ஆண்டிலும், எந்த துறையிலும் உள்ள முழுநேர பட்டப்படிப்பு பொறியியல் மாணவர்களுக்கு திறந்திருக்கும்.விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 60 சதவிதம் மொத்த மதிப்பெண்கள் அல்லது 6.0 சிஜிபிஏ பெற்றிருக்க வேண்டும், மேலும் அனைத்து கிரெடிட்களையும் முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு எதுவும் இல்லை, மேலும் விண்ணப்பக் கட்டணம்  இல்லை

தேர்வு செயல்முறை நான்கு கட்டங்களைக் கொண்டது: ஆன்லைன் விண்ணப்பம், தேசிய அளவிலான ஆன்லைன் தேர்வு, பிராந்திய நிலை தீர்வு விளக்க சுற்றுகள், மற்றும் பெங்களூருவில் நடைபெறும் தேசிய இறுதிச்சுற்று. இறுதிச்சுற்றுக்கு தேர்வாகும் மாணவர்கள், தொழில்துறை மற்றும் கல்வித் துறை நிபுணர்களின் முன்னிலையில், பொறியியல் சார்ந்த தங்களது தீர்வுகளை நேரடியாக வழங்குவர். நிதி ஆதரவுடன் கூடுதலாக, வெற்றியாளர்கள் தேசிய அளவிலான அங்கீகாரம், கோப்பைகள் சான்றிதழ்கள் மற்றும் ஒரு ஆண்டு ஐஇடி உறுப்பினர் சேர்க்கையைப் பெறுவார்கள். இது அவர்களை உலகளாவிய தொழில்முறை பொறியியல் வலையமைப்புடன் இணைக்கிறது. ஐஇடி இந்தியா ஸ்காலர்ஷிப் விருதின் 10வது பதிப்பிற்கான விண்ணப்பங்கள், 2026 ஜூன் 15க்கு முன் அதிகாரப்பூர்வ ஸ்காலர்ஷிப் போர்டல் மூலம் சமர்ப்பிக்கலாம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form